- Sunday
- July 20th, 2025

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய அனைவருக்கும் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். அந்த வகையில் வாக்காளர்களின் தூரத்தை கருத்திற்கொண்டு குறைந்தது அரைநாள் முதல் ஒருநாள் வரையான விடுமுறை வழங்கப்பட வேண்டும்...

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் ஊடகவியலாளர் வித்தியாதரனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு ஜனநாயக போராளிகள் கட்சி களமிறங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் அரசியல் அரங்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்தச் சூழ்நிலையில், 27 வருடங்களாக மக்களின் விடிவுக்காக களமாடிய முன்னாள் போராளி ஒருவர் தனது குமுறல்களை எம்முடன்...

எதிர்வரும் 17.08.2015 அன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை.... எதிர்வரும் 17.08.2015 அன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக ஒன்றுக்கொன்று முரணான நிலைப்பாடுகளை வெவ்வேறு அரசியற் கட்சிகள் மட்டுமின்றி ஒரே கட்சியின் வெவ்வேறு வேட்பாளர்களும் வெளியிட்டு வருகின்ற நிலையில் ‘‘மெய்ப் பொருள் காண்பது...

இலங்கை அரசால் வடமாகாணத்தில் நியமனம் செய்யப்பட இருக்கும் 361 விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களில் 332 பேர் சிங்களவர்கள் எனத் தெரியவந்ததையடுத்து, தமிழ் மக்களுக்கு உரிய நியாயம் விரைவில் கிடைக்காவிடில் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வடக்கில் நியமனங்களில் 90 விழுக்காடு சிங்களவர்கள் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று புதன்கிழமை (12.08.2015) யாழ்...

எனது அன்பார்ந்;த சகோதர சகோதரிகளே, இளைஞர்களே, யுவதிகளே! தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் யாருக்கு வாக்களிப்பது, யாரை தெரிவு செய்தால் உங்களையும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அவர்கள் வாழவைப்பார்கள் என்பது குறித்து நீங்கள் ஓர் தீர்மானத்திற்கு வந்திருப்பீர்க்ள் என நம்புகின்றேன். உங்களது தீர்மானத்தில் நான் எந்தவொரு செல்வாக்கினையோ அல்லது தலையிட்டினையோ செய்யப்போவதில்லை. இம்முறை...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவர முடியாது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் அதற்கான அனுமதி இல்லை என்று வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் நடுநிலை வகிக்கப்போவதாக அறிவித்தமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், முதலமைச்சருக்கு எதிராக வடமாகாண சபையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக்...

யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இன்று புதன்கிழமை (12) உத்தரவிட்டார். கடந்த மே மாதம் 20ஆம் திகதி, நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில், 27பேர் தொடர்ந்து விளக்கமறியலில்...

இன்றைய சூழ்நிலையில் சில அரசியல் கட்சிகள் பணத்துக்காக உறுப்பினர்களை கட்சியில் இணைத்து வேட்பாளர்களாக்கும் நிலையில் தமிழர் விடுதலை கூட்டணி சாதாரண சிவில் சமூகத்தவர்களையும் புத்தியீவிகளையும் வேட்பாளர்களாக நியமித்து தேர்தலில் போட்டியிடுகின்றது. மனோ கணேசன் பண பலம் படைத்தவர்களை கட்சியில் இணைத்து அரசியல் வங்குரோத்து நிலையை சீர் செய்வதற்காக மக்களின் எதிர் காலத்தை விலை பேச முடியாது...

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று வயதுச்சிறுமியினுடைய மரணம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் பராமரிக்கப்பட்டுள்ள 14 வயதுச்சிறுவனை தொடர்ந்தும் குறித்த பாடசாலையில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை வைத்துப்பராமரிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு சக்திபுரம் பகுதியில் சந்திரகுமார் ஜெருசா...

தேர்தல் தோல்வியை அடுத்து சதித்திட்டத்தினூடாக ஆட்சியை தக்கவைக்க முயன்ற மஹிந்த ராஜபக்ஷ மேற்குலகம் உட்பட முழு சர்வதேசமும் காட்டிய எதிர்ப்பு மற்றும் அழுத்தம் காரணமாகவே அலரிமாளிகையிலிருந்து ஓடினார் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நடாத்திய பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து...

2009 மே18 அதிகாலை அங்கு சிக்குண்டு உயிருக்காக போராடிக்கொண்டிருந்த ஒன்றரை இலட்சம் மக்களது உயிரை நினைத்து நானும் மாவை அண்ணரும் அழுதோமென தெரிவித்தார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர் அந்த கடைசி கணங்களினில் அவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன்...

வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தேர்தல்கள் சட்டங்களை பாரியளவில் பகிரங்கமாகவே மீறி வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் வன்னித்...

மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டமானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. என்றுமில்லாதவாறு பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தமை தமிழர்கள் எப்போதும் விலைபோகதவர்கள் என்பதை மீண்டும் ஒருதடவை உணர்த்தியுள்ளது. மேற்படி இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமராட்சியின் ஒரு சிறந்த கல்வியியலாளரும் முன்னணி வேட்பாளருமாகிய...

தமிழ் மக்களை படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த மஹிந்த ராஜபக்ஷவுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இணைந்து கொண்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், தமிழ் தேசிய...

வெறுமனே அரசியல் தலைமைத்துவத்தை கொடுத்து பார்வையாளராக நாடாளுமன்றத்தில் நாம் அமர்ந்திருக்கவில்லை. நாடாளுமன்றத்திலேயும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும், சர்வதேசத்திலும் இராஜதந்திர அணுகு முறையை மேற்கொண்டு, 2009இல் தமிழ் மக்கள் உரிமைப் போர் தொடர்பில் இருந்த நிலையை முற்றாக மாற்றி சர்வதேச நிலைப்பாட்டை தமிழர்களுக்கு சாதகமாக மாற்றியமைத்தோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

விருப்பு வாக்கு தொடர்பான சர்ச்சைகளை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இம்முறை பொதுத் தேர்தலில் ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை விருப்பு வாக்கு எண்ணும் நிலையங்களுக்குள் அதிகளவில் அனுமதிக்க தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளார். விருப்பு வாக்கு எண்ணுதல் தொடர்பிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நோக்கில்...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் நேற்று நான்கு மணிநேரம் விசேட குற்றபுலனாய்வு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்றுக் காலை 10.30 இல் இருந்து பிற்பகல் 2.30 வரை இவ் விசாரணை இடம்பெற்றுள்ளது. தபால் மூல வாக்களிப்பின் போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு...

தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் இறுதிக்குழு நேற்று இலங்கை வந்தடைந்துள்ளது. தெற்காசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்தின் கண்காணிப்பாளர்கள் 29 பேரைக் கொண்ட குழுவே நேற்று இலங்கை வந்திருப்பதாக தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. மாலைதீவின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் இப்ராஹிம் தா ஹித் இக்குழுவிற்குத் தலைமை தங்குகின்றார். அதேநேரம், பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக் குழுவைச்...

சுனாமியின் போது 9 வயதில் காணாமல்போன சிறுவன் தற்போது 21 வயது இளைஞராக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் குமாரபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட ஜெகநாதன் குருதேவன் என்பவரே சுனாமியில் காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போன போது தரம் 4 இல் கல்வி கற்றுள்ளார். 2004 ஆம் ஆண்டு...

"போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மை அறியப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் வழங்கப்படவேண்டும். அவ்வாறான நிலைப்பாடு இருந்தாலே நாட்டில் நல்லாட்சி ஏற்படும். உண்மை அறியப்பட்டதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு வேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த்...

All posts loaded
No more posts