- Friday
- November 21st, 2025
தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை மற்றும் கொழும்புக்கு இடையிலான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இன்று காலை 07.20 தொடக்கம் மாலை 06.30 வரை இலங்கையில் இருந்து புறப்படத் தயாராக இருந்த மூன்று விமானங்கள் மற்றும் அதிகாலை 01.45 முதல் இரவு 10.15 வரை சென்னையில் இருந்து இலங்கை வரத்...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் படித்த பண்புள்ள நம்பிக்கையானவர். அவர் ஏற்பாரேயானால் எமது கட்சியை இந்த நிமிடமே அவரிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாக, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, ‘என்னுடன் செயற்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். புனிதமான இந்த கட்சியை எதிர்காலத்தில் வீதியில் விட்டுச் செல்ல...
அரசாங்க வைத்தியர்கள் நாளை காலை 08.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அரச சேவையாளர்களின் அடிப்படைச் சம்பளம் திருத்தம் செய்யப்படாமை, சிரேஷ்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையுடனான வாகன அனுமதிப் பத்திர முறை இரத்துச் செய்யப்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பில்...
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவனேசத்துரை சந்திரகாந்தனை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் இந்த உத்தரவை பிறப்பித்தார். இன்று காலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்ட பிள்ளையான் நீதிமன்றத்தில்...
புங்குடுதீவு பகுதியில் 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தையை பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த சிறுமியை தொடர்ச்சியாக இரு தடவைகள் அவரது தந்தை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிலிருந்து தெரிய வந்துள்ளது. சிறுமி வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...
முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் விதமாக வடமாகாண விவசாய அமைச்சால் ரூபா 5 மில்லியன் பெறுமதியான நவீன நெல்அறுவடை இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான குறைதீர் நடமாடும் சேவை முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01.12.2015) நடைபெற்றது. இதன்போது, நெல்அறுவடை இயந்திரத்தை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஒட்டுசுட்டான் ஒருங்கிணைந்த...
2016ம் வருடத்திற்கான வரவுசெலவுத்; திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்; தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் (01.12.2015) ஆற்றிய உரை இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் உரையாற்றக் கிடைத்ததற்காக எமது கட்சியாகிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பிலும், தொடர்ச்சியாக ஆறு தடவைகளாக...
வடக்கு மாகாணத்தின் உள்ளக வீதிகள் திருத்தப்படாமை காரணமாக மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே, இவ் வீதிகளை இனங்கண்டு, முன்னுரிமை அடிப்படையில் புனரமைப்பு செய்வதற்கு உடனடி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர்...
யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் பிற்பகல் தொடங்கிய மழை இன்று அதிகாலை வரையும் தொடர்ந்தது. நேற்றுக் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. நேற்றிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை கடும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குடாநாட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள்...
வடபகுதியின் மூலதனமாக விளங்கும் கல்வியைக் குழப்பி எமது வருங்காலச் சந்ததியினரை ஒரு அடிமைப்பட்ட சமூகமாக மாற்றுவதற்கு திட்டமிட்டே பல சதிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்பப் பீடக் கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் அவர் தெரிவித்தார். மன்னார்...
பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கென வங்கி உடன் உண்டியல் மற்றும் காசோலைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டே பண மீளெடுப்புக்களின் போது வரி விதிக்கும் யோசனை, முன்வைக்கப்பட்டதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வரவு- செலவுத் திட்டத்தில் ஒரு மில்லியன் தொடக்கம் 10 மில்லியன் வரையான பண மீளெடுப்புக்களின் போது, 2 சதவீதமும், 10 மில்லியனுக்கு மேற்பட்ட பண...
வரணி பகுதியில் இராணுவத்தின் 526ஆவது படையணி நிலைகொண்டிருந்த வரணி படைமுகாமில், சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்க் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தெரிவித்தார். வரணி படைமுகாமில் சித்திரவதை முகாம் காணப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் அவரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த தனியார்...
வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்ப மாற்றங்கள் காரணமாக நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று (02) இடி மின்னலுடன் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் நிலவலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இம்மழைவீழ்ச்சியினளவு 150...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட செந்தூரனினால் எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடிதத்தின் பிரதிகளை அச்சிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பாலேந்திரன் பிரசாத் என்ற இளைஞரே நேற்று செவ்வாய்க்கிழமை இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த (26) யாழ்....
நான்கு அல்லது ஐந்து வர்த்தகர்களை அல்ல நாற்பத்து மூன்று இலட்சம் மாணவர்களை கருத்தில் கொண்டே வவுச்சர் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கான சீருடை நிமித்தம் வவுச்சர் வழங்கும் நிகழ்வு அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பல மாணவ, மாணவிகள் அவரது கையால் வவுச்சரைப்...
தேசிய நல்லிணக்கத்திற்கான இறுதித் தீர்வு என்பது, நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்குமான நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் தீர்வு என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். தமது அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட அதிகார பரவலாக்க யோசனையில் இருந்து தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உதலாகம அறிக்கை வரை அனைத்து யோசனைகள் குறித்தும் அவதானம் செலுத்தி இந்த இறுதித்...
இரு நாட்களுக்கு முன், அந்தமான் கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலை, எதிர்பார்த்த அளவு வலுவடைந்து, தமிழகத்தை நோக்கி நகரவில்லை மறைந்து விட்டது. தற்போது, வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில், இலங்கை அருகே, புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது, தென்மேற்காக மேலும் நகர்ந்து, தமிழகம் அருகே நிலை கொண்டுள்ளது. என...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகெலைச் சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நீதவான் எஸ்.லெனின்குமார் சந்தேக நபர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்....
வடமாகாண பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 5ஆம் திகதியே மூடப்படும் என வடமாகாண கல்வி, விளையாட்டு பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தெரிவித்தார். கடந்த 26ஆம் திகதி, கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள ரயில் கடவையில் ரயிலுக்கு முன்பாக பாய்ந்து கொக்குவில் இந்துக் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரன்...
வடமாகாண மரநடுகை மாதத்தின் செயற்பாடுகளில் ஒன்றாக மன்னார் மாவட்டத்தில் பழமரத் தோட்டங்களை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி மன்னார் தாமரைக்குளப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (30.11.2015) நடைபெற்றது. விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு பழமரக்கன்றுகளை வழங்கி வைத்ததோடு, அப்பகுதியில் புதிய முறையில் மாந்தோப்பு...
Loading posts...
All posts loaded
No more posts
