- Sunday
- July 27th, 2025

நல்லாட்சிக்கு அத்திவாரம் நிரந்தர சமாதானம். இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் வேண்டுமாக இருந்தால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டும். இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் சிங்கள மக்களும் விரும்புகின்றார்கள். எமது மக்களை நாம் கைவிடமாட்டோம். எமது மக்கள் விரும்புகின்ற தீர்வையே நாம் ஏற்றுக்கொள்வோம். - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

தமிழகத்தின் - திருச்சியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில், இளம் மனைவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி ரூசாமிலி (24), இலங்கை தமிழர்களான இவர்களுக்கு, கடந்த, நான்காண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது, மூன்று வயதில் குழந்தை உள்ளது. இந்தநிலையில், ராமஜெயம் வேலைக்கு...

கர்ப்பிணித் தாய்;மார்களுக்கு வழங்கவேண்டிய போசாக்கு உணவுப்பொருட்களுக்குப் பதிலாக சவர்க்காரம், சலவைச் சோடாத்தூள் (சேர்வ் எக்செல்), சீனி, பிஸ்கற் போன்றவை வழங்கப்பட்டது நிரூபணமாகியுள்ளதையடுத்து சங்கத்தின் பொது முகாமையாளரையும், கிளை முகாமையாளரையும் பதவியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாகக் கூட்டுறவு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில், 'கர்ப்பிணிகளுக்கான போசாக்கு உணவு வழங்கலில் அதிருப்தி - சுன்னாகம் ப.நோ.கூட்டுறவுச் சங்கம்...

எதிர்வரும் 14ம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை சையின் அமர்வுக்கு கூட்டமைப்பு உத்தியோக பூர்வ பிரதிநிதிகளை அனுப்புவது குறித்து இன்னும் முடிவில்லை என கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அறிவித்துள்ளார். இருப்பினும் தனிப்பட்ட ரீதியில் சில உறுப்பினர்கள் செல்லக்கூடும் என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அனந்தி...

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழுவின் சர்வதேச விசாரணை கோரும் கையெழுத்து போராட்டம் கிழக்கிற்கும் நகர்ந்துள்ளது. 4 வது நாளான இன்று கிளிநொச்சி மற்றும் திருகோணமலைக்கும் விஸ்தரிக்கப்பட்டது. திருகோணமலையில் இன்று மாலை 3 மணியளவில் மறைமாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்திற்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தார் இதேவேளை யாழ்பாணத்திலும் போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது...

வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணம் மாவட்டச் செலயகம் முன்பாக இன்று திங்கட்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். புதிய அரசாங்கம் வழங்கவிருப்பதாக கூறப்படும் வேலைவாய்ப்பில் தங்களை முன்னிலைப்படுத்தி உள்வாங்க வேண்டும் எனக்கோரி இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள், வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன்...

குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவிருப்பதாக தெரியவருகின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ், சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் படுகொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றி இதுவரையிலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் சட்டரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமான நிகழ்வுகள் பெரும்பாலும் நாளை இடம்பெறலாம் என அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 45 பேர் பதவிகளை ஏற்றுக்கொள்ளவுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டது. அன்றைய தினம் சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட 42...

நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலின் போதும் வாக்குரிமையினை இழந்தவர்கள் அது குறித்து எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் இந்த விபரங்களை தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாதவர்கள் தங்களது...

எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் விலை குறைவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தையில் மசகெண்ணெய் விலை குறைவடைந்துள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையிலும் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனியவள மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திமவீரக்கொடி இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஆணைக்குழுக்களின் விசாரணைகள், நீதிமன்ற விசாரணைகள் தொடர்பாக, மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் அறிக்கை ஒன்றை தயாரித்து, ஐ.நாவுக்கும் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கும் கையளித்துள்ளது. மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புகூறும் விடயத்தில் ஐ.நாவின் விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையிலும், அடுத்து நடத்தப்பட வேண்டியது உள்நாட்டு விசாரணையா அல்லது...

எதிர்க்கட்சித் தலைவர் பதவி, இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டமை சரியானதே என்றாலும், சம்பந்தனின் செயற்பாட்டிற்கு அமைய அவரை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வழியுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். குறிப்பாக போர்க்குற்றம் சுமத்தி இராணுவத்தினரை தண்டிக்க மற்றும் தனி அரசை உருவாக்க முயற்சித்தால், தேசிய நலன்...

இலங்கையில் நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலானது நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒட்டுமொத்த இலங்கை அரசியலிலும் வடக்கு-கிழக்கு அரசியலிலும்கூட மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு பகுதியும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவியுள்ளனர். இரண்டு வருடங்களுக்கான தேசிய அரசாங்கமாக இது செயற்படுமென ஒப்பந்தமும்...

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் அரசாங்க வேலைவாய்ப்பை வழங்கக் கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முற்பகல் 1௦ மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது. வடமாகாணத்திற்குட்பட்ட 5 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வேலையில்லா உள்வாரி, வெளிவாரி, தேசிய உயர் தொழில்நுட்ப பட்டதாரிகள் அனைவரையும் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின்...

நல்லூர்க் கந்தன் ஆலய திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் வெள்ளவத்தைக்கும் யாழ்ப்பாணத்துக்குமான விசேட பஸ் சேவை இலங்கை போக்குவரத்துச் சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு மாகாண சாலை முகாமையாளர் தெரிவித்தார். யாழ். சாலையும் காரைநகர் சாலையும் இணைந்து நடாத்தும் இச்சேவையில் தினமும் இரவு 8.30 மணிக்கு...

யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தினூடாக வறிய நிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகள் உதவிகளைப்பெற்றுக் கொள்ளமுடியும் என நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் திருமதி ஜெ.கணேசமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நிறுவனத்தினூடாக வறுமைநிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்குரிய தேவைக்கேற்ப செயற்கை அவயவங்கள் நடமாட உதவும் உபகரணங்கள் மற்றும் உளவள சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை...

வடமாகாண சுகாதார சுதேச மருத்துவ சமூக சேவைகள் புனர்வாழ்வு நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஊட்டும் குறுந்திரைப்படங்களைத் தயாரிப்பது தொடர்பான போட்டிக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வகித்த வகிபாகம் அளப்பரியதாகும். தன்னை பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட விதம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் 69ஆவது மாநாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றும் போது சிலவிடயங்களை அம்பலப்படுத்தினார். இந்நிலையில், இந்தியாவுக்கு விஜயம்...

சீனா உதவியிருக்காவிடின் 30 வருடங்களாக நிலவிய யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்திருக்க முடியாது என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். சீனாவின் பிங்கூவா செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதேபோல, சீனாவுடன் இருக்கின்ற தொடர்பை தொடர்ந்தும் பேணவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி சீனாவினால் எம்நாட்டுக்கு செய்ததை ஒருபோது மறக்கமுடியாது என்றும் அவர்...

All posts loaded
No more posts