Ad Widget

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமான கலந்துரையாடல் ஒன்று நேற்று புதன்கிழமை வட மாகாண போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது.

வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனின் திட்டத்திற்கு அமைவாக, வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குள் முதற் கட்டமாக விசேடமாக தெரிவு செய்யப்பட்ட 120 முன்னாள் போராளிகளின் தேவை மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இவ் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான திட்டங்கள் தொடர்பில் பயனாளிகளிடம் இருந்து அவர்களது தேவைகள் தொடர்பிலான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவர்களுக்கான உதவித்திட்டம் விரைவில் வழங்கப்படவுள்ளது. அத்துடன் இதேபோன்று தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தேவை மதிப்பீடு செய்யும் கலந்துரையாடல்கள் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் திட்டமிடப்பட்டடுள்ளன.

வவுனியாவுக்கான கூட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதியும், மன்னாருக்கான கூட்டம் 14 ஆம் திகதியும் கிளிநொச்சிக்கான கூட்டம் 15 ஆம் திகதியும் முல்லைத்தீவுக்கான கூட்டம் 16 ஆம் திகதியும் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts