Ad Widget

வடக்கில் புதிதாக திருமணம் செய்வோருக்கு குழந்தைப் பாக்கியம் குறைவடைகிறது!

வடக்கில் புதிதாக திருமணபந்தத்தில் இணையும் ஐந்து ஜோடிகளுள் நான்கு ஜோடிகளுக்கு குழந்தைப்பாக்கியம் இல்லாமல் போகின்றதாக தென் மாகாண ஆளுநரான கலாநிதி ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணம் இரசாயன உரங்களின் பாவனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வடமத்திய மாகாணத்தில் மட்டுமே காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு என நாடளாவிய ரீதியல் அதிகரித்துள்ளது.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் உலோகம் கலந்த நீர் வயல்வெளிகளுக்குச் செல்வதோடு, குடிநீரிலும் கலக்கப்படுவதே இதற்கான காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழவகைகள் இரசாயன பதார்த்தங்களைக் கொண்டு பதனிடப்பட்டு வருகிறது. வெளியே அழகாக இருக்கும் பழங்கள் உள்ளே மனிதனுக்கு கேடு விளைவிக்கக் கூடிய நச்சுப் பொருட்களையும் கொண்டுள்ளது.

எனவே இவற்றை கொள்வனவு செய்து உண்ணும் போது நாம் பல வித நோய்களால் பீடிக்கப்படுகிறோம்.

அத்துடன் இவ்வாறான பழங்களை உண்ணுவதை தவிர்த்து விட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பழங்களை உண்ணுவதன் மூலம் பாரிய நோய்களிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Related Posts