வல்வெட்டித்துறையில் சிக்கிய வெள்ளை நாகபாம்பு!

வடமராட்சி, வல்வெட்டித்துறை, தெணியம்பை பகுதியில் வெள்ளைநிற நாகபாம்பு ஒன்று நேற்று அகப்பட்டுள்ளது. வீதியில் காணப்பட்ட 5 அடி நீளமான இந்த வெள்ளை நிற நாகபாம்பினை அப்பகுதி மக்கள் பிடித்து போத்தலில் அடைத்துவல்லிபுர ஆழ்வார் ஆலயப் பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

பண்பாட்டிற்கு வரைவிலக்கணமாக வாழ்ந்தவர்கள் யாழ். மக்கள் : வடக்கு முதல்வர்

கலாசாரத்தை உலகுக்கு கற்றுக் கொடுத்து, பண்பாட்டிற்கு வரைவிலக்கணமாக வாழ்ந்தவர்கள் யாழ். மக்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், யாழ். மாவட்ட கலை கலாசாரப் பேரவையும், யாழ். மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு பெருவிழா யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்...
Ad Widget

கோப்பாய் பொலிஸாரின் அசமந்தம்; நீதி கேட்டு மரணவிசாரணை அதிகாரி வீட்டுக்கு மக்கள் படையெடுப்பு!

கோப்பாய் பொலிஸாரின் அசமந்தப் போக்கை கண்டித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி வீட்டுக்கு பொது மக்கள் நீதி கேட்டு சென்றனர். கடந்த முதலாம் திகதி திருநெல்வேலி சந்தையில் இருந்து வீடு திரும்ப முற்பட்ட கோண்டாவில் வடக்கு அன்னுங்கை வீர பத்திரர் கோவிலடியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணான சண்முகம் கமலா என்பவர் மோட்டார் சைக்கிளால்...

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 3 கிராம சேவகர் அலுவலகங்கள் திறப்பு

வலி. வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இன்று (11) பகல் மூன்று கிராம சேவகர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. அரசாங்கத்தின் கிராமத்திற்கு பத்து லட்சம் ரூபா என்ற நிதித் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிராம சேவகர் அலுவலகங்களை, பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் திறந்து...

பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு நேற்று (10) யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெற்றது. மேற்படி இரு மாவட்டங்களிலும் இருந்து 687 இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முகத்தேர்வே நடைபெற்றது. கொழும்பில் இருந்து வருகை தந்துள்ள பொலிஸ் ஆட்சேர்ப்பு பிரிவினர், பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கான...

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கையில் தற்போது பாவனையில் இருக்கும் தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவது குறித்து நீண்டகாலமாக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு வருடங்களினுள் இந்த செயற்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வரவும், அதன் பின்னர் இலங்கையிலுள்ள அனைவருக்கும் இலத்திரனியல்...

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா மரணம்!

பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார். தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும்...

பூமியை நெருங்கும் இராட்டசத விண்கல் பூமியில் மோதினால் 91 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள்!!

விண்வெளியில் பல விண்கற்கள் மிதக்கின்றன அவற்றில் பெரும்பாலானவை பூமியை நோக்கிப் பாய்ந்து வரும் போது எரிந்து சாம்பலாகின்றன. சில கற்கள் பல துண்டுகளாக உடைந்து பூமியின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், தற்போது பூமிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மிகப்பெரிய இராட்சத விண்கல் ஒன்று தற்போது பூமியை நெருங்கி வருகிறது. அதற்கு 86666 (2000...

இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்

இன்னும் விடுவிக்கப்படாத பொது மக்களின் காணிகளை விடுவிக்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவர் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்துவந்துள்ள பொதுமக்களின் 615 ஏக்கர் காணிகளை மீண்டும் உரிமையாளர்களிடம் கையளித்துள்ளமை...

முகாம்களுக்கு நா.மன்ற உறுப்பினர்கள் வரவேண்டும் : ‘இவர்கள் முகாம் பிள்ளைகள்’ என்ற அடைமொழி வேண்டாம்

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி முகாம்களை, நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வந்து பார்வையிடவேண்டும் என நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் சார்பாக இடம்பெயர்ந்த மக்கள் பிரதிநிதியொருவர் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விசேட...

உண்மைக்கு முதலிடம் வழங்க வேண்டியது ஊடகவியலாளர்களின் பொறுப்பு – ஜனாதிபதி

முழுமையான பத்திரிகை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடிப்படைவாதிகளின் குறுகிய நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு இடமளிக்காது உண்மைக்கு முதலிடம் வழங்க வேண்டியது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரபால தெரிவித்தார். நாட்டின் சுதந்திரத்தையும் ஊடகத்துறையின் சுதந்திரத்தையும் முழுமையாக உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்போடு இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதான பத்திரிகைகளின் தலைப்புகளை பிரசுரிக்குமாறு கட்டளை...

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொதுமக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 என்ற தெலைபேசி இலக்கத்திற்கு தேவையற்ற விடயங்கள் சம்பந்தமான அழைப்புக்களே அதிகம் கிடைப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 1929 தெலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கக் கூடிய அழைப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும், எனினும் அதில் அதிகமானவை சம்பந்தமில்லாத அழைப்புக்கள் என்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குறித்த தொலைபேசி...

தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த நாகை மாவட்டத்தை சேர்ந்த 19 மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடற்படையினரின் உதவியுடன் கரையோர பாதுகாப்பு திணக்களப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் இந்திக தி சில்வா தெரிவித்தார். கைது செய்யப்பட்ட...

கிளி கனகபுரம் கிறிக்கெற்போட்டியை கஜேந்திரகுமார் ஆரம்பித்து வைத்தார்

கிளிநொச்சி நகரில் உள்ள கனகபுரம் விளையாட்டுக் கழகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாபெரும் மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. மேற்படி நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து...

போதனாசிரியர்களிற்கான விண்ணப்பங்கள் கோரல்

இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தொழில்பயிற்சிநிலையங்களுக்கு பின்வரும் கற்கை நெறிகளை கற்பிக்கும் போதனாசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றது. சமையற்கலை, வெதுப்பாளர், அறை ஒழுங்குபடுத்துநர், மின்மோட்பர் மீள்முறுக்குநர்(வைண்டிங்), உணவுப் பரிசாரகர்,நீர்க்குழாய்பொருத்துநர் (பிளம்பிங்), தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்,முன்பள்ளி ஆசிரியர் அழகுக்கலை வல்லுனர், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடை வடிவமைப்பாளர் அலுமினியம் பெருத்துநர். கல்வித்தகைமை-கபொத (சாதாரண...

இந்திய, தென்பகுதி மீனவர்களின் அத்துமீறலை தடுக்க வேண்டும்! – சுமந்திரன்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மீன்பிடிக்கும் தென்பகுதி மீனவர்களின் செயற்பாடுகளை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக ஜே. வி. பி. கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில்...

மீனவர் பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன் கூட்டு ரோந்து, ஜெயலலிதாவுடன் பேச்சு! – சம்பந்தன் வலியுறுத்தல்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுடனும் இலங்கை அரசு பேச்சுகளை நடத்த வேண்டும் என்றும், இந்தியக் கடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்து நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் ஆலோசனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் ஏற்படும்...

வெள்ளைக்கொடியுடன் சென்று குடியேறுவோம்

எம்மை விரைவில் மீள்குடியேற்றம் செய்யாவிடின். ஒரு கையில் எமது காணிக்கான உறுதியுடனும், மறுகையில் வெள்ளைக் கொடியையும் தாங்கி உயர்பாதுகாப்பு வலய வேலிகளைத் தாண்டிய எமது சொந்த நிலங்களுக்குச் சென்று குடியமருவோம் என வலிகாமம் வடக்கில் இருந்து நலன்புரி நிலையத்தில் வசிக்கும் முத்தையா சிவானந்தன் தெரிவித்தார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள்...

தமிழ் பிரதிநிதி பொய்கூறும் போது இராணுவம் பொய்கூறுவது பெரிய விடயமல்ல – ஹர்மன் குமார

வடக்கில் ஒரு சிறு துண்டு நிலத்தையும் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கவில்லையெனவும், இராணுவம் நிலைகொண்டுள்ள காணிகள் அனைத்தும் அரசாங்கத்துக்கு சொந்தமான காணிகள் என இராணுவப் பேச்சாளர், தென்னிலங்கை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே ஜெனீவா சென்று பொய் கூறும் போது, அந்த இராணுவ ஊடக பேச்சாளர் பொய் கூறியது...

யாழ்ப்பாண வான் பரப்பில் மீண்டும் கிபீர் விமானம்

யாழ்ப்பாணத்தின் வான் பரப்பில், வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் 1.45 மணியளவில் கிபீர் விமானம் பறந்துள்ளது. யுத்த காலத்தில் அடிக்கடி கிபீர் விமானம் யாழ்ப்பாண வான் பரப்பில் பறந்திருந்து கடந்தக் காலங்களில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று பறந்துள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts