- Friday
- November 21st, 2025
ஐக்கிய நாடுகளின் விசேட குழுவினர் இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். யாழ்ப்பாணம் கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உரிமைகளுக்கான அமைப்பு மற்றும் உறவினர்களுடன் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரும் யாழில் காணாமல் போனவர்களினதும், கடத்தப்பட்டவர்களினதும் உறவினர்களை குறித்த குழுவினர் சந்தித்து முறைப்பாடுகளைப் பெற்று...
தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு நேற்று கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ள நிலையிலும் பொது மன்னிப்பு கோரிய அரசியல் கைதிகளின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 5ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளில் 7 பேர் மயக்கமுற்ற நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
பாடசாலை மாணவிகள் ஏழு பேர் நடத்துனரால் பேரூந்தில் இருந்து வெளியில் தள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். யாழிலிருந்து -திருகோணமலை நோக்கிப் பயணிக்கும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ் வவுனியா பஸ் தரிப்பிடத்தில் தரித்து நின்றபோது பஸ்ஸின் உள்ளே ஏறிய மாணவிகள் 7 பேரே இச்சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்....
தீபாவளி தினமான 10-11-2015 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் சிறுவர்கள் புத்தாடை அணிந்து மிக மகிழ்வாக தீபத்திருநாளாம் தீபாவளியை கொண்டாடினர். மகிழ்வான தீபாவளியன்று அருள்மிகு முல்லைத்தீவு வற்றாப்பளை அம்பாள் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்த பின்னர் சகோதர இல்லமான முல்லைத்தீவு பாரதி சிறுவர் இல்லத்தை சென்றடைந்தனர். அங்கு தமது மதிய உணவின் பின்னர் அங்கு...
கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருள் இடைவழியில் சிதறினால் அதன் பாகங்களை தொட வேண்டாம் !!
வெள்ளியன்று முற்பகலில் தென்பகுதி கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால் நிலப் பகுதியில் விழும் அதன் பாகங்களை எவரும் தொட வேண்டாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீட பேராசிரியரும் வான சாஸ்திர விஞ்ஞானியுமான சந்தன ஜயரட்ன நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்:- இலங்கையின் தென்பகுதியிலுள்ள தேவேந்திரமுனையிலிருந்து...
தமிழ் அரசி யல் கைதிகளின் விடயத்திற்கு விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்குமென தெரிவித்துள்ள அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார். சிறைச்சாலைகள் விவகார அமைச்சராக நேற்று பதவியேற்ற பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது. அவை தொடர்பில் விசேட கவனமெடுக்கப்படவுள்ளன....
யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களை மீளக் குடியேற்றுவது தொடர்பில் எழுந்துள்ள செயன்முறை நெருக்கடிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அவற்றுக்கான தீர்வுகளையும், யோசனைகளையும் முன்வைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...
இலங்கையில் அவன்கார்ட் நிறுவனத்தை உடனடியாக தடை செய்து அதனுடன் தொடர்புடைய அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் கடற்படையினரிடம் கையளிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன பி.பி.சிக்குத் தெரிவித்துள்ளார். அவன்கார்ட் விவகாரம் தொடர்பில் முடிவு ஒன்றை எட்டுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த விசேட கலந்துரையடலையடுத்து இந்த தீர்மானம்...
ஊவா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை நேரத்தில் கைத்தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடைசெய்யப்படவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடை செய்யப்படவுள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவிக்கின்றார். அத்துடன் மாணவர்கள் சிலரும் பாடசாலைக்கு கைத்தொலைபேசிகளை எடுத்து வருவதாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் நடவடிக்ககை எடுக்க பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்...
தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிப்பதற்கான பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 10,000 ரூபாவாக அதிகரிக்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
புயைிரதம் ஒன்று தடம் புரண்டதால் வடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தம்புத்தேகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் புயைிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அரசியல் கைதிகள் அனைவரதும் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை(13-11-2015) திட்டமிட்டவாறு நடைபெறும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அறிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது பல நூற்றுக் கணக்கானவர்கள் தசாப்தகாலமாக கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் வாடும்போது ஒரு சிலருக்கு மட்டும் பிணைவழங்குவதன் மூலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு...
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான அறிவித்தல் கிடைக்கப்பெறவில்லை எனக்கூறி எதிர்வரும் நவம்பர் 24ம் திகதி வரை அவர்களை...
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார். மேலும் தெற்கு அபிவிருத்தி மற்றும் பிரதமர் காரியாலய பொறுபதிகாரியுமான சாகல ரத்னாயக்க, சட்ட, ஒழுங்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இப்பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதியின் முன்னிலையில் இருவரும் பதவிப் பிரமாணம் செய்தனர். நேற்று...
கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDA) பாடநெறி பி.கொம் (B.Com) பட்டத்திற்கு சமனானதாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தும், இதுவரை வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவில்லை என்று அகில இலங்கை மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவிக்கின்றார். அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி பல நாட்கள் கடந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று...
பாடசாலை ஆசிரியைகள் தொப்புள் தெரிய சேலை அணியக்கூடாது என்ற விதியை கொண்டுவரப்போவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய விடுத்திருந்த அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவிகள் அணியும் நடன ஆடையைக் கூட தொப்புள் தெரிவது போல அணிய அனுமதிக்கப்போவதில்லை என்று முதலமைச்சர் விடுத்திருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தாம் அணியும் ஆடைகள்...
யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு உட்பட்ட நாகதீபம் என்ற தீவின் பெயரை மாற்றுவதற்கு முடியாது என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கடந்த 5ம் திகதி வடமாகண சபை அமர்வின் போது பெயர் மாற்றம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிடும் போது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் நினைவுப் பேருரை யாழ்.சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் நேற்று பிற்பகலில் இடம்பெற்றது. இதன்போது அமரர் ரவிராஜின் உருவப் படத்திற்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றுவரும் மலர்க்கண்காட்சியை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து பார்வையிட்டுச் செல்வதோடு மரக்கன்றுகளையும் வாங்கிச் செல்கின்றனர். அலங்காரப் பூச்செடிகளை மாத்திரம் அல்லாமல் பழமரக்கன்றுகள், தென்னம் நாற்றுகள், தேக்கு, சமண்டலை போன்ற வெட்டுமரக்கன்றுகள், பூச்சாடிகள் போன்றவற்றை வாங்குவதிலும் பொதுமக்கள் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு மலர்க்கண்காட்சியில் விற்பனையான மரக்கன்றுகளைவிட இந்த...
தம்மை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் மூவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இவர்களில் ஒருவர், கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர் என்றும் மற்ற இருவரும் பல்லேகல தும்பர சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்றும் அறியமுடிகின்றது. தங்களை விடுவிக்குமாறு கோரி இரண்டாவது முறையாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள...
Loading posts...
All posts loaded
No more posts
