“வடமாகாண வல்லவன் ”யார்? யாழ் மாவட்டமா? மன்னார் மாவட்டமா?

அக்கினி இசைக் குழுவின் இசைச் சமருடன் கூடிய மாபெரும் இறுதிப் போட்டி.“வடமாகாண வல்லவன்”; யார்? யாழ் மாவட்டமா? மன்னார் மாவட்டமா? எதிர்பார்ப்பிற்கு பஞ்சமில்லாத சுவாரஷ்யமான போட்டி. “தினச்செய்தி”யின் அனுசரணையில் மாபெரும் பரிசு மழை பொழியும் உதைபந்தாட்டத் தொடராக கருதப்படும் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் வி.க நடாத்தும் “வடமாகாண வல்லவன்” உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி( 26.09.2015) இன்று...

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா இன்று!

சரித்திரப் பிரசித்தி பெற்ற வடமராட்சி ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (26) சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இன்று காலை 08.30 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை ஆரம்பமாகி நடைபெற்று அதன் பின்னர் சுவாமி காலை 10 மணியளவில் தேருக்கு எழுந்தருளவுள்ளார். இதனைத் தொடர்ந்து சுவாமியின் தேர் ஆரோகணம் காலை 10. 30 மணிக்கு...
Ad Widget

வடக்கு விவசாய அமைச்சரின் நன்கொடை நிதியில் இருந்து ரூபா 3 மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைப்பு

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் 2015 ஆம் ஆண்டுக்குரிய பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து ரூபா 3 மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி விவசாய அமைச்சின் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை (23.09.2015) நடைபெற்றபோது அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு உரிய பயனாளிகளுக்குப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். பிரமாண...

போக்குவரத்து அதிகார சபைமூலம் வடக்கில் வேலைவாய்ப்பு

பயணிகள் போக்குவரத்து அதிகார சபையை உருவாக்கத் தீர்மானித்துள்ளதாகவும், அந்த அதிகார சபையில் 100 இற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியுமெனவும், வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் – “போக்குவரத்து நியதிச்...

மஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றமை இலங்கையின் முதலாவது சம்பவம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியொருவரை விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலம் பெற்றுக்கொண்ட முதலாவது தருணத்துக்கு மஹிந்த ராஜபக்ஷ முகங்கொடுத்தததாக பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பான விசாரணை குழுவின் செயலாளர் செயலாளர் லெசில் த சில்வா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு ஆணைக்குழுவின் அதிகாரிகளை அனுப்பி விசாரணைகளை முன்னெடுத்தமையானது, பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகளை விசாரணை...

அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையை வரவேற்கிறது கூட்டமைப்பு!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து பொதுநலவாய மற்றும் வெளி நாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய நம்பகரமான நீதிச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி, அமெரிக்கா சமர்ப்பித்துள்ள திருத்தப்பட்ட புதிய பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித அலுவலகம் வௌியிட்ட அறிக்கையின்...

புதிய தீர்மான வரைவை ஜெனிவாவில் முன்வைத்தது அமெரிக்கா! – வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனேயே விசாரணை

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை கோரும் அமெரிக்காவின் தீர்மான வரைவு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை தொடர்பான தீர்மானத்திற்குப் பிரதான அனுசரணையாளரான அமெரிக்காவுடன் பிரிட்டன், மஸிடோனியா, மொன்டிநிக்ரோ மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் இணை அனுசரணை வழங்கியுள்ளன. விரைவாக...

வன்புணர்வுக்குப் பின்னர் பெண்ணைக் கிணற்றுள் தள்ளி கொல்ல முயற்சி : வேலணைக் கடத்தல் குறித்த மேலும் தகவல்கள்

வேலணையில் அத்துமீறி வீடு புகுந்து பெண்ணைக் கடத்தியவர்கள்,அவரை வன்புணர்ந்த பின்னர் கிணற்றில் போட்டுக் கொலை செய்ய முற்பட்டுள்ளனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அந்தப் பெண் அவர்களது காலில் விழுந்து கதறியதோடு புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டதால் உயிர்தப்பியுள்ளதாகக் கூறப்படுகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேலணையிலுள்ள குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டுக்கு இரண்டு சந்தேக நபர்களும் சென்றுள்ளனர். அவர் திருமணமாகி 7...

தமிழ் – சிங்கள உறவுப் பாலத்தை ஒன்றிணைப்பேன் – அகிலவிராஜ்

தமிழ், சிங்கள மக்களுக்கிடையில் உறவுப்பாலத்தை வளர்ப்பதற்காக எனது தந்தை பணியாற்றியதை போல, தமிழ் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை பேணும் வகையில் செயற்படுவேன் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா, வியாழக்கிழமை (24) நடைபெற்ற போது, அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்...

பஞ்சவர்ண நரியார் சிறுவர் நாடகம் ஞாயிறன்று மேடையேற்றப்படும்

'பஞ்சவர்ண நரியார்' சிறுவர் நாடகம், எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் மேடையேறவுள்ளது. குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய இந்த நாடகத்தை செயல்திறன் அரங்க இயக்கம் தயாரித்துள்ளது. நல்லூர் நாடகத் திருவிழா 2015இல் மேடையேற்றப்பட்ட இந்த நாடகம், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்...

