- Thursday
- November 13th, 2025
வடமாகாணம் போரினால் பாதிக்கப்பட்டதால் பல தொழிற்சாலைகளை மீளவும் அரம்பிக்க முடியாமல் உள்ளது.இதனால் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருப்பதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கிராமப் புற பெண்களை தொழில் முனைவோராக மேம்படுத்தும் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், கடந்த 30 வருடங்களுக்கு...
வலிகாமம் பகுதியில் கிணற்று நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் தயாரிக்கப்பட்ட "சுன்னாகம்: தகிக்கும் தண்ணீர்" ஆவணப்படம் வெளியிடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சுன்னாகம் கதிரமலை சிவன்கோயில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் சிறப்புரையை மருத்துவர் முரளி வல்லிபுரநாதன், மருத்துவர் பி.குமரேந்திரன் ஆகியோர் நிகழ்த்துவர்.
வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட ஆறு செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி இந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று முன்னர் அறிவிக்கப்பட்டு, மீண்டும்...
“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும்” என்று கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- எவரிடமும் பேசுவதற்கு நாம் தயாரில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தனித்தே போட்டியிடுவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை ஒரு நாளும் வெற்றியளிகாது. அதிகாரங்கள் பங்கிடப்பட்டாலும்...
சர்வதேசமும் உள்நாட்டு அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையில் அந்தச் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் நாம் பூச்சிய நிலைக்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். நேற்று வியாழக்கிழமை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் மூன்றாம் கட்டமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் 100 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டிருக்கின்ற இரண்டு இராணுவ முகாம்களையும் அகற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது. இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பொதுமக்களுடைய வாழ்விடமாகிய வலிகாமம் வடக்கின் 6400 ஏக்கர்...
ஜே.வி.பி. மீது அதிருப்தி கொண்டுள்ள தாம் தன்னைப் போன்ற அதிருப்தியாளர்களை இணைத்துப் புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாக அக்கட்சியின் முன்னாள் தலைவரான சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை ஊடகவிலாளர்களை சந்தித்த சோமவன்ச தாம் கட்சியிலிருந்து விலகுகிறார் எனத் தெரிவித்த போதே புதிய கட்சி குறித்தும் கருத்து வெளியிட்டார். ஜே.வி.பியின் தற்போதைய கொள்கைகள் மக்களுக்குப் பிடிக்கவில்லை...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் 60இற்கு மேற்பட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று தங்காலையில் கார்ல்டன் வீட்டில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தன, கெஹலிய ரம்புக்வெல, சாலிந்த திஸாநாயக்க, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ஸ, டீ.பி.ஏக்கநாயக்க, ஜி.எல்.பீரிஸ், மஹிந்தானந்த அலுத்கமகே, காமினி...
வலி. வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.சஜீவன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். கடந்த 25 வருடகாலமாக 6 ஆயிரத்து 300 ஏக்கர் நிலப்பரப்பு உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தது. அதில் கடந்த 11 ஆம் திகதி 590 ஏக்கர்...
மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனா். இச் சம்பவம் நேற்று(16) வியாழக்கிழமை முற்பகல் இடம் பெற்றுள்ளது. மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் நண்பா் வீட்டிற்கு வந்த வேளையில் தனது நண்பரோடு நீராடச் சென்றுள்ளார். அதன் பின் தனது நண்பன் நீராடி கொண்டிருக்கும் வேளையில் தீடிரென காணாமல்...
எதிர்காலத்தில் ஒருபோதும் குடும்பம் ஒன்றிடம் அதிகாரம் செல்லாத வகையில் அரசியலமைப்பில் திருத்தத்தை ஏற்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். டயிம்ஸ் பத்திரிகையாளர்களுடன் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் எந்தவொரு நாட்டுடனும் இலங்கைக்கு பகை இல்லை எனவும் அனைத்து நாடுகளுக்கும் நட்புக் கரம் நீட்டுவதாகவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன்...
யாழ். குடாநாட்டு நிலத்தடி நீர் மாசடைவு தொடர்பில் கடந்த 12 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தவறான ஓர் அணுகுமுறையாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்துத்...
அவுஸ்திரேலியாவினால் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கையர் உட்பட பல்நாட்டு அகதிகள் நவுறு தீவிலிருந்து கம்போடியாவில் குடியமர்த்துவதற்காக அங்கு அனுப்பப்படவுள்ளனர் என அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் கூறியது. கம்போடிய தலைநகரான 'நொம்பென்' இல் குடியேற்றப்படுவதற்காக முதல் தொகுதி அகதிகள் விசேட விமானத்தின் மூலமாக திங்கட்கிழமை அழைத்து செல்லப்படவுள்ளனர். இதற்கான கம்போடியாவும் அவுஸ்திரேலியாவும் இருபக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. கம்போடியாவுக்கு அனுப்பப்படவுள்ளவர்களில்...
வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து பெறுமதியான பொருட்களை சூறையாட முயன்ற சந்தேகநபர்களைத் தடுக்க முற்பட்ட தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிறிமோகன் மீது தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறப்படும் 20பேரை நேற்று புதன்கிழமை (15), காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உள்ள...
காங்கேசன்துறை வீதி, தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்துக்கு அருகில் புதன்கிழமை (15) இரவு முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதில் மூவர் படுகாயமடைந்த நிலையில், தெல்லிப்பளை ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் மதுபோதையில் இருந்ததுடன், ஓட்டுநர் போதையில் நிலைதடுமாறியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது என்று தெல்லிப்பளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்....
வங்கி வட்டி வீதங்களைத் தீர்மானிப்பதில் தாக்கம் செலுத்தும் கொள்கை வட்டி வீதத்தை தொடர்ந்தும் வீழ்ச்சியுறச் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பிரகாரம் மத்திய வங்கியுடன் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களின்போது தாக்கம் செலுத்தும் நிலையான வைப்புகள் மற்றும் கடன் வட்டி அலகுகள் 50 வீதமாகக் குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான தனது...
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துறை விநாயகமூர்த்தி பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அவரது வாகனம் மாரவில - கோடவேல சந்தியில் வைத்து வேன் ஒன்றுடன் மோதியதில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது இரு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாரவில் பொலிஸின் மோட்டார் வாகனப் பிரிவினர்...
நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இன்று (16) மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் காங்கேசன்துறை பொத்துவில் ஊடாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு முதலான கடலோரங்களில் காலையில் மழைக்கான சாத்தியம் நிலவும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில்...
இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னர் தமிழ்ப் பெண்கள் மற்றும் மகளிர் மீது அவர்களின் பிரதேசங்களை இராணுவ மயப்படுத்தும் சாக்கில் பாலியல் துன்புறுத்தல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை குறித்து அறிக்கையிடப்பட்டு வருகின்றது. - இவ்வாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு தாம் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்திருக்கிறார். முரண்பாடுகள் தொடர்பான பாலியல்...
இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்ஸும் இலங்கை மின்சார சபையின் பிக்கப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நேற்றிரவு 7.30 மணிக்கு மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில் தச்சரம்பனில் இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கை மின்சார சபையின் ஒப்பந்த பணியாளர்களான மட்டுவில் தெற்கைச் சேர்ந்த நவரட்ணம் ஜீவராஜ் (வயது 26),...
Loading posts...
All posts loaded
No more posts
