- Tuesday
- June 16th, 2026
உடல்நலக் குறைவுக்காக சிங்கப்பூருக்குச் சிகிச்சைக்குச் சென்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை விரைவில் நாடு திரும்பவுள்ளார் என மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென சுகவீனமுற்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
ரயில்களில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 5000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்படுவதோடு, கட்டணம் இரு மடங்காக வசூலிக்கப்படும் எனவும், போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை தற்போது ரயிலில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக வடக்கு, கிழக்கு காணமால் போனவர்களின் உறவழனர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்றய தினம் முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை மூன்று பிரதிவாதிகள் இல்லாது விசாரணை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அரச தரப்பு வழக்கறிஞர் வழங்கிய தகவல்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பிரணாந்து இந்த அனுமதியை வழங்கியுள்ளார். நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் அறுவருக்கு...
யாழில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் முன்பாக தாங்கள் சாட்சியமளிக்க மாட்டோம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண குடும்ப உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த காணாமற்போனோரின் உறவினர்கள், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08)...
யாழ்ப்பாண சிறைச்சாலையில் உள்ள அரசியல்கைதியான சிவராஜா ஜெனீவன் நேற்று மாலையில் இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டுபயங்கரவாததடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இவருடைய வழக்கு 2009 ஆம் ஆண்டில் இருந்து பொலநறுவை மற்றும் யாழ்ப்பாண மேல் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகின்றது. மகசின் சிறைச்சாலையில் இருந்து வரும்...
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மற்றைய பகுதிகளில் இன்று மதியம் 2 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் நிலையில், இதன் பயனை வடக்கு மக்களும் அனுபவிக்கக் கூடிய ஏற்பாடுகள் அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிதி அமைச்சருக்கு அறிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட ஏனைய...
யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலை மாணவர்கள் கூப்பன் அடிப்படையிலான சீருடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அபி றேடர்ஸ் - இல-112,கே.கே.எஸ்.வீதி .யாழ்ப்பாணம். சிறி கணேஷ் புடவையகம் - இல-20 ,நவீன சந்தை, யாழ்ப்பாணம் ஆறுமுகம் ரெக்ஸ்ரைல்ஸ் - இல-20,பெரிய கடை.யாழ்ப்பாணம். சென்னை பசன் வேல்ட் - இல-63 ,பெரிய...
தமிழக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு இதுவரை அயல் நாடுகளிடம் இந்தியா உதவி கோரவில்லையென யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட மாகாண சபை உதவ முன்வந்தபோது, அதனை இந்தியா நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதன் உண்மைத் தன்மை குறித்து இந்திய துணைத்...
அரச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் இதுவரையில் பாடநூல்களை பெற்றுக் கொள்ளாத பாடசாலை மாணவர்கள் பாடநூல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். பொருத்தமான மொழியை தெரிவு செய்து பின்பு தரத்தை தெரிவு செய்து குறித்த பாடநூல்களை பெறமுடியும். http://www.edupub.gov.lk/BooksDownload.php
'யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்யும் போது ஏற்படும் வெள்ளப் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் வகையில் நீண்டகால பயனுடைய அனர்த்த தவிர்ப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படும்' என யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம், 13 ஆயிரத்து 487 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல், படையினர் வசமுள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உள்ள நிலங்களில், காணி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பொதுக்காணிகளாக, 12 ஆயிரத்து 785 ஏக்கர் காணிகளும், உறுதிக்காணிகளாக 702 ஏக்கர் காணிகளும் படையினர் வசமுள்ளதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. அத்தோடு, 1983ஆம் ஆண்டு...
வடக்கில் மீள்குடியேற்றத்துக்காக அதிகாரிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் காடழிப்பதற்கு கடந்த ஆட்சியின்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். இது பற்றி ஆராய்வதற்காக இன்னும் ஒரு வாரகாலத்துக்குள் வடக்குக்கு அதிகாரிகள் மட்டத்திலான குழுவொன்று அனுப்பிவைக்கப்படும் என்றும், அவர்களின் அறிக்கை கிடைத்த பின்னர் மீள்குடியேற்றம் தொடர்பில் நடடிவக்கை எடுக்கப்படும்...
2015ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. இன்று காலை 08.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதோடு, மாணவர்களை 08.00 மணிக்கே பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. அத்துடன் மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு கைத்தொலைபேசிகள், குறிப்புகள் மற்றும் எந்தவொரு உதவி பொருட்களையும் எடுத்துச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக...
தமிழகத்தின் புதுக்கோட்டை அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாம் சார்பில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணி மணிகளை வேன் மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைத்தனர். சென்னையில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிவாரண உதவி செய்ய வேண்டுமென முகாம் மக்கள் நலக்குழுத் தலைவர் ச.கமலநாதன், நிர்வாகிகள், இளைஞர்கள், மாணவர் மன்றம், விளையாட்டுக்குழு,...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம் அது அவரது உரிமை, இதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்டக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
பாடசாலை மாணவர்கள் 20 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படும் மாணவர்களிடம் எயிட்ஸ் நோய் தொடர்பாக அவர்களின் குருதி மாதிரி பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது...
புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டத்தை தற்போதைய சூழ்நிலையில் ஆதரிக்க வேண்டிய தேவை இருப்பதாக எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகளிடையே முரண்பாடு தோன்றியுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக்...
திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் சடலங்கள் மிதப்பதாக வெளியான தகவல்களை அடுத்து இலங்கை கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் 6 சடலங்கள் மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்திருந்தனர். தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து விடயம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு இரண்டு கடற்படை படகுகள் தேடுதலுக்கு அனுப்பப்பட்டன. தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு...
Loading posts...
All posts loaded
No more posts
