- Friday
- November 21st, 2025
இவ்வருடத்துக்கான மூன்றாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் டிசெம்பர் 04 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி திறக்கப்படுமெனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் (16) வட மாகாண பாடசாலைகளில் மூடப்பட்டமைக்குப்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தனின் தடுப்புக் காவல், மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் டிசம்பர் 01ஆம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அரசாங்க...
யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களாக பெய்துவரும் அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 14 ஆயிரத்து 334 குடும்பங்களைச் சேர்ந்த 52 ஆயிரத்து 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 57 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 486 பேர் 42 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்....
மத்திய அரசினால் வழங்கப்பட்ட 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட நிதியில் இருந்து 38 சதவீத நிதிகளையே வடமாகாண சபை பயன்படுத்தியுள்ளதாகவும், ஏனைய நிதிகள் கிடப்பில் இருப்பதாகவும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு...
யாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். நேற்று பிற்பகல் யாழ் சிறைச்சாலைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். செல்வராசா கஜேந்திரன் திருமதி பத்மினி சிதம்பரநாதன், மற்றும் சட்டத்தரணி திருக்குமார் ஆகியோர் சென்று கைதிகளை சந்தித்து...
அடை மழை மற்றும் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்கள் உரிய முறையில் உரிய அளவில் வழங்கப்படுவதன் அவசியம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் வலியூறுத்தியூள்ளார். அண்மைக்கால அடைமழை மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்று காலை இவர்கள் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தம்மை விடுவிக்கக் கோரி மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம் மற்றும் கொழும்பு மெகசின் சிறைச்சாலை போன்றவற்றில் இருந்த அரசியல் கைதிகள்...
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளில் உடல்நிலை அசாதாரண நிலைக்கு ஆளான எவரும் சிறைச்சாலைக்குள் இல்லை. அனுராதபுரம் சிறைச்சாலையில் ஒரு கைதிக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சேலைன் செலுத்தினோம் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார். உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகளின் நிலைவரம் தொடர்பாக கேட்போதே ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தலைமையில், கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கருத்து வெளியிட்ட ஆனந்தசங்கரி, சிறையிலுள்ள அரசியல் கைதிகளை தற்காலிகமாக புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை தாங்கள் பூரணமாக நம்புவதாக பிணையில் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊறணியை சேர்ந்த அழகையா சுதாகரன் என்பவர் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டு மட்டக்களப்பிலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். அவரை கிழக்கு...
தம்மை புனர்வாழ்வுத் திட்டத்தில் சேர்த்து பின்னர் விடுதலை செய்யுமாறு கோரியுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை, இலங்கை அரசு சாதகமாக பரிசீலிப்பதாக உறுதியளித்திருக்கிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் குறித்து கலந்தாலோசிக்க கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்ட சுமந்திரன்,...
யாழ் விஜய் நற்பணி மன்றம், யாழ் வர்த்தகர்கள் எற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவாந்துறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலையில் உள்ள மக்களுக்கு உணவுப்பொருட்கள்,குடிநீர் மற்றும் ஆடைகள் வழங்கிவைக்கப்பட்டது. யாழ்.மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மூன்று தினங்களாக பெய்த கனமழையினால் மாவட்டத்தில் தாழ்நில பகுதிகளிலிருந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கின்றது. இதன்படி யாழ்.மாவட்டத்தில் இடம் பெயர்ந்த குடும்பங்களின்...
வடமாகாணசபையால் முன்னெடுக்கப்பட்டுவரும் மரநடுகை மாதத்தை முன்னிட்டு சுவிற்சர்லாந்து சூரிச் சிவன் கோவிலின் அன்பே சிவம் அமைப்பு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறது. அன்பே சிவம் அமைப்பால் ஞாயிற்றுக்கிழமை (15.11.2015) பச்சிலைப்பள்ளி மல்வில் கிராம மக்களுக்கு நல்லின மாமரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. மல்வில் கிருஷ;ணன் கோவிலில் இடம்பெற்ற மரக்கன்றுகள் விநியோக நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு...
கைதிகளில் ஒருவர் உயிரிழந்தாலும் அரசாங்கம் பொறுப்புக்கூற போவதில்லை என வடமாகாண முதலமைச்சர் தம்மிடம் தெரிவித்ததாக உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை பார்வையிட்டபோதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவிதுள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலையாகும் பட்சத்தில் அவர்களால் அச்சுறுத்தல் காணப்படலாம் என்ற அச்சத்திலேயே அரசாங்கம் தமிழ்...
கடுமையான வௌ்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட யாழ் மாவட்டத்திற்கு 4.2 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா இன்று (16.11.2015) உத்தியோகப்பூர்வமாக தெரிவித்தார். தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக நாட்டின் யாழ்ப்பாணம், மன்னார், கம்பஹா ஆகிய பிரதேசங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அந்தவகையில், யாழ் மாவட்டத்திற்கு 4.2 மில்லியன்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 8 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சம் ரூபா பெறுமதியிலான இரண்டு சரீர பிணைகளின் கீழ் இவர்கள் கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிராம உத்தியோகத்தரின் பதிவு சான்றிதழ் நீதிமன்றத்தில்...
வடக்கில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற காரணத்தினால் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் புகுந்து ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும், பொது இடங்களிலும், நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர். குறிப்பாக பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுவர்கள், வயதானோர் என அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் சமைத்த உணவுகளையும் உடனடியாக வழங்கி வரும்...
தமிழ் அரசியல் கைதிகளை விடுக்கக் கோரி இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவகத்திற்கு முன்பாக கவனீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் முன்னணி மற்றும் மன்னார் மக்கள் பிரஜைகள் அமைப்பின் ஏற்பாட்டில், எட்டு அம்ச கோரிக்கைகளை வலியூறுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் அணைவரும் உடனடியாக...
பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, படையினரின் உதவியுடன் எமது ஆட்களே அழித்து விட்டதாக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் வேலை முகாமையாளர் ரியாஸ் சாலி விசனம் வெளியிட்டுள்ளார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இயந்திரங்கள் உள்ளிட்ட 1000 மில்லியன் ரூபா சொத்துக்களை அழிப்பதற்கு அனுமதித்ததற்கு இலங்கை இராணுவமே பொறுப்பேற்க வேண்டும். பிரபாகரன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, பாதுகாத்த...
சுவிஸ் தேசத்தில் வாழ்ந்து ஈழதேச உறவுகளுக்காக தங்களுடைய உழைப்பின் கணிசமான பகுதிகளை வழங்குகின்ற திரு.இராசநாயகம் ஐயா அவர்களுடைய நிதி உதவியுடன் தந்தையை இழந்த யாழ்பல்கலைக்கழக மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி ஒன்று தமிழ்த்தேசியமக்கள் முனனணியால் வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் அக்கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பெண்கள் விவகாரங்களுக்கான தலைவி பத்மினி...
Loading posts...
All posts loaded
No more posts
