- Saturday
- July 19th, 2025

கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயிருந்த தனது மகளை நீதிமன்றத்தில் கொண்டு வந்து காட்டுமாறு கோரி, தாயார் ஒருவர் யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணைகளின்போது, காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த 17 வருடம் 2 மாதம் வயதுடைய பெண் கழுத்தில் தாலியுடனும் 6 மாதக் கர்ப்பத்துடனும் தனது...

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இந்த நாட்டில் பிரிவினையை யாரும் கோரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடந்து தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச சமூகத்தினால் தமிழ் மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பாக தமிழ் தேசிய...

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருப்பதன் ஊடாக, கூட்டமைப்பிற்கு மக்கள் ஆதரவு குறையுமே தவிர அதிகரிக்காது என, பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி.அரியநேத்திரன் மேலும் கூறியதாவது, முரளிதரன் மக்கள் செல்வாக்கு இல்லாதவர். தமிழ் மக்கள் அவரை கண்டு...

மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையில் 2006ம் ஆண்டு ராடா நிறுவனத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 8000 இலட்சம் ரூபா பணம் கொடுத்ததாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் பகிரங்க உரையாடல் மேற்கொள்ள வருமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார். தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்தமைக்கான அனைத்து தகவல்களும் வௌிவந்துள்ளதாகவும் விரைவில் இது...

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது என்று நீதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான விஜேதாஸ ராஜபக்ஷ பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே இறுதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி எனவும், அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளமையினால் அரசியல் கைதி எவரும் சிறைகளில் இல்லை எனவும் அவர்...

தேர்தலுக்கு இன்னும் ஒருகிழமை இருக்கும் நிலையில் பல பொய்கள், பலவிதமான சதிகள், எங்களுடைய வெற்றிய மட்டுபடுதுவதற்கு முன்னெடுக்கப்படும் அதனை முறியடிப்பதற்கும் எங்களுடைய மக்களை சரியான ஒரு திசையில் வைத்திருபத்தற்கு புலம்பெயர்ந்த மக்களும் ஊடகங்களும் கணிசனமான பங்களிப்பை எமக்கு செய்ய வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான - கசியவிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை என்ற செய்தி உண்மையானது என்று சுதந்திர ஊடகவியலாளர் கெலும் மைக்ரே தெரிவித்துள்ளார். அந்தச் செய்தி திரிபுபடுத்தப்பட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரனினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை கெலும் மைக்ரே மறுத்துள்ளார். 'இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தின்...

ராஜபக்ஷவின் கொடூர ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என ஐ.நாவுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவும், இலங்கையில் 60 வருடங்களுக்கு மேலாகத் தொடரும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு 2016ஆம் ஆண்டில் கிடைக்கவேண்டும் என அரசையும் சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்தவும் ஓகஸ்ட் 17...

வேக எல்லைகள் குறிக்கப்பட்ட பாதைகளில் கட்டுப்பாட்டை மீறி அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக இம்மாதம் 11ம் திகதி முதல் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு கடந்த காலங்களில் அபராதம் விதிக்கப்படாமைக்கான காரணம், 298/2005 என்ற வழக்கின் படி, அதிகமான பாதைகளில் வேக எல்லைகள் சரியான முறையில்...

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியே அவர் குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார். ஜெனீவாவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில், போர்க்குற்றங்கள் குறித்த...

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த வாரம் 3 மற்றும் 5ம், 6ம் திகதிகளில் இடம்பெற்றது. இந்தநிலையில் தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 11ம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இம்முறை தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இரண்டு கட்டமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்படி 3ம் திகதி...

தொழில் முயற்சிகளில் ஈடுபடவே நாங்கள் விரும்புகின்றோம். பாரிய செயற்றிட்டங்களை வகுத்து தொழிற் பேட்டைகளை உருவாக்கி எமது பாரம்பரியத்தையும் விவசாய பின்புலத்தையும் மாற்றியமைக்க நாங்கள் விரும்பவில்லை. மேலும் சுற்றுலாத்துறை போன்ற, எமது பாரம்பரியம் கலாசாரம், இயற்கை வளங்கள், சுற்றாடல் போன்றவற்றுக்கு அமைவாக விருத்தி செய்யப்பட வேண்டும் என்பது எமது விருப்பம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்....

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வளலாய் பகுதியின் கடற்கரையோரமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த பாரிய மண் அணை, கனரக இயந்திரங்களின் உதவியுடன் அகற்றப்படுகின்றது. குறித்த பகுதி, கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் படிப்படியாக மீள்குடியேறி வருகின்றனர். யுத்த காலத்தின் போது, இராணுவத்தினரின் பாதுகாப்புக்கு இரண்டு கிலோமீற்றர்...

இணையம் ஊடாக செய்யப்படும் தேர்தல் பரப்புரைகளை தடுக்க முடியாது என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் திகதியுடன் அனைத்து தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டியது அவசியமானது. எனினும் இணைய சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரப்புரைகளை தடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முகநூல்...

கல்விப்பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை நடைபெற்றுகொண்டிருக்கின்ற பரீட்சை மத்தியநிலையத்துக்குள் அலைபேசியை எடுத்துச்சென்ற மாணவர்கள் இருவருக்கு பரீட்சை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள பாடசாலையொன்றில் பரீட்சை மத்தியநிலையமாக தொழிற்படும் மத்தியநிலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருவரே இவ்வாறு அலைபேசியை எடுத்துச்சென்றுள்ளனர். அவ்விருவர் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி பரீட்சைகள் சட்டத்தின்...

கொழும்பு புளூமெண்டல் பகுதியில் கடந்த மாதம் 31ஆம் திகதி நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க கலந்து கொண்ட தேர்தல் பிரசார பேரணி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தப்பி வந்த சந்தேக நபர்கள் நால்வரும் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட வடமராட்சி...

அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் கம்பன் விழா நேற்று வெள்ளிக்கிழமை (07.08.2015) மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது. நேற்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று தினங்கள் யாழில் தொடர்ச்சியாகக் குறித்த விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன . நேற்று மாலை கே.ஆர். சுந்தரமூர்த்தி குழுவினரின் மங்கள இசையுடன் விழா...

அரசியல் வாதிகள் காலத்தின் தேவைகேற்ப தங்களை மாற்றி கொள்ளவேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதாவது நீண்ட காலமாக அரசியல் வாதிகள் வெறுமனே எதிர் கட்சியையோ அல்லது கடந்த கால அரசாங்கத்தையோ குறை கூறுவதில் மட்டுமே தமது நேரத்தை செலவிடுகின்றனர்....

பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாத்த என்னை கொலையாளி என்று சித்தரிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் பல உயிர்களை கொன்று குவித்த விடுதலைப் புலிகளின் தலைவரை மிஸ்டர் பிரபாகரன் என்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகல் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் கடந்த காலத்தில் பயங்கரவாதம் காணப்பட்ட...

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் அதேவேளை, பிள்ளைகள் பிடிப்பட்டால் அவர்களுடைய பெற்றோர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வெள்ளிக்கிழமை (07) உத்தரவிட்டார். கஞ்சா வழக்கு தொடர்பிலான விசாரணை வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றபோதே நீதிபதி இவ்விடயத்தை தெளிவுபடுத்தினார். 'போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும்...

All posts loaded
No more posts