Ad Widget

மோடி, ஒபாமாவை அடுத்து ஜப்பான் பாராளுமன்றத்தில் ரணில்

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் கன்சாய் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றுள்ளார்.

இன்றையதினம் அந்த நாட்டில் இடம்பெறவுள்ள விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த மாநாட்டில் பல்வேறு அரச தலைவர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக ஜப்பான் ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

மேலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஊடகவியலாளர்களும் செய்தி சேகரிப்புக்காக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் திங்கட்கிழமை ஜப்பான் பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

இதுவரை அந்த நாட்டு பாராளுமன்றத்தில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு வௌிநாட்டுத் தலைவர்களே உரையாற்றியுள்ளனர்.

மேலும் இந்த விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்க ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் பேரரசர் அக்கிஹிட்டோ ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளார்.

அத்துடன் ஜப்பான் பிரதமருடன் இரவுப் போசனம் ஒன்றிலும் இலங்கைப் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளதாக, ஜப்பானுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பல இருதரப்பு ஒப்பந்தங்களும் ரணிலின் இந்த விஜயத்தின் போது கைச்சாதிடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

Related Posts