- Saturday
- November 22nd, 2025
மீள்குடியேற்றத்தின் பின்னரே சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டுமென்று ஒருமித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மீள்குடியேற்றம் மற்றும் பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக்குவது குறித்து மக்களின் கருத்தறியும் கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்...
வடமாகாணத்தின் அரசியல் நிர்வாக கட்டமைப்புக் கொண்ட தளமாக மாங்குளம் மாற்றப்படவேண்டும் எனக் கூறப்பட்ட போதும், அது தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வடமாகாணத்தின் கலாசார தளமாக யாழ்ப்பாணத்தையும்...
முழங்காவிலுக்கும் பூநகரி பிரதேசத்துக்கும் இடையில் இருக்கும் 5 குளங்களையும் பெரிதாக்கி, கடலுக்கு வீணாகச் செல்லும் நீரை அந்தக் குளங்களில் சேகரித்தால் பூநகரி, யாழ்ப்பாணம் ஆகியவற்றின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்....
தடைச்செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி முழங்காவில் கிரிந்திதீவு கடலில், மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கை செய்யப்பட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் முழங்காவில் கடற்படை முகாமையைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பிலான முறைபாடுகளை அனுப்பி வைப்பதற்கான கால அவகாசம், சனிக்கிழமை (20) வரை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கெனவே, 2015 நவம்பர் 30 திகதிக்கு முன்னர் இது தொடர்பிலான முறைபாடுகளையும் ஆலோசனைகளையும் அனுப்பிவைக்குமாறு பொதுமக்களை அமைச்சு கேட்டுக் கொண்டிருந்த போதும், பலரின் வேண்டுகோளின் பிரகாரம் தொடர்ந்தும்...
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமையை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் உயர்நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் சட்டமா அதிபர், ஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் ஆகியோர்...
வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் வியாழனன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உக்குளாங்குளத்தில் தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்ட வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவியின் மரண வீட்டுக்குச் சென்றுவிட்டு சக மாகாண சபை உறுப்பினராகிய எம்.பி.நடராஜாவுடன் மோட்டார்...
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் இந்தாண்டு யாழ் மாவட்டத்தில் 25 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார். வீடமைப்பு அமைச்சராக அமரர் பிரேமதாச இருந்த காலத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னாலைக் கிராமத்தில் 65 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. இந்த வீடுகள்...
மற்றுமொரு கூகுள் பலூனை விண்ணில் செலுத்தவுள்ளதாக, இலங்கை தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் நிறுவனத்தின் வேலைத்திட்ட முகாமையாளர் கவாஸ்கர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுபோன்று மேலும் சில கூகுள் பலூன்களை அந்த நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கூகுள் நிறுவனத்தினால் அதிவேக இணைய வசதியை ஏற்படுத்தும் நோக்கில், முன்னதாக பரிட்சார்த்தமாக செலுத்தப்பட்ட பலூன்...
மாங்குளம் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வான் ஒன்று ஏ-09 வீதி மாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதுண்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த அறுவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட...
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரமலிங்கம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளனர். நேற்றைய தினம் இரவு பரமலிங்கம் தனது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு வீடுசெல்வதற்கு ஆயத்தமான போதே காரில் வந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் கையில்...
யாழ்ப்பாண மாவட்ட கடலோர வான்பரப்பில் கடந்த மூன்று தினங்களாக கிபிர் ரக போர் விமானங்களின் பயணங்களால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. குடா நாட்டு வான்பரப்பில் கடந்த 7 வருடங்களாக கிபிர் ரக போர் விமானங்கள் பறக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக கிபிர் ரக விமானங்கள் பாரிய இரைச்சலுடன் வட்டமிட்டிருக்கின்றமை குடா நாட்டு...
யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஒரு மணிநேர அடையாள போராட்டத்தை இன்று யாழ்.பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுத்தனர். குறித்த அடையாள போராட்டம் நண்பகல் 12மணி தொடக்கம் 1 மணிவரை இடம்பெற்றது. ஓய்வுதிட்டத்தினை மறுபரிசீலனை செய்க, ஓய்வுத்திட்டத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது, சகல பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் பொது காப்புறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மொழிக் கொடுப்பனவு மீள வழங்கல், சொத்துக் கடன்...
வடக்கில் சர்வதேச விமான நிலையம் அமைக்க விரும்பினால், பூநகரிக்கும் முழங்காவிலுக்கும் இடையிலுள்ள பகுதியில் அமைக்க முடியும். சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான விசாலமான காணிகள் இந்தப் பிரதேசத்திலுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து...
மாகாண ஆரோக்கிய விழா கண்காட்சியில் இயற்கை முறையில் கிருமிநாசினியை எவ்வாறு உருவாக்குதல் என்பதனை தெளிவுபடுத்த எவரும் இல்லாமையால் விருந்தினர் கோபமடைந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. வட மாகாண சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மாகாண ஆரோக்கிய விழா கண்காட்சி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...
வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குமாறு கோரி, முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்கள் தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக, வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளை இது தொடர்பில் முறைப்பாட்டை முன்வைக்கவுள்ளதாக, அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்மிக முணசிங்க குறிப்பிட்டுள்ளார். சுமார் 32,000 பேர் வரையான வேலையில்லா பட்டதாரிகள் தமக்கு...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, அனுமதிப்பதா என்பது தொடர்பிலான தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாப்பு அரசியலமைப்பு வரையறைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரியே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எச்.கே.டி சந்திரசோம என்பவராலேயே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....
கூகுள் பலூன் பழுதடைந்து விழவில்லை என கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பலூன், சோதனை நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கூகுள் நிறுவனம் இலங்கையில் வை-பை இணைய சேவையை வழங்குவதற்காக இலங்கைக்கு மேல் இணைய சேவையை...
கடந்த காலத்தில் தாம் செய்த குற்றங்களை மறைக்கவே இன்று கட்சியை விட்டு வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வீழ்த்துவோம் என அச்சுறுத்துகின்றனர். எம்மை அச்சுறுத்தி தம்மை காப்பாற்ற டீல் போடுகின்றனர். எனினும் இந்த அச்சுறுத்தல்களை கண்டு நாம் அஞ்சப்போவதில்லை. தனித்து போக விரும்புவோர் கட்சியை விட்டு வெளியேற அனுமதி உண்டு. ஆனால் ஊழல் மோசடிகள் மற்றும்...
இந்தியாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்தின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வௌியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார். பலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க வேண்டும்...
Loading posts...
All posts loaded
No more posts
