கைதடியில் விபத்து இளைஞர் பலி! மற்றொருவர் படுகாயம்!!

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதியதில் அதனை செலுத்தி வந்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். கைதடிச் சந்திக்கு அண்மையாக இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் கைதடியை சேர்ந்தவரான சிவலிங்கம் தீபன் (வயது 31) என்பவர் மரணமானார். ஜெகதீஸ்வரன் (வயது 31) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...

யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் கையெழுத்துப் போராட்டம்

இன்று செவ்வாய்க்கிழமை 15ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தில் சர்வதேச விசாரணையை வலியூறுத்தியூம் உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்தும் கையழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் பெருமளவான மாணவர்கள் ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு கையொப்பங்களை இட்டனர். மேலும் படங்களுக்கு..
Ad Widget

குடிநீர் இல்லாமல் 2,000 பாடசாலைகள்

இலங்கை முழுவதும் சுமார் 2,000 பாடசாலைகள் சுத்தமான குடிநீர் இல்லாத நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், நேற்று திங்கட்கிழமை(14) தெரிவித்துள்ளார். அத்துடன், எந்தவிதமான மலசலகூட வசதிகள் இன்றி சுமார் 500 பாடசாலைகள் உள்ளதுடன், ஒரு மலசலகூடத்துடன் மாத்திரம் 2,000 பாடசாலைகள் உள்ளதாகவும் அவர் கூறினார். கணினி, ஆய்வுக்கூடம், நூலகம் இல்லதாக நிலையில்...

U-turn இல்லை

கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் அனுபவங்களையும் 'யு டேர்ண்'களையும் வைத்து, தம்மை எடைபோட வேண்டாமென, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமவீர கோரிக்கை விடுத்துள்ளார். ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்வாண்டுமார்ச் மாதத்தில் இடம்பெற்ற 28ஆவது மனித...

சர்வதேச விசாரணையை வலியூறுத்தி நடைபெற்ற நடைபயணத்தின் இறுதி நிகழ்வு

சர்வதேச விசாரணையை வலியூறுத்தி நடைபெற்ற நடைபயணத்தின் இறுதி நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கோப்பாயில் இராணுவம் மீண்டும் காணி அபகரிப்பு முயற்சி! – மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தம்

கோப்பாய் பிர­தேச செயலர் பிரிவில் இரா­ணுவத் தேவைக்­காக சுவீகரிப்பதற்கு, ஒன்­றரை ஏக்கர் காணியை அள­விடும் பணி மக்கள் எதிர்ப்புத் தெரி­வித்­த­மையால் கைவி­டப்­பட்­டுள்­ளது. கோப்பாய் பிர­தேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கோப்பாய் மத்தி கிராம அலு­வலர் பிரிவின் கீழ் கோப்­பாயில் இருந்து கைதடி செல்லும் வீதியில் சுமார் ஒரு ஏக்கர் காணியில் இரா­ணுவ முகாம் அமைந்­துள்­ளது....

வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம் உதயம்

வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம், 13ஆம் திகதி உதயமாகியுள்ளது. யாழ்ப்பாண ஊடக மையத்தில் ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனச் செயலாளர் தர்மசிறி லங்காபேலி தலைமையில் இடம்பெற்ற செயலமர்வின் போதே இது உருவாக்கப்பட்டது. வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்ட ஊடக அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். தகவல்...

நல்லூர் திருவிழா : யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 14.6 மில்லியன் ரூபாய் வருமானம்

நல்லூர் உற்சவ காலத்தில் கடைகளுக்கான இடங்கள் வாடகைக்கு விடப்பட்டதின் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 14.6 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். மாநகர சபை கணக்காளர் தெரிவித்தார். நல்லூர் உற்சவ காலத்தின் போது, ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகளில் கடைகள் அமைப்பதற்கான இடம், யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஏலத்தில் வாடகைக்கு விடப்பட்டது. இதில் அதிகூடிய ஏலம்...

நடை பணயப் போராட்டம் நிறைவு – வடக்கு முதல்வருக்கு மகஜர்

ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்க மாட்டோம், சர்வதேச மத்தியஸ்தம் ஊடாக அரசியற் தீர்வு வேண்டும், மனித உரிமைப் பேரவை மூலம் சர்வதேச நீதி வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நான்கு நாற்களாக இடம்பெற்று வந்த நடை பணயப் போராட்டம் நேற்று ஐந்தாவது நாளில் நிறைவடைந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

SLASSCOM இன் தலைவராக மனோ சேகரம் தெரிவு

99X Technology,d இணை ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோ சேகரம், SLASSCOM,d; 2015/16 பருவ காலத்துக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற SLASSCOM வருடாந்த பொது ஒன்றுகூடலின் போது இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. தகவல் தொழில்நுட்பம்/மென்பொருள் முகாமைத்துவம் ஆகியவற்றில் சேகரம் சுமார் 25 வருட கால சர்வதேச அனுபவத்தைக் கொண்டுள்ளார். அத்துடன், இவர்...

வடக்கு விவசாய அமைச்சால் விவசாயப் போதனாசிரியர்கள் நியமனம்

வடமாகாண விவசாய அமைச்சால் 23 விவசாயப் போதனாசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை (14.09.2015) விவசாய அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு நியமனக்கடிதங்களை வழங்கி வைத்துள்ளார். வடமாகாண விவசாயத் திணைக்களத்தில் விவசாயப் போதனாசிரியர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 161. எனினும் 85 பேரே...

புதிய இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு சாத்தியம்!

இலங்கையில் அரசியல் தீர்வு உட்பட முற்போக்கான சீர்த்திருத்தங்கள் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மூலம் சாத்தியப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான அரசியல் தீர்வு புதிய அரசியல் யாப்புத் திருத்தத்தின் மூலம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் குற்றங்களுக்கு தண்டனை அளிக்கவென உள்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு...

அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐநா விசாரணை அறிக்கை: மனித உரிமை ஆணையர் அறிவிப்பு

இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார். இன்று ஜெனீவாவில் தொடங்கிய மனித உரிமைப் பேரவையின் தொடக்கக் கூட்டத்தில் ஐநா மனித உரிமை ஆணையர் செயித் ராத் அல் உசைன் அவ்வாறு தெரிவித்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் நீண்ட உள்நாட்டுப் போரின் கடைசி மாதங்களில்...

வெள்ளைக்கொடி விவகாரம் : மின்னல் நிகழ்ச்சியில் கஜேந்திரகுமார்!

வெள்ளைக்கொடி விவாகாரம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தேர்தல் கால இறுதி நாட்களிலும் அதன் பின்னரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு பதில் கொடுக்கும் வகையில் கொழும்பிருந்து இயங்கும் சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்வில் கலந்துகொண்டு உண்மைகளைப் போட்டுடைத்தார் கஜேந்திரகுமார் அவர்கள்.

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் அச்சுறுத்தல்

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போரளிகள் மீண்டும் புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்காக அழைக்கப்படுவது விசனத்தை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யுத்தத்தின் பின் ஸ்ரீலங்கா அரசிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் தமிழீழ...

நடைபயணம் : சற்றுமுன்னர் செம்மணியினை வந்தடைந்து

சர்வதேச விசாரணை பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தும் நடை பயணம் கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சியில் பழைய மாவட்ட செயலகம் முன்பு ஏ9 வீதியில் ஆரம்பமாகியது தொடர்ந்து இன்று 4 ஆம் நாள் யாழ்பாணத்தினை வந்தடைந்துள்ளது. சற்றுமுன்னர் செம்மணியினை வந்தடைந்து மக்கள் படுகொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் தொடர்கிறது. இன்று பிற்பகல்...

இலங்கையில் பெரசிடமோல் விற்பனை எண்ணிக்கைக்கு இணையாக பாலியல் ஊக்கி மாத்திரை விற்பனை!!

பாலியல் ஊக்கி வில்லைகள் இலங்கையில் அதிகளவில் விற்பனையாவதாக தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவிக்கின்றது. வருடாந்தம் 20 மில்லியனுக்கும் அதிகமான வில்லைகள் இங்கு விற்பனையாவதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவ ஆலோசனையின்றி , பெரசிடமோல் விற்பனை எண்ணிக்கைக்கு இணையாக இவை விற்பனையாவதாகவும் அச்சபையின் தலைவர் தெரிவிக்கின்றார். நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இம்மாத்திரை உள்ளெடுக்கும் போது மரணம் சம்பவிக்கும்...

யாழ் இந்துக்கல்லூரி 125ம் ஆண்டு இறுதி விழாவை பழையமாணவர் சங்கம் புறக்கணித்தது

யாழ்ப்பாணத்தின் மிகப்பிரபலமான கல்லூரியான யாழ் இந்துக்கல்லூரி 1890 இல் ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடம்(2015) தனது 125 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் யாழ் இந்துக்கல்லூரி 125ம் ஆண்டு இறுதி விழாவை பழைய மாணவர் சங்கம் முற்றாக புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது.  இது தொடர்பில் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இணைப்பு   தொடர்பான செய்தி யாழ் இந்துக்கல்லூரியின் 125 வருட நிறைவும்...

அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து புகைப்பரிசோதனை செய்யப்பட வேண்டும்

மோட்டார் வாகனங்களுக்குரிய அனைத்து ஆவணங்களும் சமர்ப்பித்தால் மட்டுமே புகைப்பரிசோதனை செய்யப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட் டம் கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, புகைப்பரி சோதனை என்றால் என்ன என்ற தெளிவு பலரிடம் இல்லை. புகைப்பரி சோதனை செய்துகொள்ள வரும்...

யாழில் சர்வதேச திரைப்பட விழா

யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா நாளை செவ்வாய்க்கிழமை மாலை 05.30க்கு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. அத்துடன், இந்த நிகழ்வு நாளை மறுதினம் 16ம் திகதி முதல் 21ம் திகதி வரை தொடர்ந்தும் நடைபெற இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்தும் சுமார் 50 வரையிலான கதைப் படங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts