Ad Widget

சித்திரைப் புத்தாண்டுக்கு ஒரு தொகுதி காணி விடுவிக்கப்படும்!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு தொகுதி நிலப்பரப்பு எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை ஒட்டி உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2015 இல் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு தொகுதி காணிகள் உரியவர்களிடம் வழங்கப்பட்டது. பின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிகாம மக்கள் குடியிருந்த முகாமுக்குப் பயணம் செய்து அம்மக்களிடம் ஆறு மாதத்துக்குள் நீங்கள் அனைவரும் குடியேற்றப்படுவீர்கள் என வாக்குறுதி வழங்கினார்.

2015ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் 701.5 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டது. இதன்பின்னர் எந்தவொரு நிலமும் விடப்படவில்லை. இந்நிலையில் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியை அண்மித்த பகுதிகளான காங்கேசன்துறை, குரும்பசிட்டி, கட்டுவன் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய 280ஏக்கர் நிலப்பகுதியை ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் இக்காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts