- Saturday
- July 5th, 2025

வடக்குக்கு 3 நாள் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சனிக்கிழமை (28) நெடுந்தீவு மற்றும் நயினாதீவு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்தார். நெடுந்தீவுக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு 43 கர்ப்பிணி தாய்மாருக்கு உணவு பொதிகளை வழங்கினார்....

தமது சொந்த இடங்களை விடுவிக்க கோரும் தமிழ் மக்களின் கோரிக்கை நியாமானதே என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வடக்குக்கு 3 நாள் விஜயம் மேற்கொண்ட பிரதமர், காங்கேசன்துறையிலுள்ள கடற்படையின் தலைமையகத்துக்கு சனிக்கிழமை(08) விஜயம் மேற்கொண்டு கடற்படையினரைச் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, கடற்படையினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினர். அவர் மேலும் கூறுகையில், தமது...

புத்தூர் நவக்கிரியைச் சேர்ந்த வாழைக்குலை வியாபாரி மீது மூன்று பேரைக் கொண்ட கும்பல் மேற்கொண்ட வாள்வெட்டில் படுகாயமடைந்த அவ்வியாபாரி அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (29) தெரிவித்தனர். சனிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மருதயன் புஸ்பராசா (வயது 50) என்பவரே படுகாயமடைந்தார். வாழைக்குலை கொள்வனவு செய்பவர்கள் போன்று, இவரது வீட்டுக்கு...

இலங்கை இராணுவத்துக்கு சேறுபூசும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்கு குரல் கொடுத்துகொண்டிருந்த 8 பேரை கைது செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் வடக்கையைச்சேர்ந்த ஐவரும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த மூவரும் அடங்குவதாக தெரிவித்த பொரளை பொலிஸார் திரைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். நாரஹேன்பிட்டியவிலுள்ள வீடொன்றில் வைத்து குரல் கொடுத்துகொண்டிருந்த போதே சனிக்கிழமை(28) அவர்களை கைது...

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டாக்காவுக்கு சென்ற மிஹின் எயார் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.30க்கு புறப்படவிருந்த விமானம், காலை 9.30க்கே புறப்பட்டது என்று பயணிகள் தெரிவிக்கின்றனர். விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக. அந்த விமானம் 10.45க்கு...

இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வைத்திய துறையில் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களின் பற்றாக்குறை நிலவுவதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அராசங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தில் மாத்திரம் கிட்டத்தட்ட மூன்றிலொரு வைத்தியசாலைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறை மோசமான நிலையில் இருப்பதாக வட மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டொக்டர் பத்மநாதன்...

வடபகுதியில் நிகழும் அனைத்து விடயங்கள் தொடர்பாக ஆராயிம் நோக்கில் விசேட பிரதிநிதி ஒருவரை பிரதமர் அலுவலகத்தால் நியமிக்கப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடபகுதிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சி பகுதிக்கான விஜயம் ஒன்றினையும் மேற்கொண்டுள்ளார்.

நாட்டில் சட்டம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பொலிஸில் இணைவதற்கு முன்வர வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற சிவில் பிரதிநிதிகள் வர்த்தக சங்கத்தினர், வணிகர் கழக உறுப்பனர்களை சந்தித்து கலந்துரையாடினார். அதன்போதே அவர்...

கிடைக்கப்பெற்றுள்ள சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்தி எமது மக்களை சுய பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்வதற்கு கட்சி பேதங்களுக்கப்பால் அனைவரது ஒன்றிணைந்த ஒத்துழைப்பும் ஒத்தாசையும் அவசியமானதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின்போதே செயலாளர் நாயகம்...

காங்கேசன்துறையில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மஹிந்த அமைத்த சொகுசு மாளிகையை பார்த்து வாயை பிளந்து நின்ற பிரதமர் மாளிகையை சுற்றிச் சுற்றிப் பார்த்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றது. வடக்கிற்கு 3 நாள் விஜயமாக வருகை தந்திருக்கும் பிரதமர் நேற்றய தினம் காங்கேசன்துறை மற்றும் பலாலி பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது காங்கேசன்துறை பகுதியில் மஹிந்த...

கிராமியப் பொருளாதாரத்தைப் பாதுகாத்து பலப்படுத்துவதற்கு பெண்களின் பங்கு மிக முக்கியமானதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈ.பி.டி.பியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த மாதர் சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் சமூகத்தில் மாற்றங்களையும் ஏற்றங்களையும் ஏற்படுத்தக்கூடிய...

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை விசேட மாவட்டங்களாக கருதி அப்பகுதி மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு நடவடிக்கை எடுக்க கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். யாழ். கச்சேரியில் இடம்பெறும் வட மாகாண அதிபர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். மீள்குடியேற்ற அமைச்சு மற்றும்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் (வயது 43) இறுதி சடங்கு எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறும். அவருடைய பூதவுடல், எத்துகல்பிட்டியவில் உள்ள அன்னாரது வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. தனது நண்பரொருவரினால் கடந்த 26ஆம் திகதி, கோடாரி தாக்குதலுக்கு இலக்கான...

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் ஆர்.இராதாகிருஷ்ணன் யாழ்.இந்துக் கல்லூரிக்கு பயணம் மேற்கொண்டு எதிர்கால அபிவிருத்தி குறித்து கேட்டறிந்து கொண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அமைச்சரைக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள நிலைமைகள் குறித்து விளக்கினார். யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் அமைச்சரை வரவேற்றனர். அத்துடன் கல்லூரியில்...

2016ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு விழா யாழ்.மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ரணில் தனது பயணத்தின் ஒரு கட்டமாக யாழ்.மாவட்டத்திற்கு சென்றிருந்த போது யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், தேசியத்தில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் 2016ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு...

இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்து வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை மாலை நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன் நல்லை ஆதீனத்துக்குச் சென்று நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்துப் பேச்சுநடத்தினார். இந்தச் சந்திப்பில் பிரதமருடன் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் மகளிர்...

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவம் பொருளாதார ரீதியில் பயன்படுத்தி வருவதாக கூறப்படுவது தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர், யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்த...

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர் குழுவினருக்கும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட...

வட மாகாணத்தில் உள்ள பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் நலன்களைக் கவனிப்பதற்கென தலைமையகம் ஒன்றை அமைப்பதற்கு யாழ்ப்பாணத்திற்கு முதற் தடவையாக நேற்று (27) விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட முக்கிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திற்கு 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்குச் சென்று பல்வேறு நிகழ்வுகளில்...

கோடரி தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று காலை உயிரிழந்துள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த பிரியந்த சிறிசேனவுக்கு உயிரிழக்கும் போது வயது 40 என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரியந்த சிறிசேன நேற்று முன்தினம் பொலனறுவையில் வைத்து கோடரி தாக்குதலுக்கு இலக்கானார். தாக்குதலினால் பிரியந்த சிறிசேனவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. பொலனறுவை...

All posts loaded
No more posts