- Friday
- November 21st, 2025
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவருக்குரிய ஆசனத்தில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். ஈ.சரவணபவன் அமர்ந்தார். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு உரித்தான ஆசனங்களில் வேறு எவரேனும் உறுப்பினர்கள் அமர்தல் ஆகாது என்பது பாராளுமன்ற மரபாகும். எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்த உறுப்பினர் சரவணபவன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் உரையாடிக்...
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவினால் நடத்தப்பட்ட கையெழுத்து வேட்டையின் போது பெறப்பட்ட ஒன்றரை இலட்சத்திற்கு அதிகமான கையெழுத்துக்கள் அடங்கிய பிரதிகள் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான அலுவலர் பிரதீப் வகிஸிடம்...
வடக்கு கிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1,37,529 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நவீன துரித வீட்டுத் திட்டக் கட்டுமானப் பணிகளுக்கான ஆர்வலர்களிடமிருந்து திட்டக்கோரலுக்கான பத்திரங்களை நிதியிடல் வசதியுடன் பெற்றுக் கொள்ள புனர் வாழ்வளிப்பு மீள் குடியேற்றம் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கு...
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் முக்கிய கலந்துரையாடலொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போது ஐ.நா.வின் அறிக்கையிலும், குறித்த பிரேரணையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டுமென அரசாங்கத்தால் கோரப்பட்டுள்ள சொற்றொடர்கள், புதிதாக இணைக்கப்படவுள்ள சொற்றொடர்கள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டதாக தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் மனித...
வடபகுதி கடலில் இந்திய டோலர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை கண்டித்து, வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம், யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து நடத்திய, அறவழிப் போராட்டம் புதன்கிழமை (23) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 'அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக வடபகுதி கடலை விற்காதீர்கள்'...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமான நடைப்பவணி புதன்கிழமை (23) காலை நடைபெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகிய இந்த நடைபவனியானது, காங்கேசன்துறை வீதி வழியாக சென்று மணிக்கூட்டு கோபுரத்தை அடைந்து, அங்கிருந்து கல்லூரி வீதி பலாலி வீதி சந்தியை சென்றடைந்து பலாலி வீதி வழியாக கந்தர்மடச் சந்தியை அடைந்து,...
நுணாவில், அல்லிக்கரை ஒழுங்கையிலுள்ள வீடுகள் இரண்டு 15 பேர் கொண்ட இனந்தெரியாத குழுவொன்றினால் செவ்வாய்க்கிழமை (22) இரவு 11 மணியளவில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்த இருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலசுப்பிரமணியம் சந்திரலேகா (வயது 56), அவரது மகன் பாலசுப்பிரமணியம் அஜந்தன் (வயது 35) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
கைதடிப் பகுதியில் இரண்டு பெண்களை தாக்கி, அவர்களின் ஆடைகளைக் கிழித்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரம், புதன்கிழமை (23) உத்தரவிட்டார். கைதடி பகுதியிலுள்ள சனசமூக நிலையமொன்றில், கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில்,...
சுன்னாகம் நகரப்பகுதியில், பாடசாலை மாணவர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரையும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும், நான்காவது சந்தேகநபரை எச்சரித்த நீதவான், அவரை...
மோட்டார் சைக்கிளில் பயணித்த விசேட தேவையுடைய ஒருவரை, போக்குவரத்து பொலிஸார் நடைபாதையில் போட்டு புரட்டி, புரட்டி தாக்கிய சம்பவம் கஹட்டகஸ்திகிலிய நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கஹட்டகஸ்திகிலிய பொலிஸின் போக்குவரத்து பொலிஸ் பிரிவு அதிகாரிகளினால் நேற்று முன்தினம் 22ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை காலைவேளையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வீடியோ சமுக மற்றும் செய்தி வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன....
கிளிநொச்சி நீதிமன்றில் இருந்து திருடி வந்த 18 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் 7 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்ய வவுனியா மாவட்ட நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி நீதிமன்றில் குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நிலையில் அறை...
தன்னலம் பேராசைகளிலிருந்து விடுபட்டு ஏழை எளியோர்க்கு வாரி வழங்கி சமூகத்தின் உயர்வு, தாழ்வுகளை போக்க அனைவரும் முன்வர வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முழு மனித சமூகமும் ஆன்மீக மற்றும் லெளகீக ரீதியிலான வெற்றியை அடைந்துகொள்ள வேண்டுமாயின் நாம் அனைவரும் தன்னலம்...
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணைக்கான வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ எண்ணைக்கான விஷேட பாண்ட வரி 90 ருபாவில் இருந்து 110 ரூபாவாக உயர்வடைந்துள்ளது என, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய எண்ணெய் உற்பத்தியாளர்களின் நலனுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடதெனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், நேற்று கைதான சந்தேகநபர் தானே அதனைச் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என, பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரயந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர் தொடர்ந்தும் காவலில் வைக்கப்பட்டு விசாரணை...
வடக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தமக்கிடையே மோதிக் கொண்டதால் சபை நடவடிக்கைகள் நேற்று பாதிப்படைந்தன. நீண்ட நாட்கள் நிலவி வந்த பனிப்போர் நேற்றைய தினம் கடுமையாகியதாலேயே சபை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன. முதலமைச்சர் தலைமையில் அவைத் தலைவர் தலைமையில் ஒரு அணியும் என பிரிந்த இரு அணிகளும் நேற்று மோதிக் கொண்டன. இதனை எதிக்கட்சியினர் அமைதியாக இருந்து...
வேலணை, சரவணை பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவரை, கத்தி முனையில் கடத்திய இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (22) மாலை கைது செய்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். திருமணமாகி 8 மாதங்களாகிய குடும்பப் பெண்ணை, இரண்டு சந்தேகநபர்கள் செவ்வாய்க்கிழமை (22) காலையில் கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை...
யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களில் 20 பேரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் 21 ஆம் திகதி யாழ். நகரப்பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் யாழ்....
சைக்கிளில் சென்ற மாணவி முன் ஆட்டோவில் சாகசம் செய்து மாணவியை காயப்படுத்திய ஆட்டோ சாரதியொருவரை சுன்னாகம் பொலிசார் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம் நேற்று பிற்பகல் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி நேற்று பிற்பகல் பாடசாலை முடிவடைந்ததும் வழமை போன்று சைக்கிளில் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த ஆட்டோ...
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவையடுத்து சுன்னாகம் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படை பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு அங்கு தெருச்சண்டித்தனத்திலும், வாள் வெட்டு ரவுடித்தனத்திலும் ஈடுபடும் கும்பல்களையும் மற்றும் தேடப்படுபவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ.எம்.பெரேரா தெரிவித்துள்ளார். சுனனாகம் நகரில் கடையொன்றுக்குள் புகுந்த 9 பேர் அடங்கிய...
நீதிபதி இளஞ்செழியன் யாழில் வாள்வெட்டுக் கலாசாரத்தில் ஈடுபடும் ரவுடிகளை அடக்குமாறு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு உத்தரவு பிறப்பித்த 24 மணி நேரத்திற்குள் யாழ்.கொக்குவில் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இத் துணீகர வாள்வெட்டுச் சம்பவத்தினால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்சவனப் பகுதியில் இரவு 7 மணியளவில் இனந்தெரியாத...
Loading posts...
All posts loaded
No more posts
