- Thursday
- July 17th, 2025

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு பொருத்தமானவர்களை மட்டுமே தெரிவு செய்ய வேண்டியது நாட்டில் உள்ள எல்லா வாக்காளர்களினதும் மிகப்பெரும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் நற்பெயரை மதித்து பாதுகாக்கின்ற நாட்டுக்காக பணி செய்யக்கூடிய மிகப் பொருத்தமான வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் தெரிவுசெய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மக்கள் தங்களது...

சுழிபுரம் குடாக்கனை பகுதியில் கசிப்பு காய்ச்சுதல் மற்றும் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக 10 ஆவது தடவையாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான், கறுப்பையா ஜீவராணி வெள்ளிக்கிழமை (07) உத்தரவிட்டார். கசிப்பு காய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இவரை, வியாழக்கிழமை (06) வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்....

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செப்ரெம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள சர்வதேச விசாரணை அறிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:- "நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வே எமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இருந்தது. வேறு எந்தவித...

"இலங்கையின் தற்போதைய அரசியல் சாசனம் நீக்கப்படவேண்டும். புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தப் புதிய அரசியல் சாசனத்தின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிட்டவேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே...

மாவிட்டபுரம் ஶ்ரீ கந்தசுவாமி கோவில் ஆடிக் கார்த்திகை பெருவிழா இன்று (08) சனிக்கிழமை அதிகாலை 05 மணிக்கு நடைபெறவுள்ளது. உசத் கால பூசையுடன் ஆரம்பமாகி இரவு 09 மணிவரை இப்பூசை நிகழ்வு நடைபெறவுள்ளது. அவ்வகையில், காலை 07 மணிக்கு ஸ்நபனாபிஷேகமும் விசேட மேளக்கச்சேரியும் நடைபெற்று, 08 மணிக்கு காலை சந்திப்பூசை விசேட மேளக் கச்சேரியும் 08.30...

அரசின் பொதுச் சேவை நிறுவனங்களிலுள்ள வெற்றிடங்களை நிரப்பும் முகமாக 7500 பட்டதாரிகளை உள்வாங்கி வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அரசு தீர்மானித்துள்ளது. ஏற்கனவே தகுந்த அமைச்சரவை அமைச்சர்களால் இது தொடர்பில் எடுக்கபட்ட முடிவுகளை தொடர்ந்து எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் இந்த உள்வாங்கல்கள் இடம்பெறவுள்ளது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினை வழங்குவது தொடர்பில் வௌியிட்ட அறிக்கையில்...

ஐக்கிய தேசிய கட்சியினால் அரச சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்படுவதாக கூறி பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் செல்வந்தர்கள் வரி அறவிடுவதில் இருந்து பாதுகாக்கப்பட்டனர். உயர் வருமானம் பெறக்...

தேசிய கட்சிகளுக்கு வாக்களித்து மாற்றுத்தலைவர்களை உருவாக்காமல், தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும் என முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடைபெறப்போகும் தேர்தல் தமிழ் மக்களுக்கு முக்கியமான தேர்தலாகும். எமது உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு மீண்டும் ஒருவாய்ப்புக் கிடைத்துள்ளது. ...

'நாய்க்கு கல்லெறிந்தால் அது காலைத் தூக்குவது போல, எதைச் செய்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதற்குள் இனவாதத்தை கொண்டுவருகின்றார்' என எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து...

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பாடசாலை அதிபர் வழங்காததால், மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வவுனியா, பண்டாரிக்குளம், விபுலானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த 19 வயது மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது தற்கொலைக்கான காரணத்தை கடிதமொன்றில் எழுதிவைத்துவிட்டே அம்மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என...

அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாவச்சேரி நீதிமன்ற அழைப்பாணைக்கு அமைவாக நேற்று (06-08-2015) சாவச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரானார். 31-07-215 அன்று சாவகச்சேரி பகுதிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு 25 பேர் கொண்ட குழு சென்ற வேளை அவர்களில் சிலரை பொலிஸார்...

சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலுவலக ரயிலில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த சஞ்சீவ ரணசிங்க என்பவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ரயில் திணைக்கள ஊழியர் என்றும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று...

யாழ்.மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் 90 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகத்தின் உத்தியோகப்பூர்வ தகல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் திணைக்கள கண்காணிப்பாளர்கள் மற்றும் ஏனைய கண்காணிப்பு அமைப்பாளர்களின் காண்காணிப்புடன் எந்தவிதமான குழப்பங்களும் இல்லாமல் அமைதியான முறையில் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளது என்றும் அலுவலகத் தகவல்கள்...

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மீனவர்களின் கரைவலை மற்றும் இதர வலைகளை இந்திய மீனவர்களும் தென்னிலங்கை மீனவர்களும் அறுத்தெறிவதாகவும், கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் 8 மீனவர்களுடைய சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளதாக கட்டைக்காடு மீனவர் சங்கத் தலைவர் அருளப்பு யோசப் எட்வேர்ட் தெரிவித்தார். கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள்...

இந்து மக்களின் வரலாற்றுப் மகிமை வாய்ந்த கீரிமலைக் கேணி அழிவடையும் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனை உடனடியாக திருத்தி அதனுடைய வரலாற்றையும் மற்றும் இந்து கலாசார மரபுகளையும் காப்பாற்ற வேண்டிய அவசியமும் தேவையும் தற்போது எழுந்துள்ளது. சுனாமி அனர்த்தத்தினால் கீரிமலைக் கேணியும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அந்த வேளையில் கேணியின் சுவர்கள் உடைந்து சேதமடைந்ததுடன் கேணியின்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு திடீரெனப் புகுந்து கலகம் விளைவிக்க நினைத்த வேறு கட்சியின் உறுப்பினர்களை மக்கள் விரட்டியடித்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்றைய தினம் வேட்பாளர் சித்தார்த்தனுக்கு ஆதரவாக புங்குடுதீவில் பிரச்சாரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்கே வந்த...

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தால் உசன் கிராமத்தில் நடத்தப்பட்டு வரும் பொது நூலகத்தை நவீன முறையில் தரமுயர்த்தும் நோக்கில் இன்றைய தினம் உசன் கிராம மக்களுக்கு இலவச Internet WiFi சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலகுவாக புத்தகங்களை வாசிக்கக் கூடியதாக “I book” சலுகை வழங்கும் முகமாகவும் சிறுவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்கக்...

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரில் நீண்ட காலமாக நிலவி வரும் நிரந்திர அதிபர் விடயத்தை வலியுறுத்தி யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 7 .30 மணியளவில் நடைபெற்றது. இதன் போது போராட்டத்தில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தி தங்களிற்கான நிரந்திர அதிபர் விடயத்தை வலியுறுத்தினர். ஆனால்...

மன்னார் – மாந்தை மேற்கு – இலுப்பக்கடவை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட – கோவில்குளம் கிரமப் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சந்தேகநபர் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரின் வாக்குமூலத்தின் பிரகாரம், அப்பெண்ணின் கணவன் வெளிநாட்டுக்குச் சென்றதும் , மேற்படி இருவரும் கள்ளத்தொடர்பை பேணி வந்துள்ளதுடன் சுமார் 3 வருடங்களுக்கு முன்னர்...

பிரிட்டனின் சனல் 4 ஊடகத்தின் கெலம் மக்ரே மற்றுமொரு போலி அறிக்கையை ஜெனீவாவில் சமர்ப்பித்துள்ளதாக, சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 30 ஆண்டுகளாக நீடித்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அரச படையினர் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொலை செய்துள்ளதாக போலியான அறிக்கை ஒன்றை மக்ரே சமர்ப்பித்துள்ளார். கடந்த 5ம் திகதி இந்த...

All posts loaded
No more posts