- Thursday
- May 14th, 2026
இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து, மனித உரிமைகள் பேரவையில் யோசனையொன்றை முன்வைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யுத்தத்தின் இறுதியின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடியறிவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்படவிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவித்தன. அமெரிக்காவினால்...
பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஜே.ஸ்ரீரங்காவுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவுவிழா நடைபெறவுள்ள நிலையில், அந்நிகழ்வுக்கு கலந்துகொள்ள வரும் ஸ்ரீரங்காவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 'ரங்காவின் பிரசன்னத்தை எதிர்க்கும் யாழ். இந்து சமூகத்தை ஆதரிப்போம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் துண்டுப்பிரசுரத்தின் கீழ்ப் பகுதியில்...
திருநெல்வேலி சிவன் வீதியில் சிவன் அம்மன் கோயில்களுக்கு முன்பாக உள்ள சுமார் இருநூறு வருடங்களுக்கு பழைமைவாய்ந்த அரச மரத்தின் பெரும் கிளை திடீரென முறிந்து வீழ்ந்ததால் மூன்று கடைகள் சேதமடைந்தடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு குறிப்பிட்ட மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்துள்ளது. வீதியில் வீழ்ந்துள்ள போதிலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாலை வேளையில்...
இடம்பெயர்ந்து 26 வருடங்களாகியும் தாங்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாதை கண்டித்தும், மீள்குடியேற்றத்தை விரைந்து மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் மயிலிட்டி மக்கள், இன்று செவ்வாய்க்கிழமை மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் தமது பகுதி விடுவிக்கப்பட்டு, தாங்கள் மீள்குடியமர்த்தப்படுவதன் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்திக் கொள்ளலாம் எனவும், இடம்பெயர்ந்நது தாங்கள்...
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்றவை 'இனப்படுகொலை' எனக் குறிப்பிடாமல் 'அமைதி' காத்தமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விடயம் குறித்து இந்தியாவின் 'தி இந்து' நாளிதழ் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலிடம் கேள்வி எழுப்பியது. அந்தக் கேள்விக்கு ஆணையாளரின் பேச்சாளர் ரவீனா சம்தாசினி அளித்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்...
இலங்கை சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 1115 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 600 கைதிகள் தமது தண்டனையை இரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்து மேல் முறையீடு சமர்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றம் அனுமதி வழங்கினால் அடுத்த ஆண்டுமுதல் மரண தண்டனையை அமுல்படுத்தத் தாம் தயாரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில்...
விடுதலைப்புலிகள் இயக்க தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் சித்ரவதை செய்து சுட்டுக்கொன்றதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம்சாட்டி உள்ளது. இலங்கையில் 2009–ம் ஆண்டு மே மாதம் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்டப்போரில் ராணுவத்தால் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இறுதிக்கட்ட போரின்போது இலங்கை ராணுவம் நடத்திய மனித...
யாழ்ப்பாணத்தில் இருந்து பதுளை மற்றும் கொழும்பு செல்லும் பேருந்துகளுக்கு கெக்கிராவை - மரதன்கடவல நகரில் வைத்து கல்வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பேருந்துகளின் சாரதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். இன்று காலையும் தியதலாவையை நோக்கி சென்ற யாழ்ப்பாண பேருந்து ஒன்றின் மீது இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பேருந்தின் பணிகள் சிலரும் சாரதியும் காயமடைந்துள்ளதாக...
இந்திய மீனவர்களினால் சுரண்டப்படும் எமது கடல் வளத்தினைப் பாதுகாக்க இரு நாட்டு அரசாங்கமும் பேசி உரிய நடவடிக்கை எடுப்பது அவசியமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய கடற்கரை தூய்மைப்படுத்தும் செயற்பாட்டினை யாழ். ஒல்லாந்தர் கோட்டைப் பகுதியில் ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் யாழ். மாவட்டத்தில்...
சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழு (TACIAM) தமது இணையத்தளம் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியீட்டுள்ளது. அதில் .. சர்வதேச பொறுப்புக் கூறுல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவினால் சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களாக திரட்ப்பட்ட கையொப்பங்கள் ஸ்கான் செய்யப்பட்டு கீழுள்ள இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை...
யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் தேசிய கடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் கடற்கரையோராங்களை பாதுகாத்தல் சம்பந்தமான விழப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்புறமாக இந்த விழப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர்...
செப்டம்பர் மாத இறுதிக்குள் சிறைச்சாகைளில் விசாரணைகளின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில், அந்தக் கைதிகளையும் உள்ளடக்கி சாத்வீக ரீதியிலான தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மக்கள் அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் தெரிலித்துள்ளது. அந்தக்...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையை தமிழ் மக்களின் இழப்புக்கள் மற்றும் பாதிப்புகளுக்குப் பரிகாரம் காணவும், உண்மைகள் கண்டறியப்படவும், உரிய நியாயம் கிடைக்கவும் மற்றும் அரசியல் தீர்வுக்கான வாய்ப்பாகவும், தமிழ்த் தலைமைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்தகாலத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள இவ்வாறு கிடைக்கப்பெற்ற பல நல்ல வாய்ப்புக்களை...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சிறுவர் மரணங்கள் தொடர்பிலான செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை குளமொன்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறார்கள் நேற்றையதினம் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.10 மற்றும் 8 வயதான இரண்டு சிறார்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நாராந்தனை பகுதியைச் சேர்ந்த ஒன்றுவிட்ட சகோதரர்களான டெனிஸ்கரன் தனுசன் (வயது 11), சுரேஷ்குமார் விதுஷன்...
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த கர்ப்பிணிப் பெண், தொண்டமானாறு கடல் நீரேரியில் ஞாயிற்றுக்கிழமை (20) சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். 3ஆம் சந்தி தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த, அரசன் சந்திரவதனா (வயது 40) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (18) குறித்த கர்ப்பிணிப் பெண்...
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப்பயிற்சி பெற்றார் என தாஸ் அல்லது அண்ணா என்று அழைக்கப்படும் கனகரட்னம் நிசாந்தன் என்ற இளைஞனுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் எதிரி, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவில்லை என தெரிவித்த பின்னர் நடைபெற்ற விசாரணையின் முடிவில் எதிரியை நீதிபதி...
யாழ் இந்துக்கல்லூரி 125 ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டங்களை புறக்கணிக்க எடுத்த முடிவை மீளப்பெறுவதில்லை என பழையமாணவர்சங்கம் நேற்றைய (20) கூட்டத்தில் மீள உறுதி செய்துள்ளது. இதுபற்றி பழையமாணவர் சங்கத்தலைவர் சி.சுந்தரேஸ்வரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஈழத் தமிழர் வரலாற்றில் பல புகழ் பூத்த பழைய மாணவர்களைத் தந்த கல்லூரியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு...
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகி தெல்லிப்பழை யூனியன் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சேர்க்கப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் சுன்னாகம் சந்தியில் சுமார் ஐம்பது மீற்றர் தூரத்தில் கடமையில் ஈடுபட்டு இருக்கக் கூடியதாக மூன்று மோட்டார்...
அரசியலானது மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் இடைவெளியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. எமது அரசியல் யாப்பும் எமக்குப் போதிய அதிகாரங்களை வழங்கவில்லை. எங்கள் பிரச்சினைகள் அரசியல் ரீதியாக தீர்க்கப்படும் வரை எம் மக்கள் காத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே உரிய திட்டங்களுக்கேற்ப எமது வெளிநாட்டு,உள்நாட்டு உறவுகளின் உதவியுடன் முன்னேறுவதுதான் உசிதம் என்று எனக்குப் படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் வட...
இறுதி யுத்தத்தில் 7 ஆயிரத்து 700 பேர் வரையானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என காணாமற் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவர் கருத்து வெளியிட்டபோதே மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: 2011 இல், ஐ.நா பொதுச் செயலர் பான்...
Loading posts...
All posts loaded
No more posts
