வலி. வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இன்று (11) பகல் மூன்று கிராம சேவகர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.
அரசாங்கத்தின் கிராமத்திற்கு பத்து லட்சம் ரூபா என்ற நிதித் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிராம சேவகர் அலுவலகங்களை, பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் திறந்து வைக்கவுள்ளார்.
அளவெட்டி வடக்கு ஜே 216, வீமன்காமம் ஜே 236, மற்றும் வறுத்தலைவிளான் ஜே.241 கிராம அலுவலர்கள் பிரிவுகளில் இந்த கிராம சேவகர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.
இந் நிகழ்வுகளில் வலி. வடக்கு பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன், வலி. வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சோ.சுகிர்தன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சயின் காகேசன்துறைத தொகுதி அமைப்பாளர் ஸ்ரீதாமோதரராசாவும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.