Ad Widget

யாழ்ப்பாணத்தில் இன்னமும் 9700 ஏக்கர் நிலம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்!

யாழ்.மாவட்டத்தில் தமிழ் மக்களின் சுமார் 9700 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் மீள்குடியேற்ற நிலமைகள், மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராய்ந்து மத்திய அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்யும் நோக்கில் யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில், குறித்த காணிகளுக்குச் சொந்தமான 9819 குடும்பங்களை சேர்ந்த மக்கள் 7 பிரதேச செயலர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள 31 நலன்புரி முகாம்களிலும், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகினறது.

யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர். கடற்படையினர் மற்றும் பொலிஸாரினால், பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 172 வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், 16 பாடசாலைகளும், 19 ஆலயங்களும், விமான நிலையம், மீன்பிடி துறைமுகம், வைத்தியசாலை, வங்கிகள், பேருந்து நிலையம் உள்ளடங்களலாக 12 பொது இடங்களும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்தும் வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts