Ad Widget

விலைக்குறைப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையூடாக கண்காணிப்பு

இம்முறை வரவுசெலவில் அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலைக்குறைப்பை கண்காணிக்க நுகர்வோர் அதிகாரசபையூடாக எமது அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா ம​கேஸ்வரன் தெரிவித்தார்.

வரவுசெலவு 2016 இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நேற்று (26) பாராளுமன்றில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரவிக்கையைில்,

மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் இம்முறை வரவுசெலவு தயாரிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளின் அபிவிருத்திக்காக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் இருக்கவில்லை.

யுத்தத்தின் பின்னர் மக்கள் வைிடப்பட்ட நிலையில் இருந்தனர். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் வழமைக்குத் திரும்பவில்லை. இவற்றைக் கவனத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்த அபிவிருத்தி பங்காளர் மாநாடொன்றை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதற்கான பரிந்துரைகள் இம்முறை வரவுசெலவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts