- Saturday
- August 8th, 2026
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் இலங்கையின் ஆறு பிரதேசங்களில் ஊடுருவியுள்ளனர் என புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைத் தடைசெய்வதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அந்த இயக்கத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களைக் கைதுசெய்வதில் முட்டுக்கட்டைகள் உள்ளன என்று புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்னர்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராம மக்கள் 3 நாட்களாக முன்னெடுத்து வந்த உண்ணாவிரத போராட்டம் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்கள் தங்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனக்கோரி வியாழக்கிழமை (24) முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நேற்று சனிக்கிழமை (26) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற இந்த உண்ணாவிரதத்தை நிறைவு செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி...
யாழ்ப்பாண பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினரால் வெளிவாரிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வணிக முதற்தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக இரண்டாம் தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக மூன்றாம் தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக நான்காம் தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக முதற்தேர்வு 2013 பழைய பாடத்திட்டம் மீள்பரீட்சை, வணிக மாணி...
பருத்தித்துறை, வியாபாரி மூலைப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் படுகாயங்களுக்குள்ளான மூவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். ராஜ் (வயது47), ராஜ் சரோஜினிதேவி (வயது 42), மற்றும் ராஜ் ரஞ்ஜித் (வயது 17) ஆகியோர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த நபர்களின்...
மூளைக்காய்சலினால் பாதிக்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த மாணவன், நேற்று வெள்ளிக்கிழமை (25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இடைக்காடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் தர்சிகன் (வயது 15) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி இரவு தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக அவர் அச்சுவேலி பிரதேச...
வடக்கு மக்களின் மனநிலையில் நல்லாட்சியினை காணமுடியவில்லை அதற்காக நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டும் என பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட பொதுமக்களுக்கான யாழ் விடுமுறை விடுதி திறப்பு நிகழ்வு நேற்று யாழ் குறிகட்டுவான் வீதி அல்லைப்பிட்டி பகுதியில் யாழ் மாவட்ட...
மாதகல் குசுமந்துறைக் கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் வலையில் 17அடி நீளமான புதிய இன மீன் ஒன்று நேற்று அகப்பட்டது. இந்த மீன் இனம் தொடர்பில் சரியாக இனம் காணப்படவில்லை. இருப்பினும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். மாதகல், குசுமந்துறை கடற்பரப்பின் ஊடாகக் கடற்றொழில் புரியும் மீனவர் ஒருவரின்...
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் அண்மைய வரைபடத்தில் இலங்கையும் ஒரு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் தளமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக இன்றைய தேசிய சிங்கள நாளிதழொன்று அறிவித்துள்ளது. சர்வதேச பாதுகாப்பு நிலைமை, மோதல்கள் குறித்து ஆய்வு செய்யும் அமெரிக்க நிறுவனமான “சர்வதேச மோதல் நிலை தொடர்பான ஆய்வு நிலையம்” இறுதியாக மேற்கொண்ட ஆய்வில்...
அரச வங்கிகள் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என உறுதியளிக்கும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் “தயார் நிலை ஏற்பாடாக” (Standby Arrangement) கடன் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அரசு அறிவித்தது. இது தொடர்பாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில் பொது எதிர்கட்சி எனக்கூறிக்கொள்வோர் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் பொய்யான கருத்துக்களை தெரிவித்து மக்களை,...
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான சாட்சியப் பதிவு விசாரணைகள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நேற்று காலை 9 மணிமுதல் இடம்பெற்ற இவ் விசாரணையில் 120 பேர் சாட்சியம் அளித்துடன், காணாமற்போனோர் குறித்து 23 புதிய பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. நான்கு பிரிவுகளாக இந்த விசாரணைகள் இடம்பெற்றன. இன்று...
மட்டுவில் மத்தியைச் சேர்ந்த வைரமுத்து ஞானகௌரி (வயது 41) என்ற ஆசிரியையை, கடந்த 23ஆம் திகதி முதல் காணவில்லையென்று அவருடைய உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். புதன்கிழமை (23) கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர், வீடு திரும்பவில்லை என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்.மாநகர சபைக்குட்பட்ட வீதிச் சந்திகளில் மாநகர சபையால் குவிவு வில்லைகள் பொருத்தும் நடவடிக்கைகள் வியாழக்கிழமை (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார். யாழ்ப்பாண வீதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் வாகன சாரதிகள் அவதானிக்கும் வகையில் இந்தக் குவிவு வில்லைகள் பொருத்தப்படுகின்றன. கே.கே.எஸ் வீதியும் யாழ்ப்பாணம் இந்துக்...
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால், கோட்டக்கல்வி, உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நல்லூர், கோப்பாய், வெலிஓயா ஆகிய கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவை - 3 இலங்கை கல்வி நிர்வாக சேவை - 2 (பொது) ஆளணியைச் சேர்ந்த உத்தியோகத்தர்களிடம் இருந்தும்...
இலங்கையில் 2 இலட்சம் இராணுவம் இருக்கின்ற நிலையில் அதில் 1½ இலட்சம் இராணுவம் வடக்கில் நிலைகொண்டுள்ளது. 20 ஆயிரம் இராணுவம் மட்டக்களப்பிலும், 30 ஆயிரம் இராணுவம் ஏனைய மாகாணங்களிலும் நிலைகொண்டுள்ளனர். வடக்குக்கு 5 ஆயிரம் இராணுவத்தினர் போதும்' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (25)...
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்புகளுக்கு சதி வேலைகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை நிராகரித்து விட முடியாது என ஜேர்மன் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பியகம, கொட்டுகொட பிரதேசங்களின் மின்மாற்றிகள் அண்மையில் வெடித்தன. இதனால் நாடு முழுவதும் சில நாட்கள் நீண்ட நேர மின் தடை ஏற்பட்டது. இந்நிலையில் அந்த மின்மாற்றிகள் எப்படி வெடித்தன என்பது...
"முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் அபகரித்துள்ள பொதுமக்கள் காணிகளை மீளக் கைளித்தல், மீள்குடியேற்றத்தை பூர்த்தி செய்தல் குறித்து எதிர்க்கட்சியத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கபடும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட...
முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸாவினால் ஆரம்பிக்கப்பட்ட 'கம் உதாவ' (கிராம எழுச்சி) நிகழ்ச்சித் திட்டத்தினை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில் சில தேர்தல் தொகுதிகளில் கம் உதாவ நிகழ்ச்சித்திட்டம் மீண்டும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 1980 களில் ஆட்சியிலிருந்த அரசாங்கம் நாட்டின் நாலாபுறமும் வாழும் மக்களை நெருங்கும் பொருட்டு கம் உதாவ நிகழ்ச்சித் திட்டத்தினை...
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. மே மாதம் வரையில் இதே கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் உஷ்ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் கடந்த...
தெற்கு ஊடகவியலாளர்களையும் வடபகுதி ஊடகவியலாளர்களையும் இணைக்கும் நல்லிணக்கப் பயணம் இன்று(26) ஆரம்பமாகிறது. வெகுஜன ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையிலான ஊடகவியலாளர்கள் குழு இன்று யாழ். நகர் நோக்கிப் புறப்படுகிறது. 'பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம்' என்ற தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தப் பயணத்தில் தென்பகுதி ஊடகவியலாளர்களுக்கும்,...
கேரளா கஞ்சா 8 கிலோ பொதியை விற்பனைக்கு கொண்டு வந்தவர் பொலிஸாரை கண்டதும் கஞ்சா பொதியை தூக்கி வீசிவிட்டு தப்பியோடியுள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ். கோப்பாய் இராச வீதி பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த நபரை கைதுசெய்வதற்காக...
Loading posts...
All posts loaded
No more posts
