- Sunday
- July 20th, 2025

கடந்த 03ஆம் திகதி கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் காணாமல் போன 17 வயது சிறுமியை மீட்பதற்கு பளை பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். தனியார் வகுப்பிற்கு சென்று வருவதாகக் கூறி சென்ற 17 வயதுடைய எஸ்.சுமங்கலா என்ற சிறுமியே இதுவரை வீடு திரும்பவில்லை. காணாமல் போன தமது மகளை மீட்டுத்தருமாறு கோரி சிறுமியின் பெற்றோர், பளை...

தேர்தல் பிரசார மேடையில் குடும்ப விடயம் கதைக்கப்பட்டமையால் சம்பந்தப்பட்ட தரப்பினரால் குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் நிறுத்தப்பட்ட சம்பவம், வியாழக்கிழமை (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியொன்றின் பிரசாரக் கூட்டம் யாழ்.நகரப்பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது, பிரசாரத்தில் ஈடுபட்டவர், இன்னொரு கட்சியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவர் 21 வயதுடைய...

2018 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு எஸ்பெஸ்டஸ் (asbestos) கூரைத்தகடுகளை இறக்குமதி செய்வதை முழுமையாக நிறுத்துவதற்கு அமைச்சரவையுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டு மக்களின் சுகாதார ஆரோக்கிய நிலைமைகள் தொடர்பாகக் கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ‘ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை நோக்கி’ என்ற...

மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதிநிதிகளை தெரிவு செய்த போதிலும் அவர்கள் இதுவரை காலமும் வெறும் பார்வையாளர்களாக மாத்திரமே செயற்பட்டு வருகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது....

யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பெயரினை துஸ்பிரயோகம் செய்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அப்பட்டமான போக்கிலித் தனத்தை வெளிப்படுத்தி நிற்பதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. தற்போதைய சூழல் தொடர்பினில் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் தாயகம்.தேசியம்.சுயநிர்ணயமெனும் கோசங்களை வலியுறுத்தி ‘ பொங்குதமிழ்’ பிரகடனம் ஊடாக தமிழ் மக்களின் அங்கிகாரத்திற்காக யாழ் பல்கலைக்கழக...

தமிழ் தேசியத்தின் புதிய அரசியல் போராட்டப் பாதைக்காக வழிகாட்டும் மாற்றத்திற்கான அனைத்து தமிழ் மக்களும் ஒன்று திரண்டு வாக்களிக்க முன்வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 5 வருடமாக தமிழ் மக்களுடைய நலன்கள் அனைத்தினையும் திட்டமிட்டு புறக்கணித்து, மக்களை ஒவ்வொரு கட்டத்திலும் ஏமாற்றிய தலமைகளை...

ஒரே நாட்டுக்குள் சமஸ்டி அடிப்படையில் தமிழர்களது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி கோரியுள்ளது. நாட்டில் ஒற்றையாட்சி ஒழிக்கப்பட்டு ஒரு கூட்டாட்சி வடிவில் இராஜ்ஜியங்களின் ஒன்றியம் சமஸ்டி முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அரசியல் இராஜதந்திர ரீதியில் தங்களுக்கு உள்ள ஜனநாயக பலம் சர்வதேச...

தேர்தல் சட்டம் மற்றும் தனது ஆலோசனைக்கு அமைய செயற்படாவிடின் அரச ஊடகங்களின் கழுத்துக்கு அருகில் வாள் வைக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தனியார் ஊடகங்களும் அவ்வாறு செயற்படாவிட்டால் அவர்களுக்கு தேர்தல் முடிவு வழங்கப்பட மாட்டாதென அவர் எச்சரித்துள்ளார். எனினும் வெவ்வேறு இணையத்தளங்களில் பரவும் கருத்துக்களை நிறுத்த தன்னால் முடியாது என...

எமது மக்களின் நலன்புரி முகாம் வாழ்க்கை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். மல்லாகம் நீதவான் முகாமிற்கு இன்றைய தினம் (14) விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் அவர்கள் முகாம் மக்களுடன் கலந்துரையாடும்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிய ஐந்து பக்க கடிதத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஒரு பக்கத்தில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணைக்கு தான் மதிப்பளித்தது போல பொதுத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ...

எந்தவகையில் கடிதம் கிடைத்தாலும் கட்சிக்காரர்கள் தங்களது தீர்மானத்தை எடுத்து முடிந்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை கூட்டமைப்பாக வலுப்படுத்தியவன் தான் என கடவத்த பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த கடிதத்தில் உள்ள விடயங்களை ஊடகங்களில் பிரசுரிக்காதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள்...

யாழ். மாநகரசபை மைதானத்தில் வியாழக்கிழமை (13) மாலை இடம்பெற்ற சுயேட்சைக் குழு 6இன் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தென்னிந்திய கலைஞர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. தென்னிந்தியாவின் பிரபல பாடகர்களான ஹரிஸ் ராகவேந்திரா, மால்குடி சுபா மற்றும் ரி.எம்.சௌந்தரராஜனின் மகன் ரி.எம்.எஸ்.செல்வம் ஆகிய பாடகர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அத்துடன், தமிழ்த் திரைப்பட பிரபல நகைச்சுவை நடிகரான செந்தில்...

தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை குறைகூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரை பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் ஏசிய சம்பவமொன்று வியாழக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ். நகருக்கு அண்மையிலுள்ள ஒரு இடத்தில் நடைபெற்றது. இதன்போது, 'வடமாகாண முதலமைச்சர் அண்மையில் வெளியிட்டு வரும் அறிக்கையானது,...

தேர்தலில் வாக்களிப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தனியார் மற்றும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதனைப் போன்றே பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார். மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் போதியளவு கால...

எதிர்ரும் 17ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது. நாட்டின் தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இந்தக் காலத்தில் வாக்காளர்கள் சுயாதீனமாக முடிவு எடுக்கக் கூடிய வகையில் வேட்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென,...

உலகம் வியந்த ஒரு புரட்சியை ஜனவரியில் தமிழ் மக்கள் நிகழ்த்திக் காட்டியதால் வருகின்ற தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக, இன்னொரு புரட்சியை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது என்று யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். கரவெட்டி கிளவிதொட்டம் பிள்ளையார் கோயில் முன்றலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,...

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சின்னராஜா விஜயராஜன், கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக வைத்து முச்சக்கரவண்டி உரிமையாளர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (13) தாக்கியதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி வைத்தியசாலை அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை நடத்துவதற்காகச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும்...

கர்ப்பிணித் தாய்மாருக்குத் தேவையற்ற விதத்தில் சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தால் வழங்கப்பட்ட பொருட்களுக்கு மாற்றீடு வழங்கப்படும் என உடுவில் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணித் தாய்மாருக்கு மாதாந்தம் 2,000 ரூபாய் சத்துணவுகள் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைய கர்ப்பிணித் தாய்மாருக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சுன்னாகம் பலநோக்கக் கூட்டுறவுச் சங்கத்தால் கர்ப்பிணித் தாய்மாருக்கு அரசாங்கத்தால்...

"வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று மாபெரும் சாதனை படைக்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "எமது தமிழ் மக்கள் தன்மானத் தமிழர்கள். அவர்கள் சலுகைகளுக்கு...

தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின் உரிமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தினத்தன்று இடம்பெறும் தேர்தல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல்களை தடுப்பதற்காக விசேட அலகொன்றை தாபிக்க தீர்மானித்துள்ளது. அவ்...

All posts loaded
No more posts