Ad Widget

ஜின்னா புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் கோரல்

க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தரம் தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்து ஜின்னா புலமைபரிசில்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளது.

க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தரம் கற்க சிறந்த பெறுபேறுகளுடன் தெரிவாகி- பொருளாதார பிரச்சினையிலுள்ளவ மாணவர்களிடமிருந்தே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப்புலமைபரிசிலின் கீழ் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 24.000 ரூபா நிதி வழங்கப்படும்.கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் பாகிஸ்தான் அரசு இலங்கை மாணவர்களுக்கு இப்புலமைபரிசிலை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்புலமைபரிசில் திட்டத்தின் கீழ் இதுவரை 1152 இலங்கை மாணவர்கள் இதுவரை பயனடைந்துள்ளனர். அத்துடன் கடந்த 10 ஆண்டுகளில் 39 மில்லியன் ரூபா மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்களை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கலாம். விண்ணப்பப்படிவத்தை www.pakistanhc.lk. என்ற இணையதள முகவரியினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

Related Posts