ஜெனீவாவுக்கு சென்றார் அனந்தி

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், புதன்கிழமை (23) ஜெனீவாவுக்கு பயணமானார். வடமாகாண சபையில் விடுமுறை பெற்றுக்கொண்டு, வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவின் அனுமதியுடன் இவர் ஜெனீவாவுக்கு சென்றுள்ளார். 'இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்' மற்றும் 'இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனஅழிப்பு'...

அடிவாங்கியவருக்கு எதிராக 9 வழக்குகள் உள்ளன

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய நகரத்தில் வைத்து கடந்த 22ஆம் திகதியன்று போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட விசேட தேவையுடையவருக்கு எதிராக இதுவரையிலும் ஒன்பது வழக்குகள் உள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த நபர், போக்குவரத்து பொலிஸாரின் சமிக்ஞையை மீறி, மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றதாகவும் அவரிடம், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அவருக்கு எதிராக,...

30% ஊ.சே.நி கடன் மாகாணங்களுக்கு வருகிறது

ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்புரிமையாளர்கின் கணக்கில் இருந்து நூற்றுக்கு 30 சதவீதத்தை கடனாக பெற்றக்கொள்ளும் வேலைத்திட்டம் மாகாண மட்டத்தில் விரிவுப்படுத்துமாறு தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் டப்ளியு. ஜே.செனவிரத்ன உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த செயற்பாடு, பிரதான காரியாலயத்தில் மட்டும் முன்னெடுக்கப்படுவதால், கடுமையாக தாமதமாகின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடன் பெற்றுக்கொள்வதற்கு 65...

பூமியை கடக்கவுள்ள விண்கல் – மனித குலமே அழியுமா?

இராட்சத விண்கல் ஒன்று இன்று பூமியை கடக்க உள்ளது. இதனால் மனிதகுலமே அழியும் என்ற பீதி கிளம்பி உள்ளது. ஆனால், இதனை நாசா மறுத்துள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள தகவலில், சுமார் 270 மீட்டர் சுற்றளவுடைய இராட்சத விண்கல் பூமியில் இருந்து 50 இலட்சம் மைல் தொலைவில் கடக்க உள்ளது உண்மை தான். ஆனால்...

ஆஸி.க்கு செல்ல முற்பட்ட ஆறு இலங்கை அகதிகள் இந்தியாவில் கைது

தமிழக அகதி முகாம்களில் இருந்த ஆறு இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட போது கைதாகியுள்ளனர். கொச்சி பொலிஸாரால் முனம்பம் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. மேலும் இவர்களுடன் நான்கு இந்தியர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பின் உடல் நிலையில் முன்னேற்றம்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கும் ஆலோசனை மருத்துவர் டாக்டர் பெண்டன் ஜியாப் கூறுகிறார். சிங்கப்பூரிலிருந்து பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், டாக்டர் ஜியாப், "ஆயரின் உடல் நிலை இப்போது நன்றாக இருக்கிறது. அவரது வலது கையிலும் வலது...

வடக்கில் 860 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

அரசியல் கைதிகளின் குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் பிள்ளைகளை இழந்த பெற்றோர் என 860 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் இவ்வருட இறுதிக்குள் வழங்கப்படும் என வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, குறித்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் பொருட்டு,...

யாழில் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்

யாழ் முற்றவெளி அரங்கில் காலையில் ஒன்று கூடிய முஸ்லீம் மக்கள் தமது ஹஜ் பெருநாளின் விசேட தொழுகையை மேற்கொண்டதுடன் தமது உறவுகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா். ஹஜ் பெருநாள் தொழுகையின் போது நாட்டில் அமைதி நிலவ வேண்டியும் மக்கள் சுபீட்சமடைய வேண்டியும் பிரார்த்திக் கொண்டனா். ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை...

செம்டெம்பர் 26ம் திகதி மாபெரும் இரத்த தான முகாம்! – யாழ் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கம் அழைப்பு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரியின் 125 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு செம்டெம்பர் 26ம் திகதி சனிக்கிழமை மாபெரும் இரத்த தான முகாம் ஒன்றினை  யாழ் இந்துக்கல்லுாரி யின் யாழ்ப்பாணம்  பழையமாணவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது . காலை 9 மணிதொடக்கம் 3 மணிவரை இடம்பெறவுள்ள இந்த இரத்ததானத்தில் பங்குகொண்டு கல்லுாரிக்கும்  கல்லுாரிக்கு பெருமைசேர்த்தவர்களுக்கும் பெருமை சேர்க்குமாறு பழையமாணவர்சங்கம்...

கல்வியமைச்சர் தனியார் உலங்கு வானூர்தியில் தரையிறக்கப்பட்டார்! நிகழ்வில் சரா எம்பியின் சிறப்புரிமை மீறப்பட்டது!

யாழ் இந்துக்கல்லூரி 125 ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டங்களை பழைய மாணவர்சங்கம்  புறக்கணித்துள்ள நிலையில் இன்றைய(24) முதல் நாள் நிகழ்வுக்கு மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்ச பிரதம விருந்தினராக வந்து கலந்து கொண்டார்.யாழ் இந்துக்கல்லுரிக்கு கல்வியமைச்சர் உலங்கு வானூர்தியில் வந்திறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. [caption id="attachment_50594" align="aligncenter" width="587"] Daya Aviation என்ற தனியார் நிறுவனத்தின் கெலியில் 300,000...
Loading posts...

All posts loaded

No more posts