- Friday
- November 21st, 2025
யாழ்ப்பாணம் கல்லுண்டாய், பொன்னாலை சந்தி, மற்றும் வல்லிபுர சந்தி ஆகிய இடங்களில் பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுகாலை இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபை மற்றும் மானிப்பாய் பிரதேச சபை ஆகியன கல்லுண்டாய் வெளிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிராக...
எதிர்வரும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26ம் திகதி முதல் இலங்கையில் சிற்றுண்டிசாலைகளில் விற்பனை செய்யப்படும் அப்பம், பிளேன் ரீ,பால்ரீ உட்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சம்மேளன தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி பிளேன் ரீ விலை 5ரூபாவாலும், பால்ரீ 5...
யாழ். தீவகப் பகுதிகளில் சமூக விரோதச் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்களிடமிருந்து தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வரும் நிலையில், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் சட்டம் மற்றும்...
யாழ்.நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வருவதாக யாழ்.போதனா வைத்திய சாலை தரப்பினர் எச்சரித்துள்ளனர். கடந்த இரு நாட்களில் மட்டும் எட்டுப்பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். தற்போது மழை காலம் ஆரம்பித்து உள்ள நிலையில், மழை பெய்து வெற்றுக் காணிகள், வீட்டில் காணப்படும் பொருட்களில்...
தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதன் போது முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச மாலை 4.55 மணியளவில் சபைக்கு வந்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தனது வரவு – செலவு திட்டத்தை 2.00...
ஐ.நா.சபையின் இலங்கைக்கான 20 பரிந்துரைகளில் எவ்விடயத்தையும் நீக்க வேண்டுமென்ற பேச்சுக்கே இடமில்லை.அவைஒவ்வொன்றையும் எவ்வாறு நிறைவேற்ற முடியுமென்ற ஆலோசனைகளையே கட்சிகள் முன்வைக்க வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். ஐ.நா.சபையின் தீர்மானம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியால் கூட்டப்பட்ட இரண்டாவது சர்வகட்சி மகாநாட்டில் பேசப்பட்ட விடயம் தொடர்பில் வினவிய போதே அவர்...
அலங்கோலமான பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டு அலங்கரித்து விட்டதைப் போன்று வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் அமைந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வரவு செலவுத் திட்டம் வெறும் வார்த்தை ஜாலங்களை மட்டுமே கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எதுவித சலுகைகளும் வழங்கப்படவில்லை. அத்துடன் நெல்...
தாடியுடன் வீதியில் நடந்து சென்ற இரு இளைஞர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் மகன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இரு இளைஞர்களுமே கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவிக்கையில்- நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில்...
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது 97 வயதுடைய முதியவர் ஒருவருக்கு விபத்து மரணம் ஏற்படுத்திய சாரதியான கணபதிப்பிள்ளை ரகுநாதன் என்பவருககு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் இரண்டரை லட்ச ரூபா தண்டமும் விதித்துத்...
இலங்கை அரச படையினரின் இரகசிய சித்திரவதை முகாம்களில் தமிழ் இளைஞர், யுவதிகள் பலர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக வடக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தென்பகுதி மாநிலமான கர்நாடகாவின் பெங்களூர் நகரில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பெண்களின் உரிமைகள் தொடர்பான சர்வதேச...
தேசிய அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள கன்னி வரவு - செலவு திட்டத்தின் மூலம் அவர்களது பொருளாதாரக் கொள்கை தெளிவாகியுள்ளதுடன், தனியார் துறையை நோக்கிச் செல்லும் இப்பயணமானது நாட்டின் எதிர்காலத்துக்குப் பெரும் பாதிப்பாக அமையும் என்று மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மக்களுக்குச் சலுகைகளை வழங்கும் போர்வையில் பல முக்கிய சலுகைகளை இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள்...
2016ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை 74 ஆயிரம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தின்படி 2016 ஆம் ஆண்டுக்கான வருமானம் 2 இலட்சத்து 4 ஆயிரத்து 700 கோடி ரூபா, செலவீனம் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 700 கோடி...
ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் (Samantha Power, U.S. Permanent Representative to the United Nations) இன்று (21) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு வருகை தரவுள்ளார். ஆசிய நாடுகளுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் சமந்தா தற்போது இந்தியாவின் களநிலைமைகளை ஆராய்ந்து வருகிறார். அதனைத் தொடர்ந்து இவர் இன்று (21)...
புதிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று (21) பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கானதும் நாட்டின் 69 ஆவதுமான வரவுசெலவுத் திட்டத்தினை நேற்று (20) நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் வரவுசெலவுத் திட்டம் மீதான உரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(21)...
எட்டாவது பாராளுமன்றத்தின் 69வது வரவு செலவு திட்ட உரை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. பலமான பொருளாதார கொள்கை ஒன்றை ஸ்தாபிப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதன்போது தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த...
தாயகத்தில் யுதத்தினால் பாதிக்கப்பட்ட தாயக மக்களுக்கான உதவிப் பணியில் ஆறாவது ஆண்டினை வெற்றிகரமாக கடந்து கொண்டிருக்கும் உறங்கா விழிகள் அமைப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வும் சிறப்பு மதிய விருந்துபசாரமும் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (20-11-2015) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் போரினால் பாதிக்கப்பட்ட 125 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களும் வவுனியா...
இலங்கையின் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் அறைகளை வாடகைக்கு விடும் விடுதியொன்றில் ரகசியக் கமரா மூலம் அறைகளில் நடைபெறுபவற்றை பதிவு செய்து வந்த நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். பிளக் பொயிண்ட் இன் ஒரு துவாரத்திற்குள் ரகசியக் கமரா வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த ஹொட்டலில் உள்ள அறைகளில் சூட்சுமமான முறையில் அந்தரங்க விடயங்கள் பதிவு செய்யப்பட்டு அவை வேறொரு...
கூகுள் தேடுபொறி போக்குவரத்து விபரங்களை வழங்கும் சேவையைத் தற்பொழுது இலங்கையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்த வீதிகளை இலகுவாக அறிந்து கொள்ள முடியும். கூகுள் தேடுபொறியில் traffic என குறிப்பிட்டு தேடுவதன் மூலம் இந்த வரைபடத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள கூகுள் வரைபடத்தின்...
2016 ஆம் ஆண்டுக்கானதும் 79 ஆவதுமான வரவு செலவுத்திட்ட வாசிப்பு இன்று (21) சற்று முன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாசிப்பு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
மூத்த தமிழ் ஊடகவியலாளரான ச.கதிரவேற்பிள்ளை வியாழக்கிழமை (19) உயிரிழந்துள்ளார். ஊடக நிறுவனம் ஒன்றில் தனது ஊதியத்தை பெற வந்தபோது, கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து இவர் உயிரிழந்துள்ளார். தமிழராட்சி மாநாட்டு படுகொலை, மாவிட்டபுர ஆலய உட்பிரவேச போராட்டம் போன்ற பல பிரச்சினைகள் குறித்து இவர் செய்திகளை சேகரித்திருந்தார். பொலிஸாரின் தாக்குதலால் அவருடைய ஒரு கண் பார்வையை இழந்தார்....
Loading posts...
All posts loaded
No more posts
