- Friday
- November 21st, 2025
யாழ் மாவட்டத்தை உள்ளடக்கிய வடமாகாணத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றது என யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் சிவன்சுதன் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் உள்ளவர்களே அதிகளவில் இந் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (11) நண்பகல் நடைபெற்ற...
முன்னாள் விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவு தலைவர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி சம்பந்தமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடக் கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது....
விண்ணில் இருந்து ´WT1190F´ என்று பெயரிடப்பட்ட மர்மப்பொருள் ஒன்று இன்று இலங்கை நேரப்படி 11.48 இற்க்கு வீழ்வதை அடுத்து, இலங்கையின் தென்பகுதி கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருள், கரைக்கு அண்மித்த கடற்பகுதியிலேயே வீழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. காலிக்கும் ஹம்பாந்தோட்டைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியிலேயே இந்த மர்மப்பொருள் வீழும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் குறித்த...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கு தன்னால் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தனக்குள்ள அதிகாரங்களை கைவிட்டு ஜனநாயக சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்புவது இன்றியமையாத ஒன்று எனத் தெரிவித்தார். மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை பாராளுமன்ற மைதானத்தில்...
நம்பிக்கையை கைவிடாது தொடர்ந்து போராடுங்கள், எங்களால் முடிந்த நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம் என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தார் காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா செயற்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ரியூக் பெய்ங். காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் வாக்கு மூலத்தை பெற்றுவதற்காக காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராயும் ஐ.நா செயற்குழு யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின்...
அரசியல் கைதிகளில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் உரியமுறையில் இன்னும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவரவில்லை, இதனால் நேற்று பிணையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரை மாத்திரமே இன்று அவர்களின் உறவினர்கள் சரீரப் பிணையில் அழைத்துச்சென்றனர். இவ்வாறு நேற்று சரீரப் பிணையில் செல்ல அனுமதிப்பட்டவர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன . 1. தங்கராஜா புவனேஸ்வரன் 2. சுந்தரலிங்கம் அகிலன் 3....
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையினைக்கோரி தொடர்ந்து 5 தினங்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில், குறித்த கைதிகளில் 18 கைதிகளின் உடல்நிலை மோசமாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள் என வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சந்திப்பு பற்றி முதலமைச்சர்...
தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவாகியிருக்கும் இந்த காற்றழுத்தம், தீவிரம் பெற்று, இலங்கை மற்றும் தென்னிந்தியாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இலங்கையிலும், தென்னிந்தியாவிலும், இந்த வார இறுதியில் அல்லது...
நீண்டகாலமாக இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி நாளை 13ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண கடையடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் விதமாக நாளை வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடையடைப்பு...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட இரண்டு கைதிகள், புதன்கிழமை (11) இரவு தப்பி ஓடியுள்ளனர். தப்பி ஓடிய கைதிகளை நாவற்குழிப் பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று வியாழக்கிழமை (12) அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்தும் அவர்கள் தப்பித்து ஓடியுள்ளனர். இந்தக் தகவலை சாவகச்சேரி...
சாவகச்சேரி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, நாளை வெள்ளிக்கிழமை (13) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர். அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...
யாழில் முதற்தடவையாக பாடசலைகளில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்தடவையாக இயங்கவுள்ள மாணவர் பாராளுமன்றத்திற்கான முதலாவது தேர்தல் நேற்று [11] யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. எதிர்காலத்தில் மாணவர்களிற்கிடையே வன்முறையற்ற, ஜனநாயக முறையில் பிரச்சனைகளை அணுகுவதை ஊக்குவிப்பதை நோக்காக கொண்டு இந்த செயற்திட்டம் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவர்...
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய சீருடைக்குப் பதிலாக 2016ம் ஆண்டு முதல் கூப்பன் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யுபி. எம். பந்துசேன தெரிவித்தார். எனினும் அவற்றை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பான மேலதிக செயற்பாடுகள் பற்றி இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று...
வெங்காயச் செய்கையில் ஈடுபட்ட யாழ்.மாவட்ட விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழை காரணமாக நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். பெருமளவான வெங்காயச் செய்கையானது அழிவடைந்துள்ளது. இது தொடர்பில் வெங்காயச் செய்கையாளர் ஒருவர் கூறுகையில், 'நான் எனது தோட்டத்தில் 250 கன்றுகளை நாட்டியிருந்தேன். இன்னும் 20 நாட்களுக்கு பின்னர் மழை பெய்திருந்தால் முழுமையான அறுவடையைப் பெற்றிருப்போம். அதனால் எனக்கு 1½...
நம்பிக்கை மோசடி செய்து நகைகளை விற்ற கூவில் கீரிமலை பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய பெண்ணை, நேற்று புதன்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். திருமண வீடு, ஏனைய வைபவங்களுக்கு அணிந்து விட்டுத் தருவதாகக் கூறி, அயல் வீடுகள் இரண்டில் கடந்த 7ஆம் திகதி நகைகளை குறித்த பெண் வாங்கியுள்ளார். வாங்கிய...
யாழ்.மாவட்டத்திலுள்ளவர்களில் 16.4 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோயுள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிறுநீரக வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்தார். நீரிழிவு தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், இலங்கையில் வடக்கு, கிழக்கு...
இளவாலை சென்.ஜேம்ஸ் பகுதியில், 12 நாட்களுக்கு முன்னர், குழந்தையொன்றை பிரசவித்த தாய், நெஞ்சுவலி காரணமாக நேற்று புதன்கிழமை (11) உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஜேசப் மரியகஸ்டா (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொர்புடைய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் கைதிகள், தங்கள் விடுதலையை வலியுறுத்தி இங்கு உண்ணாவிரதம் இருக்க, அவர்களை 7ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதாக நேரில் சென்று உறுதிமொழி கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், இந்தியா, டெல்லியில் இருப்பது சரியில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று புதன்கிழமை (11)...
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கு அண்மையில் வீதியில் நடந்து சென்றவரை வழிமறித்த இருவர், அவரிடம் தீப்பெட்டி கேட்டபின்னர், அவரை கத்தியால் கீறி, கன்னத்தில் கடித்த சம்பவம் தீபாவளி தினத்தன்று நடைபெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த ஐயாத்துரை ராஜசேகரம் (43) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 17 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் இருவரே இவ்வாறு செய்துள்ளனர். இந்த...
Loading posts...
All posts loaded
No more posts
