Ad Widget

வர்த்தகர்களுக்காக அல்ல மாணவர்களுக்காகவே வவுச்சர் திட்டம்!

நான்கு அல்லது ஐந்து வர்த்தகர்களை அல்ல நாற்பத்து மூன்று இலட்சம் மாணவர்களை கருத்தில் கொண்டே வவுச்சர் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை நிமித்தம் வவுச்சர் வழங்கும் நிகழ்வு அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது பல மாணவ, மாணவிகள் அவரது கையால் வவுச்சரைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும் அனைத்து பாடசாலை மாணவர்களுக்குமான வவுச்சர்களை அந்தந்த பாடசாலை அதிபர்களிடம் நேற்று கையளிப்பதாக அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

2016ம் ஆண்டு முதலாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்க முன்னர் குறித்த வவுச்சர்கள் மூலம் துணிகளை வாங்கி, மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோரது கடமை எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வேலைத் திட்டத்திற்காக 2600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாவும் செலவாவது 2100 மில்லியன் ரூபாய் மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் 500 மில்லியன் ரூபாவை சேமிக்கவும், மாணவர்களுக்கு தரமான துணிகளை பெற்றுக் கொள்ளவும் முடியும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Related Posts