- Thursday
- May 14th, 2026
எத்தகைய விசாரணைகளை விரும்புகின்றீர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் கேட்பது நியாயமில்லை என்று தெரிவித்துள்ளார் சனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரே. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை குறித்து கருத்து வெளியிட்டுளள்ள அவர்- ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையை வரவேற்கிறேன். ஏற்கனவே கூறப்பட்ட விடயங்கள் உறுதியாகியுள்ளன....
பருத்தித்துறை நீதிமன்ற நடவடிக்கைக்கு வந்திருந்தவர்கள் வைத்திருந்த 26 அலைபேசிகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதவான் மா.கணேசராசா, நீதிமன்றத்துக்குள் அலைபேசிகளை கொண்டு வரவேண்டாம் என எச்சரிக்கை செய்த பின்னர் அவற்றை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற பொலிஸாருக்கு உத்தரவிட்ட சம்பவம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது. நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்த போது, நீதிமன்றத்துக்கு வருகை தந்த...
வலிகாமம் வடக்கு, வலி, கிழக்கு பகுதியில் அண்மையில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உலர் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன், வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலி, வடக்கு, வலி, கிழக்கு பகுதியில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு உலர் உணவு வழங்குவதற்கு...
வட மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்பட்ட இருவெற்றிடத்திற்கு தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு இரு புதிய உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இடம்பெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வட மாகாண சபையின் யாழ் மாவட்ட உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் இடத்திற்கு கணபதிப்பிள்ளை தர்மலிங்கமும் வன்னி மாவட்டத்தில்...
நாடாவை வெட்டிய இரண்டு பெண்களை கைது செய்த பொலிஸார் அவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய சம்பவம் கடவத்தையில் இடம்பெற்றுள்ளது. கடவத்தை-கடுவெல அதிவேக நெடுஞ்சாலையை வைபவரீதியாக திறந்துவைப்பதற்கு முன்னர், அங்குவந்த இரண்டு பெண்களும் வீதிக்கு குறுக்காக கட்டப்பட்டிருந்த ரிப்பனை (நாடாவை) வெட்டியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படம் அடங்கிய பதாதையை கையில் ஏந்தியிருந்த இருவரும் 'மஹிந்தவுக்கு...
மஹிந்த ராஜபக்ஷ இல்லாத அரசாங்கம் ஒன்றுதான் நாட்டிற்குத் தேவையாக உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்த ஊடக நிறுவனங்களின் பிராணிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இதில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்த, ஊடக நிறுவனங்களின் பிராணிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு பாரிய சிக்கலில் இருந்து விடுபட்டுள்ளதாக தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வௌியிடும்போது பிரதமர்...
வடமாகாணத்தின் முதலாவது மீன்தீவன உற்பத்தி ஆலையை பூநகரியில் வடமாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த வியாழக்கிழமை (17.09.2015) திறந்துவைத்துள்ளார். பூநகரி பள்ளிக்குடாவில் கொடுவா மற்றும் பாலைமீன் வளர்ப்புத்திட்டம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடற்கரையை அண்மித்ததான கடலில் பண்ணைகள் அமைத்து வளர்க்கப்படும் இம்மீன்களுக்குப் புரதத் தீவனத்தை வழங்குவதில் கடற்றொழிலாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடலில்...
ஜெனிவா விசாரணை அறிக்கை தொடர்பிலான கூட்டு அறிக்கை ஒன்றை சிவில் அமைப்புக்கள் வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கை கூறுவதாவது. ஐ. நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தால் இலங்கை தொடர்பாக 16 செப்டம்பர் 2015 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையினை நாம் வரவேற்கின்றோம். (ஐ.நா மனித உரிமை பேரவைக்கு விசாரணைக்க்கான தரவுகள் சேகரிப்பதற்கு கொடுக்கப்பட்ட ஆணைக்குட்பட காலப் பகுதியாகிய) பெப்ரவரி 2002க்கும்...
மன்னார் மறைமாவட்ட ஆயர், மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்குச் சென்று தேநீர் அருந்திய நிலையிலே அவர் திடீர் உபாதைக்கு உள்ளாகியதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைகளும் இல்லை என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 'மன்னார் மறைமாவட்ட ஆயரும் அருட்தந்தை...
அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள சிலர் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தங்கள் பகுதியில் தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலா விண்கற்கள் பூமி மீது விழும் என நம்புகின்றனர். ‘மோர்மோன்’ சர்ச் வழியை பின்பற்றுபவர்களில் பலர் அழிவின்போது தேவைப்படும் என உணவுப்பொருட்கள் பலவற்றையும் இப்போதே வாங்கிக் குவித்தும் வருகின்றனர். உலக அழிவைப் பற்றி இவர்களின் நம்பிக்கைக்குரிய...
சாவகச்சேரி லயன்ஸ் கழகமும் மானிப்பாய் மெமோரியல் ஆங்கில பாடசாலையும் இணைந்து நடாத்தும் இலவச மருத்துவ முகாம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (20.9.2015) காலை-8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானிப்பாய் மெமோரியல் ஆங்கில பாடசாலை மண்டபத்தில் சாவகச்சேரி லயன்ஸ் கழகத் தலைவர் பு.தினேஷ் குமார் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் கண்,...
வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம் மற்றும் வடமாகாணம் ஆகியவற்றின் குடி நீர்த் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் ஒன்றினை அரசாங்கம் அமுல்படுத்தவுள்ளது. இந்தத் திட்டத்திற்கென உதவும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவியை வழங்க முன்வந்துள்ளது. இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு, 90 பில்லியன் ரூபா (அறுநூற்று எழுபத்து...
அடுத்த வருடம் தொடக்கம் மரண தண்டனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் அனுமதி கிடைத்தால் மரண தண்டனையை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி இன்று கூறுகையில், ´நாட்டில் இன்று இடம்பெறும் கொலை, கொள்ளை, சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் துஸ்பிரயோகம், குற்றச் செயல்கள் அதிகரிப்பு தொடர்பில் புதிய...
மிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி பதாகை ஒன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் சர்வதேச விசாரணை மூலம் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏக மனதாக நிறைவேறியுள்ளது. எனவே இதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட போர்க் குற்றவாளிதான் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் உண்டு என...
ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் விரைவில் இலங்கை வரவுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சிவில் மற்றும் அரச சார்பற்ற பிரதிநிதிகளின் சந்திப்பின் போது ச.வி. கிருபாகரன் அவர்களால், இலங்கை போர்க்குற்ற விவகாரம், மற்றும் இலங்கை தொடர்பிலான நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் வினா எழுப்பப்பட்டது. அதற்கு ஐ.நா. அலுவலக ஆணையாளரின் பேச்சாளர் பதிலளிக்கையில்...
தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒருமித்து செயற்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது....
வாகனங்களைக் குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யும் நடவடிக்கைக்கு இலங்கை மத்திய வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி வாகனங்களை முழுமையான குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிதிச்சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றுக்கு அமைய, லீசிங் வசதிகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகளை உள்ளடக்கிய சுற்றுநிருபமொன்று இலங்கை மத்திய வங்கியினால் நேற்று...
சர்வதேசத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கை வெளிவந்திருக்கின்றது. இது சர்வதேச விசாரணையில்லை என்று கூறி இந்த அறிக்கைக்கான பிரேரணையை ஜெனிவாவில் எரித்து, சர்வதேச ஒரு கூட்டத்தினர் மக்களைக் குழப்பினர். இப்போது புரிந்திருக்கும், நடந்தது சர்வதேச விசாரணைதான் என்று. நேற்றுவரை எம்மை ஏசி விட்டு இன்று மகிழ்ச்சி தெரிவிப்பவர்களும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக்...
Loading posts...
All posts loaded
No more posts
