- Wednesday
- June 17th, 2026
எமது அடுத்த சந்ததியில் எமக் கான அடையாளங்கள் அனைத் தும் பறிக்கப்பட்டுவிடும் என்ற ஆபத்தை உணர்ந்து கொண்டதன் காரண மாகத்தான் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். அதை சரியான முறையில் புரிந்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத் திய நிபுணர் பூ.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மதிவதினி ஆகியோர் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்பது தொடர்பாக இறுதிப் போரில் இருந்து தப்பி வெளிநாட்டில் அடைக்கலமாகியுள்ள அந்த இயக்கத்தின் மூத்த தளபதி தயாமோகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் தயா மோகன். இலங்கை...
வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்ப மாற்றநிலை காரணமாக இன்று (28) நாட்டின் அனைத்து பாகங்களிலும் பலமான காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் வடக்கு கிழக்கு வடமத்திய தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை...
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அருள்நெறி விழா எனும் விருது வழங்கும் நிகழ்வு நேற்று (27) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கடந்த நல்லூர் கந்தசுவாமி ஆயலத்தின் திருவிழா உற்சவ காலத்தின் போது யாழ் மாவட்டத்திலுள்ள அறநெறி பாடசாலை மாணவர்களிடையே சமயம் சார்ந்த போட்டிகள் நடாத்தப்பட்டன. இவ்வாறு யாழ்...
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பொலித்தீன் பொதிகள், பைகள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகளை பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் தடைசெய்யப்படவுள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்தினையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடனே இவ்வாறான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20 மைக்ரோன்களுக்கு குறைவான கனவளவை கொண்ட பொலித்தீன் பொதிகள், பயன்பாட்டிற்கே எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் தடையுத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது....
உலகில் மிகவும் ஆபத்தான வெடிக்காத வெடிபொருட்கள் உள்ள பகுதியாக யாழ்ப்பாணம் - முகமாலை பிரதேசம் உள்ளதாக மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவில் கடந்த 13 வருடங்களாக கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனம், அண்மையில் முகமாலை பிதேசத்தில் இரண்டு இலட்சம் மிதிவெடிகளை அகற்றியுள்ளது. இந்த நிறுவனத்தின் தகவலின்படி ஈராக்...
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் சான்று பொருட்களின் ஆய்வு அறிக்கையானது இன்று திங்கட்கிழமை (28) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை. சந்தேகநபர் ஒருவரின் இரத்த கறையுடன் கூடிய காற்சட்டையின் இரத்த மாதிரி மாணவியின் இரத்த மாதிரியுடன் ஒத்துப்போகின்றதா என்ற அறிக்கை, ஜின்டெக் நிறுவனத்தின் பரிசோதனை அறிக்கை, சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டதாகக்...
யாழ்ப்பாணத்தில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றமையால் தேங்காயானது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. தேங்காய்கள் அவற்றின் அளவுக்கேற்ப 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையில் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. தேங்காய் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து கிளிநொச்சியின் பளை, தென்மராட்சிப் பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தேங்காய் எடுத்து வந்து விற்பனை செய்யப்படுகின்றது. மேலும்,தேங்காய் தட்டுப்பாட்டின் காரணமாக முட்டுக்காய்...
கடந்தவாரம் கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) கலந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியைக் காண வருகை தந்திருந்தவர்களின் பணத்தை மீளவழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ரிக் இக்லேசியஸ் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்ச்சிக்காக ரூபா 5,000 முதல் 50,000 வரை பெறுமதியான டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை இலங்கையின் ‘Live Events’...
சீனி மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றுக்கு அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கட்டுப்பாட்டு விலையை நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கப்படாத பட்சத்தில், இந்த பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக பட்ச கட்டுப்பாட்டு விலை நிர்ணயத்தின் காரணமாக, இறக்குமதி செய்யப்படுகின்ற விலையைக் காட்டிலும், குறைந்த விலையில் உள்நாட்டில் சந்தைப்படுத்த வேண்டி ஏற்படுகிறது....
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான மரபணு அறிக்கை இன்றைய தினம் வழக்கு விசாரணையின் போது மன்றில் சமர்ப்பிக்கப்படுமென தெரியவருகின்றது. கடந்த மே மாதம் குறித்த மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலி ஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் 9...
