Ad Widget

பொலிஸ் பதவிக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 10ம் திகதி

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறும் யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு. கே. ஜயலத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடகிழக்கு பிரதேசத்தில் பணி புரிவதற்கு தமிழ் மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது.

கடந்த காலங்களில் தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிப்பது மிக குறைவாக இருந்தது.

அதனால், தற்போது விஷட சுற்றறிக்கையின் பிரகாரம், பெண் பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

அனால், கடந்த நியமனங்களின் போது, எதிர்பார்த்த அளவு பெண் பொலிஸ் பரிசோதகர்கள் நியமிக்கப்படவில்லை.

25 பெண் பொலிஸ் பரிசோதகர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில், இரண்டு பெண் பரிசோதர்கள் தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பகுதிகளில் தமிழ் மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 1400 பேர் கடமையாற்றி வருகின்றார்கள்.

தற்போது, வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான முதலவாது நேர்முகத் தேர்வு எதிர்வரும் 10 ஆம் திகதி யாழ். மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பித்தவர்கள் தவறாது நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறும், நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பொலிஸ் உத்தியோகம் நல்ல உத்தியோகம் எனவே, நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறும் அதேநேரம், தெரிவு செய்யப்படும் நபர்கள் வடமாகாணத்திலேயே கடமைக்கு அமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts