- Sunday
- July 20th, 2025

"தமிழர்களாகிய நாம் நமது தேசியத்தைக் கட்டிக்காக்கவேண்டும் என்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தமிழனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமது வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தி வாக்களிப்பதன் மூலமே கட்டிக்காக்க முடியும்.'' - இவ்வாறு வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு கிராமங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டபோது அவரின் சிநேகிதிக்கு தாஜூதீனின் மரண ஓலத்தை தொலைபேசி மூலம் கொலைகாரர்கள் கேட்க வைத்தனர். அத்துடன் இந்தக் கொலைக்காக 7 வெள்ளை வான்கள் பயன்படுத்தப்பட்டன என விசாரணைகள் மூலம் தெரிய வந்திருப்பதாக பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்...

2005ம் ஆண்டு தமிழர்கள் வாக்களிக்காதிருக்க தமிழீழ விடுதலைப் புலிகள் பணம் கோரியதாகவும் எனினும் தான் வழங்கவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நேற்று டி.வி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு முறை விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். முதலில்...

ஜனவரி 9ம் திகதி அதிகாலை தான் வௌியேறியது மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு அல்ல என்றாலும் மக்களின் வேண்டுகோளை புறக்கணிக்க முடியாத நிலையில் மீண்டும் அரசியலுக்கு பிரவேசித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தன் மீது மக்கள் அன்று வைத்திருந்த அன்பு இன்னும் அதேபோன்று இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ரிவி...

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் வரையில் தான் ஊமையாக இருக்கப்போவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பிரம்மகுமாரிகள் நிலையத்தின் புதிய கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு திரும்பிய முதலமைச்சரிடம், 'உங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக பேசப்படுகின்றதே, இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?' என்று ஊடகவியலாளர் ஒருவர்...

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு அவர்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என பொலிஸாரால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 'மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள், சிறந்த பெறுபேறுகளைப்...

திருகோணமலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று(10) மாலை 6 மணியாளவில் சிவன் கோவில் மண்டபத்தில் மாவட்ட அமைப்பாளர் ராஜகோண் ஹரிகரன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்ட முதன்மை வேட்பாளருமான...

தேவைக்கு அதிகமாகவும் மக்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாகவும் வடக்கு கிழக்கில் படையினர் நிலைகொண்டிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். சுன்னாகத்தில் இன்றைய தினம் (11) இடம்பெற்ற கண்ணகி மற்றும் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாம்களில் வாழும் மக்களுடன் இடம்பெற்ற...

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற பயணிகள் சொகுசு பஸ் இன்று அதிகாலை 4 மணியளவில் மதவாச்சியில் விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது, இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற பயணிகள் சொகுசு பஸ் உம், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறியும்...

நாங்கள் சொல்வதைப் போன்றுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு ஜனநாயகவாதி என்று சொல்லுகிறது எனத் தெரிவித்தார், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன். யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்களின்...

காணாமல் போன உறவுகளைத் தேடித் தருமாறு வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் இன்று வவுனியா கந்தசாமி கோவில் அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். காணாமல் போன எமது பிள்ளைகள் எங்கே? தேர்தல் காலத்தில் மட்டுமா எங்களை ஞாபகம் வருவது? காணாமல்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற ஒரேயொரு தமிழ் கட்சி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அங்கீகாரத்தை பெற்ற விசுவாசத்தை பெற்ற கட்சியாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய்ககூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா கலைமகள் விளையாட்டு திடலில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு...

சாவகச்சேரி, கச்சாய் பகுதியில் போலி வாக்குச் சீட்டுக்களுடன் வாகனத்தில் சென்ற 3 சந்தேகநபர்களை நேற்று திங்கட்கிழமை (10) இரவு கைது செய்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட வாகனத்திலிருந்தே இந்த போலி வாக்குச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தேர்தல் சுவரொட்டிகள் சிலவற்றையும் கைப்பற்றியதாக பொலிஸார் கூறினர். வாகனத்தில் ஒலிபெருக்கியை...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் வெளிவந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படவேண்டும் என சில கட்சிகள் திட்டமிட்டுச் வெளிப்படுத்தும் வதந்தியான விடயமே இதுவெனவும் வடமாகாண அவைத்தலைவர் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தான்...

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் யாழ்ப்பாணம், மந்துவில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (10) இரவு நடத்தப்பட்ட தேர்தல் பிரசாரத்தின் போது இனந்தெரியாதோரால் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தமிழீழ எழுச்சிப் பாடல்களை ஒலிக்கவிட்டதை அடுத்தே, பிரசார மேடையை நோக்கி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் நிறுத்தப்பட்டது. இதேவேளை, சாவகச்சேரி பகுதியில் நேற்று(10)...

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெற விரும்புவதாக கத்தோலிக்கத் திருச்சபைக்கு அறிவித்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுகவீனம் காரணமாகவே, மன்னார் ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெற விண்ணப்பித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் கொழும்பு சென்ற கொண்டிருந்த போது, மன்னார் ஆயர்...

"ஐ.நா. விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னரே வெள்ளைக்கொடி விவகாரம் மற்றும் போர்க்குற்றவாளிகளாக பாதுகாப்புத் தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளன எனக் கூறப்படும் விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வமாகக் கருத்து வெளியிடமுடியும்." - இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார். அறிக்கை கிடைப்பதற்கு முன்னதாக மேற்படி விவகாரங்கள் தொடர்பில் தற்போது வெளியிடப்படும் கருத்துகள் தொடர்பில் எதுவும்...

இலங்கையில் யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான நிவாரணங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் போதிய அளவுக்கு கிடைக்கவில்லை எனும் கவலைகள் தொடருவதாக பலர் தெரிவித்துள்ளனர். முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தத்தில் ஏராளமான பெண்கள் தங்களது கணவர், மகன், சகோதரன் ஆகியோரை இழந்துள்ளனர். அவர்கள் இன்றளவும் உடல் மற்றும் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு ஆளாகியிருப்பதாக பலரை சந்தித்துள்ள பிபிசியின்...

அடுத்து ஐந்து ஆண்டுகளில் தமது தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. பிபிசி செய்தியாளர் ஒருவர் இது தொடர்பான வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் இலங்கையும் உள்ளடங்கியிருப்பதாக இலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடுகளில் அரசாட்சி பயம் என்ற புதிய நூல் ஒன்றிலேயே பிபிசி செய்தியாளர் அன்றூ ஹொஸ்கென் இந்த தகவலை...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கையில் 'கண்களைத் திறக்கட்டும்' என்னும் தொனிப்பொருளில் நாடகங்களை ஆற்றுகை செய்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. வடமராட்சி மாலுசந்தியில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்பு இவ்வாறு நாடகம் மூலம் பிரசாரம் செய்தது. இசைக்கச்சேரி, நாடகம் மற்றும் எழுச்சிப் பாடல்கள் என தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு...

All posts loaded
No more posts