- Friday
- November 21st, 2025
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- நேற்றைய தினம் வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்த அறிக்கையில் பொதுத்தேர்தல் நேரத்தின் போது கட்சிக்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டிற்கு தன்னுடைய நீண்ட...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கருத்து முரண்பாடுகளை ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி விவாதிப்பதை கைவிட வேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் அவற்றை நியாயப்படுத்தியும் உள்நாட்டு மற்றும்...
வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்து, வற்புறுத்தியதின் அடிப்படையில் பதவி விலகியுள்ளதாக அவர் கூறினார். வடமாகாண சபை உறுப்பினராகவிருந்த அங்கஜன் இராமநாதன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதையடுத்து, அவரது...
திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கு கடற்படையின் இரகசியத் தடுப்பு முகாம் என்று சொல்லப்பட்ட நிலையத்துக்கும் சென்றோம். அங்கிருந்த சுவர்களில் எழுதப்பட்டிருப்பதை வைத்து பார்க்கின்ற போது, அங்கு பல பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள்...
யாழ் மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் நெற்செய்கைக்கான உரங்களை (யூரியா, சுப்பர் பொசுபரசு (TSP), மியூரேற் பொட்டாசு (MOP), விவசாயிகள் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு கொள்வனவு செய்யும் நிலை ஏற்படின் அது தொடர்பான முறைப்பாட்டினை மாவட்ட செயலகத்திற்கு அறியத்தருமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்...
வில்பத்து தேசிய சரணாலயத்தில் இராணுவ அதிகாரிகள் குழுவொன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. நேற்று குறித்த வழக்கு அனுராதபுரம் விஷேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்...
அத்தியவசிய பொருட்கள் சிலவற்றை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி பருப்பு ஒரு கிலோ 190 ரூபாவாகவும், கிழங்கு ஒரு கிலோ 145 ரூபாவாகவும், வெங்காயம் ஒரு கிலோ 155 ரூபாவாகவும் கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் கோழியிறைச்சி ஒரு கிலோ 480 ரூபாவாகவும்,...
இலங்கைப் பெண் ஒருவரை கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் விதித்துள்ள தண்டனை தொடர்பில் மேன்முறையீடு செய்ய வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சவுதியில் பணிபுரிந்த இலங்கைப் பெண் ஒருவர் பிறிதொருவருடன் தகாத உறவைப் பேணியதாக கூறி ஷரியா சட்டத்தின் பிரகாரம் அவரை கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது....
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பிலான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது . இது குறித்து பிரதமரின் தலைமையில் அமைச்சரவை உப குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இன்று இடம் பெற்ற கூட்டத்தின் பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் இன்று...
'திறமைக்கு தொழில்' தொழிற்சந்தை இம்மாதம் 20ஆம் திகதி காலை கொழும்பு மாவட்ட செயலகத்தின் முதலாவது மாடியில் அமைந்துள்ள பிரதான கேட்போர்கூடத்தில நடைபெறவுள்ளது. கைத்தொழில் தொடர்பு அமைச்சின் ஆளணி மற்றும் தொழில்வாய்ப்பு திணைக்களத்தின் கீழ் கொழும்பு மாவட்டச் செயலகத்தின் மக்கள் சேவை மத்தியநிலையம் இத்தொழில் சந்தையை ஏற்பாடு செய்துள்ளது. அன்றைய தினம் தொழில்சந்தையில் பங்குபற்றவிருப்போருக்காக பிரபல பேச்சாளர்...
மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சிறுவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்த வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தீர்மானித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பற்ற முறையில் சிறுவர்கள் பயணிக்கும்போது விபத்துக்கள் நேர்வதாக சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். இருவர் மாத்திரம் பயணிக்க கூடிய மோட்டார் சைக்கிளில் மூவர் அல்லது நால்வர் பயணிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள...
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (17) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். நல்லூர், கோவில் வீதியில் அமைந்துள்ள அங்கஜனது அலுவலகத்தக்கு தன்னை அழைத்து, அவருடன் இணைந்து செயற்படவில்லையெனவும், இதனால் வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர்...
மஹியங்கன - தியகோமல பிரதேசத்தில் கோடரி தலையில் பட்டதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. தனது பாட்டி விறகு வெட்டிக் கொண்டிருந்த போது குறித்த குழந்தை அந்தப் பக்கம் சென்றுள்ளது. இதன்போது குழந்தையின் தலையில் கோடரி தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனால் படுகாயமடைந்த குழந்தை பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு...
யாழ்.குடாநாட்டில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று நேரில் பார்வையிட்டு, உலர் உணவு பொதிகளையும் வழங்கினார். கடந்த 3 தினங்களாக யாழ்.குடாநாட்டிலும் பெய்த கனமழையினால் தாழ்நில பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்து தங்கியுள்ள கல்லாரை பகுதியை சேர்ந்த...
திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை கொள்ளையடித்து வந்த நபரை, பிரதேச மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தோப்பூர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த அப்துல் கலீம் (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு நையப்புடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், நல்லூர்...
தமது விடுதலைக்காக வடக்கு மாகாண முதலமைச்சரையும் உள்ளடக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சிவில் சமுக மனித உரிமை அமைப்புகள், சட்டவாளர்கள், சர்வ மதத்தலைவர்கள், புலம்பெயர் உறவுகள் ஒன்றுபட்டு, தமது விடுதலைக்காக ஒரு அமையம் ஒன்றை உருவாக்கி, குழுவாக சகல முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும் என்று அரசியல் கைதிகள் தெரிவித்தனர். நாடு முழுக்கவும் உள்ள...
காணாமற் போகச்செய்யப்பட்ட சுமார் 5 ஆயிரம் பேரின் விவரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று ஐ.நா. செயற்குழு பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மற்றும் காணாமற் போகச்செய்யப்பட்டோரின் பெற்றோர்கள் ஒன்றியம் அந்த அறிக்கையை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள குறித்த குழுவிடம் கையளித்துள்ளது. குறித்த அறிக்கையில் காணாமற் போகச்செய்யப்பட்டோர் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்த ஒன்றியத்தின் அழைப்பாளர்...
"யுத்தம், அரசியல், மதப் பிரச்சினைகளால் இலங்கையிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறியுள்ள அனைத்து இலங்கைப் பிரஜைகளும் மீண்டும் நாட்டுக்குத் திரும்பவேண்டும்'' என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்றது. உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சின் ஏற்பாட்டில்...
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வன்னி மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் 700 க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்துக்குட்பட்ட பள்ளியாறு, வண்ணிக்குளம், மண்டகலாறு, பண்ணங்கண்டி,நெடகலியாறு பகுதிகளிலும், முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்துக்குட்பட்ட முதியகட்டு பகுதியிலும், வன்னி பாதுகாப்பு தலைமையகத்துக்குற்பட்ட கொக்கிலாய்,...
Loading posts...
All posts loaded
No more posts



