Ad Widget

அரச முகாமைத்துவ சேவையில் மேலும் 1286 பேர் இணைப்பு!

அரச முகாமைத்துவ இணைந்த சேவைக்கு மேலும் 1286 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கான நியமனக்கடிதத்தினை பொது நிர்வாக முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வழங்கி வைத்தார்.

அரச முகாமைத்துவ சேவையில் அரச துறையின் ஏழு பிரிவுகள் ஒன்றிணைக்கப்பட்டு அதிலுள்ள வெற்றிடங்களுக்கு மேற்படி 1286 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தோடு கடந்த ஒரு வருடத்தில் அரச சேவைக்கு 8519 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் 2674 பேர் அரச முகாமைத்துவ சேவையில் இணைக்கப்பட்டதுடன் நேற்று முன்தினம் (01) வழங்கப்பட்ட நியமனங்களுடன் புதிய தேசிய அரசாங்கத்தின் கீழ் 3960 பேர் அரச முகாமைத்துவ இணைந்த சேவையில் இணைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை புதிய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி வரை அரச சேவையில் பல்வேறு துறைகளுக்கும் மொத்தம் 8519 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வெற்றிடங்களை நிரப்ப போட்டிப்பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts