Ad Widget

சிகரட் மற்றும் மதுபான விலைகள் அதிகரிப்பு

சிகரட் மற்றும் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சிகரட் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிகரட் ஒன்றின் விலை 33 ரூபாக அதிகரித்துள்ளது.

5% க்கு குறைவான அல்கஹோல் கலந்த மதுபானங்களின் விலை ஒரு லீற்றருக்கு 40 ரூபாவும் 5% க்கு மேல் அல்கஹோல் கலந்த மதுபானங்களின் விலை ஒரு லீற்றருக்கு 60 ரூபாவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வெளிநாட்டு மதுபானங்களின் விலைகள் 160 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் புதிய விலைகள் இன்று முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts