வடக்கு, கிழக்கு வீட்டுத்திட்டம் திடீரென திசை மாறுகின்றது!!

வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் அநுராதபுரம், பொலனறுவை, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் வீடுகளை இழந்த மக்களிற்கு வடக்கு, கிழக்கில் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. 2.1 மில்லியன் ரூபா செலவில் ஒவ்வொரு வீடுகளும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட...

வட மாகாண வேலையற்றோர் பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்பாட்டம் நடத்த திட்டம்

வேலையற்ற பட்டதாரிகளால் சங்கத்தினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலை கண்டித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வேலையற்ற பட்டதாரிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் வீச்சு தாக்குதலை நடாத்தி ஆர்ப்பாட்டத்தை கலைத்திருந்தனர்....
Ad Widget

யாழ்ப்பாணத்தில் மங்கள சமரவீர முன் ஆவேசமாகப் பேசிய மூத்த இராணுவ அதிகாரி!

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்தவாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது, இராணுவத்தின் கீழ்ப்படியாமை நிலையை நேரடியாக எதிர்கொள்ள நேரிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வழமையாக பதற்றமடையாத மங்கள சமரவீர சிரேஸ்ட இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாகி கலகே தெரிவித்த ஆவேசமான கருத்துக்களால் அதிர்ச்சியடைந்தார். படையணியொன்றின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சாகி கலகே சீற்றத்துடன்...

நீச்சல் வீராங்கனை தனுஜாவிற்கு ஆழிக்குமரன் ஆனந்தன் விருது!

நீச்சல் போட்டிகளில் பல பதக்கங்களை தனதாக்கி சாதனைபுரிந்து வரும் ஈழச் சிறுமி தனுஜா ஆழிக்குமரன் ஆனந்தன் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் வசித்துவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தனுஜா ஜெயக்குமார் தனது நீச்சல் திறனால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவரது திறமைக்கு மதிப்பளித்து ஐக்கிய இராச்சியம் (பிரித்தானியா) வல்வை நலன்புரிச் சங்கத்தின் சார்பில் 2015 ஆம்...

வடக்கு மாகாணசபையுடனும் முதலமைச்சருடனும் இணைந்து செயற்படுவேன்! – புதிய ஆளுநர்

வடக்கு மாகாணசபையுடனும் அதன் முதலமைச்சருடனும் நான் இணைந்து செயலாற்றுவேன். என வடமாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்த பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களது பிரசன்னம் எனக்கு மகிழ்ச்சியை...

ஜனாதிபதி, பிரதமரைக் கொல்லுமாறு முகநூல் மூலம் கோரியவரைக் கைது செய்ய உத்தரவு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை கொலை செய்யுமாறு படையினரிடம் முகநூல் ஊடாக கோரிக்கை விடுத்தவரை கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகநூல் ஊடாக ஜனாதிபதியையும் பிரதமரையும் கொலை செய்யுமாறு காணொளி காட்சி ஒன்றை வெளியிட்ட குறித்த நபர் நாடு திரும்பியதும் அவரை கைது செய்யுமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கொழும்பு...

வவுனியா மாணவிக்கு நீதி வேண்டி போராட்டம்! ஹர்த்தால்!!

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் கடந்த 16ஆம் திகதி வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13வயது மாணவிக்கு நீதி வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஹர்த்தாலுக்கு சமூக வன்முறைக்கு எதிரான மக்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வன்முறைக்கு எதிரான மக்கள் அமைப்பின் கலந்துரையாடல் வன்னி நாடாளுமன்ற...

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தை சீர்குலைக்க துரோகிகள் முயற்சி

இந்த நாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு பத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் வேலைத் திட்டத்தை சில துரோகிகள் குழு சீர்குலைக்க முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹம்பாந்தோட்டையில் வைத்து கூறினார். தனது தேவை நாட்டில் மூன்று வேளை சாப்பாட்டிற்கு வசதியற்று இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழிலை உருவாக்குவது என்றும், அந்த வேலைத் திட்டத்தை சீர்குலைக்க...

கிளிநொச்சியில் கால்நடைத்தீவன உற்பத்திப் பயிற்சி

கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கால்நடைகளுக்குரிய பசும்தீவனத்தை உற்பத்தி செய்வது தொடர்பான பயிற்சி கடந்த வியாழக்கிழமை (18.02.2016) கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது வடக்கு கால்நடை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாகப் பயிற்சியை ஆரம்பித்து வைத்தார். வடமாகாண விவசாய அமைச்சு கடந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த 14 கால்நடை வளர்ப்பாளர்களுக்குத் தலா 70,000ரூபா பெறுமதியான புல் நறுக்கும்...

ஆசிரியையின் சங்கிலியை திருட முற்பட்ட மாணவன்

திருநெல்வேலி கெற்றப்போல் சந்தி பகுதியில் ஆசிரியையின் சங்கிலியை திருட முற்பட்ட மாணவனுடன் போராடிய ஆசிரியை தனது சங்கிலியை மீட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றதுடன், இந்த போராட்டத்தில் குறித்த ஆசிரியை காயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியர் ஒருவர் நேற்று காலை 7.45 மணியளவில் பாடசாலைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிலையில், சீருடை...

யாழில் கொள்ளையர் குழு கைவரிசை : ஒரே இரவில் ஏழு வீடுகளில் கொள்ளை!!

கோப்பாய்- பூதர்மடம், நீர்வேலி- கரந்தாய் பகுதிகளில் ஒரே இரவில் 7 வீடுகள் உடைத்து பெருமளவு நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது . கோப்பாய்- பூதர்மடம், நீர்வேலி- கரந்தாய் பகுதிகளில் இன்றைய தினம் அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்த கொள்ளையர்கள் முதலில் இந்து குரு ஒருவருடைய வீட்டுக்குள்...

ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜேர்மன் மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி, இன்று சனிக்கிழமை இரவு நாடு திரும்பவுள்ளார். இந்நிலையிலேயே ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை ஜனாதிபதி...

ஊழியர் சேமலாப நிதியத்தின் 30 வீதத்தினை மீளப்பெறும் ஆரம்ப நிகழ்வு யாழில்

ஊழியர் சேமலாப நிதியத்தின் 30 வீதத்தினை மீளப்பெறும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை வடமாகாண தொழில் திணைக்களத்தில் இராஜாங்க அமைச்சர் ரவீந்தர சமரவீர நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். யாழ்.பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண தொழில் திணைக்கள காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. வடமாகாண தொழில் ஆணையாளர் நீலலோஜினி ஜெயகதீஸ்வரன், மற்றும், அ.பி.சி. அமரதுங்க தலைமையில்...

பிரபாகரன் உயிரோடு உள்ளார்!! ஈழப்போர் மீண்டும் வெடிக்கும் – பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய் எனவும், பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஈழப்போர் தொடங்கும் என்றும் தமிழர் தேசிய இயக்க நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன் இந்த பரபரப்பு தகவலை தெரிவித்தார். மேலும் அவர் கூறியாதாவது: அத்திக்கடவு அவினாசி திட்ட பிரச்சினையில் பவானி...

5000க்கு மேற்ப்பட்ட ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள திட்டம்!!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும், விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கில ஆகிய 5 ஆயிரத்து 315 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, தேசிய பாடசாலைகளுக்காக அமைச்சு மட்டத்திலும், மாகாணங்களுக்குட்பட்ட பாடாசலைகள் அந்தந்த மாகாணங்கள் ஊடாகவும் நிரப்பபடவுள்ளன. இந்த ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான இறுதிப்படுத்தல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம்...

ராஜித சேனாரட்ன மேலதிக சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார்

சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக இன்று காலை சிங்கப்பூரிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இன்று காலை 9.25 மணியளவில் விஷேட விமானம் ஒன்றில் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் 06 பேர் கூட சென்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார். சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன...

ஒரு வாரத்திற்கு மட்டும் பாணின் விலை குறைப்பு!!

ஒரு இறாத்தல் பாணின் விலையானது நான்கு ரூபாவினால் குறையும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். நுகர்வோர் வாரம் காரணமாகவே பாணின் விலையை குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விலை குறைப்பானது குறிப்பிட்ட ஒரு வாரத்திற்கு...

யாழ்.மாவட்டத்தில் போதைவஸ்து பாவனை அதிகரிப்பு

யாழ். மாவட்­டத்தில் போதை­வஸ்துப் பாவனை அதி­க­ரித்து வரு­கின்­றது. குறிப்­பாக தீவ­கத்தில் அதன் பயன்­பாடு அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது. இதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு விசேட கவனம் செலுத்தி விழிப்பு குழுக்கள் நிய­மித்து செயல்­பட வேண்டும் என யாழ். மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழுவின் தலை­வர்­களில் ஒரு­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை­ சே­னா­தி­ராசா தெரி­வித்தார். வேலணை பிர­தேச செய­ல­கத்தின் ஒருங்­கி­ணைப்புக் குழுவின் கூட்டம்...

முச்சக்கர வண்டி இறக்குமதிகளை வரையறுக்குமாறு கோரிக்கை

முச்சக்கர வண்டி இறக்குமதிகளை வரையறுக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கோரியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முச்சக்கர வண்டி இறக்குமதிகளை அரசாங்கம் வரையறுக்காவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதக விளைவுகள் ஏற்படக் கூடும். பாடசாலைகளிலிருந்து வெளியேறும் இளைஞர்கள் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் துறையை தேர்வு...

ராஜபக்சக்களினால் எனது உயிருக்கு ஆபத்து – சந்திரிகா

தனக்கும், தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ராஜபக்சக்களினால் ஆபத்து இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், சுதந்திரக் கட்சியை விட்டு மஹிந்த ராஜபக்ச பல தடவை வெளியேறியிருந்தார்....
Loading posts...

All posts loaded

No more posts