- Friday
- November 21st, 2025
வெள்ளத்துடன் வந்த முதலை ஒன்று வீட்டினுள் புகுந்தது குடும்பத்தவர்களை அலற வைத்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்மாரட்சி, இராமவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக தென்மாரட்சி, இராமவில் பிரதேசத்தில் வெள்ளத்துடன் வந்த முதலை ஒன்று வீட்டினுள் புகுந்து குடும்பத்தவர்களை அலறவைத்துள்ளது. குடும்பத்தவர்கள் அதனை விரட்டிய நிலையில், அருகிலிருந்த கேணிக்குள் பாய்ந்துள்ளது முதலை.
2015.11.16 ஆம் திகதி காலை காலை 05.30 மணிக்கு வழங்கப்பட்ட வானிலை முன்னறிவிப்பு: நேற்றைய தினம் வங்காளவிரிகுடாப் பகுதியில் திருகோணமலைக்கு அருகில் காணப்பட்ட தாழமுக்கமானது தற்போது அதன் வலு குறைவடைந்து இலங்கையை விட்டு அப்பால் நகர்கின்றது. இது நாளை பிற்பகல் இந்திய தமிழ் நாட்டு கரையோரத்திற்கு நகரும் என உதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தினால் நாட்டின் வட...
அரசியல் கைதிகள் ஆறாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்வதனால் கைதிகளில் முப்பது பேருக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக பாதிப்பு எரோபட்டுள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் அவதியுற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவகல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சிறுநீரக பாதிப்புக்கு உள்ளான கைதிகளை வலுக்கட்டாயமாக வைத்திய சாலைகளில் சேர்ப்பதற்கு சிறை அதிகாரிகள் முயன்றதனாலும் கைதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தமையாலும்,...
கடந்த ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 27ம் திகதி வெளியிடப்படும் இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை www.doenets.lk மற்றும்...
பயங்கரவாதச் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, அமெரிக்காவின் தேசப்பற்றுச் சட்டத்தை மாதிரியாகக் கொண்ட புதிய சட்டமொன்றைக் கொண்டுவர, அரசாங்கம் திட்டமிட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் பயங்கரவாதத்தைக் கையாள்வதற்கான ஆயுதமாக பயங்கரவாதத் தடைச்சட்டம், அப்போது பயன்படுத்தப்பட்டது. யுத்தம் முடிந்த பின்னால், இந்தச்சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருப்பது விமர்சனத்துக்குள்ளானது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இலங்கை மீது நிறைவேற்றிய தீர்மானமும் இந்தச் சட்டத்தை...
இலங்கை சிறைச்சாலைகளில் கடந்த 9 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற தமிழ் கைதிகளின் விடுதலை குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் எதிர்வரும் 17ம் திகதி கூடி பேச்சு நடத்தி முடிவெடுக்கவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான...
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களையும் 24 மணி நேரமும் மக்கள் பணிக்காக தயார் நிலையில் இருக்குமாறு, அம் மாகாண முதலமைச்சர் சகல உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார். பெய்து கொண்டிருக்கும் அடைமழையால் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. இதனால் ஏதேனும் வகையில் நீரை வடிந்தோட வழி செய்யவேண்டும் அல்லது...
அண்மையில் தம்மை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அரசியல் கைதிகளில் சுமார் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களின் விடுதலை குறித்து விரைவில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் உண்ணாவிரதம்...
கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாக் கடலில் காணப்பட்ட தாழமுக்க வலயமானது தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது. அது தற்போது இலங்கையின் வடகிழக்கிற்கு மிக அண்மையில் காணப்படுகிறது. இதன் தாக்கத்தினால் மேகமூட்டத்துடன் கூடிய மழை கொண்ட காலநிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலும் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும் கடும் காற்றும் வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இலங்கைத்தீவின்...
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சக தமிழ் அரசியல் கைதிகளின் மன அழுத்தங்களை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளதாக அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்தனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அத்துடன் அவர்களால் “சாவின்...
உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதுடன், உயிராபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணம் எம்மிடத்தில் உள்ளது. இது தொடர்பாக திங்கள் வரை காத்திருக்காது, விரைந்து செயற்படுமாறு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று மாலை அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- நீண்ட ஆண்டுகளாக எவ்வித...
வானிலையில் ஏற்பட்டுள்ள தாழமுக்க மாற்றம் தற்போது கிழக்கு பாகத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இன்றும் (15) அதிக மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து பாகங்களிலும் பகல் இரவு என எந்நேரங்களிலும் இம் மழை பெய்யலாம் எனவும் அத்துடன் இம் மழைவீழ்ச்சியினளவு 150...
தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் மீட்புப் பணிகளும் இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்து நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். வடக்கில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம்,...
வடமாகாணத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் இடம்பெயர்ந்து மாற்று இடங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கும் உடனடி உதவிகளை வழங்குமாறு வடமாகாண அமைச்சர்களுக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பணித்துள்ளார். 5 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் தொடக்கம் பெய்துவரும் கடும் மழையினால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட...
இரணைமடு குளத்திற்கு குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நண்பர்களுடன் நேற்று பகல் குளிப்பதற்காகச் சென்றவேளை நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது நீரில் மூழ்கியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, அழகரத்னம் வீதியில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்....
மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 9ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. மாமனிதரின் திருவுருவப் படத்திற்கு கட்சியன் தலைவரும் முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றினார். கட்சியன் உறுப்பினர்கள் பொதுஆதரவாளர்கள் மலர் வணக்கம் செலுத்தினர். நேற்று பிற்பகல் 4.00 மணியளவில்...
அடாது தொடர்ந்து பெய்;து கொண்டிருக்கும் மழையின் மத்தியிலும் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் மரநடுகை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. வவுனியா ஒமந்தையில் நேற்று சனிக்கிழமை(14.11.2015) 15ஏக்கர் பரப்பளவில் தேக்கமரக்காடு ஒன்றை உருவாக்கும் நோக்குடன் தேக்க மரக்கன்றுகளின் நடுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாய பூர்வமாக தேக்கமரக்கன்றுகளை நட்டு நடுகையை...
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மக்களின் மகிழ்ச்சியில் சமூக வலைதளங்களின் பங்கு என்ன? என்பது தொடர்பாக பேஸ்புக் விரும்பிகள் ஆயிரத்து தொன்னுற்றைந்து பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. ஒவ்வொரு நாளும் தமது பேஸ்புக் பக்கத்தை தவறாது கவனித்து வரும், இந்த பயன்பாட்டாளர்களை இரு குழுவாக ஆராய்ச்சியாளர்கள் பிரித்தனர். இதில், ஒரு குழுவினருக்கு வழக்கம்போல தமது பேஸ்புக்...
யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் போராளிகளாகவிருந்து உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவு கூரும் வகையில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினம் கொண்டாடுப்படும் நிலையில் தற்போது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் மாவீரர் தின நிகழ்வுகளின் போது, யாழ். பல்கலைக்கழகத்தில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டிருந்த இடையூறானது, தாழமுக்கமாக மாறியுள்ளது. இலங்கையில் இருந்து தென்கிழக்கு திசையில் இது நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் மேகம் சூழ்ந்த மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நிகழும் மழையுடனான கூடிய மழை காரணமாக, நாட்டில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ராஜாங்கனை மற்றும் இரணைமடு...
Loading posts...
All posts loaded
No more posts
