- Thursday
- July 17th, 2025

தான் ஒருபோதும் தமிழ்ஈழக் கோரிக்கையை ஆதரிக்கவில்லையென்றும், எதிர்காலத்திலும் அதனை ஆதரிக்கப் போவதில்லையென்றும் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் ஈழம் வரைபடத்தைக் கொண்டதான எனது தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த 65-9815 என்ற இலக்கத்தகடு உடைய வாகனத்தை பயன்படுத்தியதாக தனக்கு எதிராக தேர்தல்கள் செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும்...

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக மன்னார் குருமுதல்வர் விக்டர் சோசை தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மனித மாண்பினைக்காக்கும் அமைப்பின் 9ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை கடந்த 3 மாதகாலமாக...

இறுதிக்கட்டப்போரின்போது வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைய வந்தவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், போர்க்களத்தில் பாலியல் ரீதியான சித்திரவதைகள் ஆகியன போர்விதிமுறைகளை மீறும் செயல்களாகும். எனவே, போர் முன்னெடுப்பு என்ற போர்வையில் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு சார்பாக அரசு ஒருபோதும் நிற்காது - இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பான பொறிமுறை உருவாக்கும் கலந்துரையாடல்களில், வடக்கு மாகாணசபையும் உள்ளடக்கப்படுவது கட்டாயம்' என்று ஐக்கிய நாடுகள் சபை நம்புவதாக ஐ.நா. பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் மீண்டும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு கேட்டுக்கொண்டதற்கு அமைய, எல்லாப் பங்காளர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தி, பரந்தளவிலான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்க ஐ.நா. முன்வந்தது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த...

பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதால் சகல கட்சிகளின் தேர்தல் காரியாலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரசாரப் பலகைகள் யாவும் 15ஆம் திகதி காலை 8 மணிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவித்தலொன்றை...

மிருசுவில் பிரதேசத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அறுவருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மிருசுவில் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு 09.00 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகளை தம்வசம் வைத்திருந்த 6 பேரை கொடிகாமம் பொலிஸார் கைதுசெய்திருந்தனர். அவர்களிடமிருந்து 285 சுவரேட்டிகள், ஒட்டுப் பசை மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். இதனையடுத்து...

புதிதாக எந்த அரசாங்கம் உருவாகினாலும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எந்த அரசாங்கம் மத்தியில் ஆட்சி அமைத்தாலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளக விசாரணைக்கா,...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுமந்திரன் அவர்கள் இன்று மதியம் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடாத்தினார். அதில் முக்கியமான தரவு ஒன்றினை பிழையாகச் சொன்னது மட்டுமல்லாது, மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அதனைச் சுட்டிக் காட்டிய போது அவரது கருத்தை பரிசீலிக்காமல் தான் சொன்னது தான் சரி என்கிற வகையில்...

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலின் பின்னர் ஜனநாயகப் போராளிகள் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பொறியியல் – மருத்துவ பீடங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், நடைபெற்றுவருகின்ற உயர்தரம் விஞ்ஞானப் பரீட்சையில் சிங்கள மாணவிகள் இருவர் தோற்றிவருகின்றமை மாவட்ட மாணவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெறுகின்ற பரீட்சையில் அவர்கள் இருவரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகத் தோற்றிவருகின்றனர். மாங்குளம் மகாவித்தியாலய அதிபர் மற்றும்...

இன்றைய இலங்கை அரசியல் சூழ்நிலையில் பெரும்பான்மைக் கட்சிகள் சமபலத்தோடு போட்டியிடும் நிலையில், சிறுபான்மை மக்களாகிய நாம் நமது வாக்குகளைப் பயன்படுத்தி தமிழ்த் தேசிய நலன்களை முன்னிறுத்தக் கூடிய பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதன் மூலம், நாம் இலங்கை அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கமுடியும். - இவ்வாறு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை சார்பாக...

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வியாழக்கிழமை (06) அதிகாலை சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பஸ் மீது, மண்டான் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இரும்பு துண்டு ஒன்றால் தாக்குதல் மேற்கொண்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். இதனால் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடிகள் முற்றாகச் சேதமடைந்தது. பஸ்ஸின் பின்னால் மோட்டார் சைக்கிளில்...

நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்தும் இலங்கை மாணவர்க்கான சிறுகதைப் போட்டி 2015 அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் முதற்பரிசு பெறும் கதைக்கு 25,000 ரூபாய்களும் , இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு முறையே 15,000, 10,000 ரூபாய்களும் பரிசாக வழங்கப்படும். பாராட்டுப் பெறும் பத்துக் கதைகளுக்கு, தலா 2000 ரூபாய்கள் வழங்கப்படும். போட்டி முடிவு திகதி 15.10.2015. மேலதிக விவரங்கள்...

பூநகரிப் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 66-1 ஆவது படைப்பிரிவினால், புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 66-1ஆவது பிரிகேட் தலைமையகத்துக்கு அருகிலேயே, இந்த புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பௌத்த வழிபாட்டுத் தலத்தை 66ஆவது டிவிசனின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விக்கிரமரத்ன கடந்த மாதம் 29ஆம் நாள் திறந்து...

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராசா இன்று காலை யாழ் கல்வியங்காட்டுப் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இப் பிரச்சார நடவடிக்கைகளை கல்வியங்காட்டு சந்தைப் பகுதியிலேயே தனது ஆதரவாளர்களுடன் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது வடக்கு மாகாண சபை அவைத் தலைவர்...

எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே நாம் திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு மக்களுடன் நேற்றைய தினம் (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு...

கட்சி சின்னத்துடன் வேட்பாளரின் விருப்பு இலக்கத்தையும் சேர்த்து சிகையலங்காரம் செய்துகொள்வது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும் என்று தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், தலைமுடியை அவ்வாறு அலங்காரம் செய்துகொண்டிருப்பவர்கள் கைதுசெய்யப்படுவர் என்றும் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாவும், அவ்வாறு சிகையலங்காரம் செய்துகொண்டு சுற்றித்திரிபவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

சாவகச்சேரி தபால் நிலையத்திலிருந்து தனக்கிளப்பு தபால் நிலையத்துக்கு நேற்று புதன்கிழமை (05) கொண்டு செல்லப்பட்ட போது பறித்துச்செல்லப்பட்ட தபால் பொதிகள் சிலவற்றை, தனக்கிளப்பு பகுதியிலிருந்து மீட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். தபால் ஊழியர்களால் கொண்டுசெல்லப்பட்ட இந்தப் பொதிகளை மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் தபால் ஊழியர்களால் சாவகச்சேரி பொலிஸ்...

வல்வெட்டித்துறை விநாயகர் வித்தியாலயத்துக்கு அருகில், தேர்தல் விதிமுறையை மீறி கட்சி அலுவலகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், வணக்க ஸ்தலங்கள் உள்ளிட்ட பொது நிறுவனங்களுக்கு அருகில் தேர்தல் பிரசார அலுவலகங்கள் அல்லது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என தேர்தல் ஆணையாளரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த அறிவுறுத்தலை மீறிய வகையில் மேற்படி கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

All posts loaded
No more posts