Ad Widget

பொருட்களின் விலை குறைப்பு : வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியது

வரவு செலவு திட்டத்தில் விலை குறைப்புச் செய்யப்பட்ட பொருட்கள் பலவற்றின் புதிய விலை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விலை குறைப்புச் செய்யப்பட்ட பருப்பு, நெத்தலி, கருவாடு, 400 கிராம் உள்நாட்டு பால்மா மற்றும் கடலை வகைகள் என்பவற்றின் புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, உலர்ந்த நெத்தலி கிலோ கிராம் ஒன்றின் விலை 410 ரூபாவாகவும், பருப்பு கிலோ கிராம் ஒன்றின் விலை 169 ரூபாவாகவும், வட்டான கடலை கிலோ கிராம் ஒன்றின் விலை ஆயிரத்து 100 ரூபாவாகவும் அறிவிப்பப்பட்டுள்ளது.

அத்துடன், சாலயா கருவாடு கிலோ ஒன்றின் விலை 425 ரூபாவாகவும், கடலை கிலோ ஒன்றின் விலை 169 ரூபா எனவும், உள்நாட்டு பால்மா 400 கிராம் பக்கட் 295 ரூபாவாகவும், அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இந்த பொருட்களின் அதிகூடிய சில்லறை விலை இதுவாக காணப்படுகின்ற நிலையில் இதற்கு அதிகமாக விற்பனை செய்ய முடியாது.

இதனிடையே, நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் உணவகங்களில்; உணவு வகைகளின் விலைகள் உயர்தப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, அப்பம், பிளேன் டீ, பால் தேனீர் உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அப்பம், பிளேன் டீ ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாவாகவும், பால் தேனீர் 35 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் உணவு பொதியின் விலை 10 ரூபாவாலும் சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts