Ad Widget

யாழில் பல்கலைகழக கல்வி அமைச்சர்

புதிதாக நிர்மானிக்கப்பட்டுவந்த யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கான கட்டிடம் நேற்று(22) திறந்து வைக்கப்பட்டது.

jaffna-uni-1

யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதியை பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல திறந்துவைத்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் செல்வி. வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான்.டீ சில்வா,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் பீ.எஸ்.எம் குணரத்ன,அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,யாழ். மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,தர்மலிங்கம் சித்தார்த்தன்,ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்நிகழ்வில் உரையாற்றும்போது,யாழ் பல்கலைக்கழக கல்வி வளர்ச்சிக்கும்,வட மாகாண கல்வி வளர்ச்சிக்கும் மேலதிக நிதியினை ஒதுக்குவதாக தெரிவித்தார்.

Related Posts