யாழ். செயலகத்துக்குப் பின் புறமாக உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற கார் ஒன்றை கொழும்பில் இருந்து யாழ். நோக்கி வந்த கடுகதி ரயில் மோதிய கோர விபத்தில் ஒருவர் பலியானதுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதில் காரில் பயணம் செய்த தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியலாளராக கடமையாற்றும் வி.சுதாகரன் (வயது 41) என்பவர் உயிரிழந்தார். அரவிந்தன் (வயது 28), தர்மதாசன் (வயது 23), ஆதவன் (வயது 28) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
ரயில் காரை மோதியதுடன் சிறிது தூரம் இழுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.