- Friday
- November 21st, 2025
நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. எம்.பிக்கள் பதவிப்பிரமாணம், சபாநாயகர் அறிவிப்பு, 23/2 இன் கீழான விசேட அறிவிப்பு ஆகியன முடிவடைந்த பின்னர் அமைச்சின் அறிவிப்பு இடம்பெற்றது. இதன் போது கொட்டிதெனியவில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சேயா என்ற சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும்...
நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது கடந்த 1995ம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 22ம் திகதி இலங்கை விமானப்படையின் கோரக்குண்டுவீச்சில் கொல்லப்பட்ட 21 பாடசாலைச் சிறார்களின் நினைவுதினம் நேற்று பெற்றோர்கள்,உறவினர்களின் கதறல்களுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டதுடன் பலியான மாணவர்களின் நினைவாக நிறுவபட்ட நினைவுத்தூபியும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நினைவுத்தூபியினை நேற்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் திறந்து...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் விசைப்படகுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 7.30 மணியளவில் யாழ். மாவட்ட மீனவர்களினால் யாழ். கடற்தொழிலாளர் நீரியல் வள திணைக்களத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 15 மீனவர்கள் சமாசங்களைச்...
இலங்கையில் கடந்த கால யுத்தத்தின் போது, தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றது இனவழிப்பில்லை என்று, எமது தரப்பினர்கள் ஜெனிவாவில் தெரிவித்திருப்பது வேதனைக்குரிய விடயமாகும் என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது. வடமாகாண சபையால் எந்த விடயத்தையும்...
அச்சு ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டவிதிகள் இலங்கையில் அமுலில் இருப்பது போன்று, இணையத்தளங்களையும் ஒழுங்குபடுத்த சட்டங்களை பின்பற்றுவது தொடர்பில் வெகுஜன ஊடக அமைச்சைக் கோருவதற்கான பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்தார்....
புதிய கொலனி கீரிமலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 16ஆம் திகதியிலிருந்து காணவில்லை என்று அவரது உறவினர்கள், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (21) முறைப்பாடு செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். அன்ரன் ஜயக்கோன் சிவகௌரி (வயது 36) என்ற பெண்ணே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள உறவினர்...
சட்டவிரோத கடத்தல்களைத் தடுக்கும் நோக்கில் ஏ - 32 வீதியின் (யாழ்ப்பாணம் - மன்னார்) சங்குப்பிட்டி பாலம் மற்றும் ஏ - 9 (யாழ்ப்பாணம் - கண்டி) வீதியின் ஏதாவது ஒரு இடத்தில் பொலிஸ் சோதனைச் சாவடியை அமைத்து, பயணிகள் வாகனங்கள் தவிர்ந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் சந்தேகப்படும்படியான வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என...
உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் கடந்த 15ஆம் திகதி திருமணத்துக்கென கனடாவில் இருந்து வந்த பெண்ணை கடத்திய பிரதான சந்தேகநபர், நேற்று முன்தினம் திங்கட்கிழமை (21) பருத்தித்துறை நீதிமன்றில் சட்டத்தரணியூடாக ஆஜராகினார். அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, திங்கட்கிழமை (21) உத்தரவிட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார்...
பாரிய மோசடி மற்றும் ஊழல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கு இன்று புதன்கிழமை சமுகமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான விளம்பரங்களுக்கு பணம் செலுத்தாமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
முப்பது வருடகால போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தை மீளக்கட்டி எழுப்புவதற்கு அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. மாவை சேனாதிராஜா வலியுறுத்தினார். போரின்போது அழிக்கப்பட்ட தொழிற்சாலைகளையும், மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளையும் மீளச் செயற்பட வைப்பதன் மூலம் இப்பிரதேச மக்களுக்கு பெருமளவிலான தொழில் வாய்ப்புகளை வழங்க...
ஐ.நா. அறிக்கையில் உரிய சாட்சியங்கள் எதுவுமின்றியே முப்படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், அறிக்கையின் சிபாரிசுகள் பயங்கரமானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் மஹிந்த ஆட்சியில் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். ஐ.நா. அறிக்கையின் சிபாரிசுகள் சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் வகையிலேயே அமைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும்...
வலி வடக்கின் மீள் குடியேற்றம் மிகவிரைவில் இடம்பெறும் என, தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்திற்கான குழுவின் பணிப்பாளர் நாயகம் மாளியக்க தெரிவித்ததாக, வலி வடக்கு பிரதேச செயலகத்திற்கான மீள்குடியேற்றத் தலைவர் தனபாலசிங்கம் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். அப் பகுதியில் காணப்படும் துறைமுகங்கள், மீன்பிடி இறங்குதுறைகள் என்பன மிகவிரைவில் விடுவிக்கப்படவிருப்பதாக அவர் கூறினார். வலி வடக்கு பிரதேச செயலகத்திற்கு...
யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் 05 ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மக்கள் நலன் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கூட்டம் நேற்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவகத்தின் ஏற்பாட்டிலும் முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டரநாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாகவும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது....
இலங்கை எல்லைக்குள் அத்துமீறி உட்பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 15 இந்திய மீனவர்கள் யாழ் பருத்தித்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா புதுக்கோட்டை மாவட்டம் நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்த இவர்கள் கடந்த 21 ஆம் திகதி இரவு யாழ் பருத்தித்துறைப் பகுதியை அண்மித்த கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை கடற்படையினரால்...
இந்திய - இலங்கை கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க வரும் இரு தரப்பு மீனவர்களை இருநாட்டு கடற்படையோ, கடலோரக் காவல் படையோ தாக்கக் கூடாது என்று டெல்லியில் நடைபெற்ற இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. "இந்திய - இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தை´ எனும் பெயரில் இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைச்...
இலங்கை இறுதிப் போர் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கையானது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் சாதகமானது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார். இறுதிப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை இலங்கையின் வட மாகாண சபையில் நேற்று தாக்கல்செய்யப்பட்டது. இதையடுத்துப் பேசிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்கான மக்களின்...
தேசிய வெங்காய உற்பத்தியாளர்களின் நன்மை கருதி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் இறக்குமதி வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் வெங்காய அறுவடை தற்போது நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கும் அதிகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கிடையாதென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கே இருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள்...
இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது கட்டாயமானதாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். இதன்போது உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த காலத்தில் இடம்பெற்ற விரும்பத்தகாத செயல்முறைகள் மீண்டும் நாட்டில் இடம்பெறாதிருக்க...
கம்பஹா கொடகதெனியா பகுதியில் 4 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்தின் பின் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூர நிகழ்வை வன்மையாகக் கண்டிக்கும் வகையில் அண்மைக்காலத்தில் நாட்டின் பலபாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவது தெரிவதே. அதேபோல் அளவெட்டியிலுள்ளவிநாயகர் விளையாட்டுக் கழகத்தின் இளைஞர்களால்சோயாவின் துர்மரணம் சம்பந்தமாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி முன்றலில் இருந்து...
Loading posts...
All posts loaded
No more posts
