- Monday
- April 27th, 2026
திருமணத்துக்கு முரணான உறவைக் கொண்டிருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, கல்லால் எறிந்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதை, சவூதி அரேபிய அரசாங்கம் பிற்போட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு தொடர்பாக ஆராயப்படும் வரையிலேயே, இந்தத் தண்டனை பிற்போடப்பட்டுள்ளது.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே, சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தால்...
2016 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் அதிமுக்கிய வருடமாக இருக்கும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்து மாமன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தவை...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினரைக் கொண்ட அணியினரை உடனடியாக விலகிக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த அறிக்கையை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவைப்...
இந்த வருடம் நவம்பர் மாதம் வரை இணையம் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் 2600 கிடைத்துள்ளதாக கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் அதிகமானவை சமூகவலைத்தளங்கள் தொடர்பிலேயே கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவிக்கின்றார். தமது பெயர்களில் வேறு நபர்கள் போலி கணக்குகளை உருவாக்கி இருப்பது தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில்...
பாலியல் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக வட இலங்கையிலுள்ள பெண்களுக்கு பயிற்சியொன்று தன்னார்வ அமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினமாகிய நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய டிசம்பர் 10 ஆம் தேதி வரையிலான 14 நாட்கள் இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில்...
கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவராணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னேடுக்க வடமாகாண சபை இணக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட மாகாணத்தில் இருந்து எவ்விதமான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பான கலந்துறையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது. வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் அவைத்...
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை அரசு பொறுப்பேற்கும் என்று என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மீதான விவாதம் நடைபெற்றது. இதில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றும் போது, 14 கற்கை நெறிகள் கற்பிக்கப்பட்ட...
அரசியல் என்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றி விட்டது. எதையும் ஆரஅமரச் சிந்தித்து ஆராய்ந்து அறிவை மேம்படுத்தக் கூடிய ஒரு அவகாசத்தை என்னிடம் இருந்து பறித்தெடுத்து விட்டது என்று வடக்கு மாகாண முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலக மண் தினமான நேற்று காலை 9.30 மணிக்கு யாழ். கிறீன் கிறாஸ் விடுதியில் ஆரம்பாமான “மண்...
"எனது கணவனின் படுகொலையுடன் தொடர்புடைய சூத்திரதாரி இந்தச் சபையில் இருப்பதாகத் தான் நான் கூறினேன்.எனினும் எவரதும் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், எனது கணவனின் பெயரைக் குறிப்பிட்டு அந்தச் சூத்திரதாரி தன்னைத்தானே இனங்காட்டிக் கொண்டார் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றிய...
ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஒரு கொலையாளி. முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன், ஊடகவியலாளர் நிமலராஜன் உள்ளிட்ட பலரின் படுகொலையுடன் தொடர்புடையவர். வடக்கில் 3000 இற்கும் மேற்பட்டோர் காணாமல்போகக் காரணமாக இருந்தவர் என்று நாடாளுமன்றத்தில் பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். நாடாளுமன்றத்தில் நேற்று கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும்...
வரவு - செலவுத் திட்டத்தில் பேக்கரி தொழிற்றுறைக்கு வரி அறவீடு அதிகரித்துள்ளதோடு எதிர்பார்க்கப்பட்ட நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால் எதிர்காலத்தில் பாண் உள்ளிட்ட பேக்கரி தயாரிப்புக்களின் விலை அதிகரிக்கும் சாத்தியமுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உரிமையாளர்களால் 2 சதவீதமாக செலுத்தப்படுகின்ற தேசத்தை கட்டியெழுப்பும் வரியானது 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே...
மீசாலை புத்தூர் வீதியில் இன்று (06) காலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். புத்தூரைச் சேர்ந்த யேசு அன்று (வயது 25), சின்னக்குட்டி உதயராசா (வயது 51) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். திருமணச்சடங்கு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்...
தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கை அகதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. எனவே, இம் மக்களுக்கு உதவ இலங்கை அரசு உரிய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கைவிடுத்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள...
கடந்த சில நாட்களாக வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தற்போது நாட்டினை விட்டு விலகி வருவதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. எனினும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நாட்டின் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, பிற்பகல்...
சென்னையில் மழை வௌ்ளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை விஷேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையால் புத்தகயாவிற்கு வழிபாட்டிற்கு சென்ற 120 இலங்கையர்கள் இவ்வாறு சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை அழைத்து வருவதற்கான விஷேட விமானம் நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் காயா நோக்கி புறப்படவுள்ளதாக இலங்கை விமான சேவைகள்...
புங்குடுதீவு பகுதியில் தனது சொந்த மகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கினார் என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்றைய தினம் சடலமாக மீடகப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளி பகுதியை சேர்ந்த எஸ்.சிவரஞ்சன்(வயது33) என்ற குடும்பஸ்தர் தனது சொந்த மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்...
வளிமண்டலத்தில் நிலவும் குழப்பநிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக பிற்பகலில் மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஒருசில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக கடும் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இடியுடனான மழை பெய்யும் சந்தர்ப்பங்களில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணியூற்று, உற்றங்கரை, புதரிகுடா, சந்திரபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் தொடர்ச்சியான மழையினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். தற்காலிக வீட்டில் வசிப்பவர்களுக்கு தற்காலிக வீடுகள் கொடுத்து மூன்றுவருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் செத்தையால் அடைக்கப்பட்ட தற்காலிக சுவர்மறைப்புகள் கறையான் அரித்து சேதமடைந்துள்ளது. அதுமட்டுமல்ல தமது முயற்சியால் மண்சுவர்களினால் கட்டப்பட்ட வீடுகளின் சுவர்கள் விழுந்து காணப்படுகின்றது. ஏனைய...
அவுஸ்திரேலியாவையொட்டியுள்ள இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால், ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.
Loading posts...
All posts loaded
No more posts