இலங்கை இராணுவத்தின் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று முன்தினம் அதிகாலை வேளையில் இவ்வாறு இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது. இணைய தளத்திற்குள் அத்து மீறி பிரவேசித்த ஒரு தரப்பு அரை மணித்தியாலம் இணைய தளத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இராணுவத்தின் உத்தியோகபூர்வ விபரங்களை மாற்றியதுடன் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின்...
தொல்லியல் பாதுகாப்பு இடமான திருகோணமலை, கோணேஸ்வரம் கோவிலில், அனுமதியின்றி நிர்மாணிக்கப்படும் சகல கட்டுமானங்களையும் உடன் அமுலுக்கு வரும்வகையில் இடைநிறுத்துமாறு, கோணேஸ்வரம் கோவிலின் நிர்வாக சபைக்கு தொல்பொருளியல் திணைக்களம் பணித்துள்ளதாக கடந்த 18ஆம் திகதி செய்தி வெளியானது. இது தொடர்பில், கோவிலின் பரிபாலன சபை அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தொன்மைமிகு தெட்சண கைலாய திருக்கோணேஸ்வர...
நீண்ட விடுமுறை காலமாக கதிர்காமத்தில் என்றுமில்லாத அளவுக்கு யாத்திரிகர்கள் குவிந்துள்ளதையடுத்து அங்குள்ள வியாபாரிகள் தமது இஷ்டம்போல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளனர். சாதாரண அப்பம் 40 ரூபா (அரசாங்கம் நிர்ணயித்துள்ள உச்சபட்ச விலை 10 ரூபா) பிளேன்டீ 50 ரூபா, கருவாட்டுடன் கூடிய சாதாரண சாப்பாட்டுப் பார்சல் 250 ரூபா, ஓர் அங்குள உயரம்கொண்ட தயிருடனான...
'செல்பி' மோகம் பட்டிதொட்டியெங்கும் பரவிவருகிறது. எங்கு சுற்றுலா சென்றாலும் 'செல்பி' எடுப்பதற்கே பெரும்பாலானோர் ஆர்வம் காட்டிவரும் நிலையில், இந்த 'செல்பி' மோகத்துக்கு இலங்கையின் ஆதிவாசிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். தங்களைப் பார்வையிடுவதற்கு வருபவர்கள் தமது வரலாறு, கலாசாரம் என்பவை பற்றி அறிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை என்றும், மாறாக, புகைப்படம் எடுப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என்றும் ஆதிவாசிகளின்...
பொது எதிரணி என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் மஹிந்த ஆதரவு அணியை பலவீனப்படுத்துவதற்கான நடவடிக் கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் சூட்சுமமாக முன்னெடுத்து வருகிறார் என அறியமுடிகின்றது. இதன்படி, மஹிந்த அணியிலுள்ள முக்கியஸ்தர்கள் சிலரை அரசு பக்கம் வளைத்துப் போடுவதற்கான பேச்சுகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன. இந்தவகையில் முதற்கட்ட நகர்வாக ஆறு பேருக்கு குறிவைக்கப்பட்டுள்ளது....
தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் கலந்து கொண்டமை குறித்து தமக்கு அறிவிக்கவில்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்டக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.பொது நூலகக் கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றது....
இந்த நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் என்பவற்றை சீர்குழைக்கும் விதமாக சர்வதேச பாடகர்களைக் கொண்டு நடத்தப்படும் நாகரீகமற்ற இசைக் கச்சேரிகளுக்கு அனுமதி வழங்காதிருக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். எதிர்காலத்தில் அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதி வழங்காதிருக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார். சில மணி நேரங்களுக்கு மட்டும் இடம்பெறும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எமது இளம் யுவதிகள்...
சிம்பு பாடிய பீப் சாங் இணையதளம் மூலம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி, சிம்பு மீது தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் பேசிய வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் "தமிழ்நாட்டை விட்டு...
நிலத்தடி நீரில் மாசு தொடர்பில், இன்று காலை சுன்னாகம் சந்திக்கருகில் கவனயீப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை சமூக நீதிக்கான பொதுசன அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள மின் நிலையத்திலிருந்து பாதுகாப்பற்ற முறையில், வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் நிலத்தடி நீரில் கலந்துள்ளமையால், சுன்னாகம் அதனை அண்டிய சுற்று வட்டார பிரதேசங்களில் நிலத்தடி நீரில்...
Loading posts...
All posts loaded
No more posts
