Ad Widget

மஹபொல தொகையை 4 ஆயிரமாக உயர்த்த அமைச்சரவை அனுமதி!

பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசிலுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 2,500 ரூபாவை 4 ஆயிரமாக உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்சமயம் 7 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்கள் மாதாந்தம் 2,500 ரூபாவைப் பெற்றுவருவதாகவும் அதை 4 ஆயிரமாக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் மாணவர்கள் தற்சமயம் 5 ஆயிரம் ரூபாவைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts