- Tuesday
- May 13th, 2025

அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ‘2016 தீர்வு உங்களின் வாக்குறுதி நிறைவேறுமா?’ என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதன்போது அவர் பதிலளிக்கையில், தீர்வுத் திட்டம் கிடைக்கும் என்ற எனது கணிப்பை குழப்பும் விதத்தில் ஊடகங்கள் செயற்படுகின்றன எனத் தெரிவித்தார்....

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பரவிபாஞ்சான் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்வதற்கு வழியைத் திறந்துவிட்ட இராணுவ சிப்பாய்க்கு இராணுவ கேணல் அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சிக்கு கடந்த 16 ஆம் திகதி பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம், மீள்குடியேற்றத்திற்கு இன்னும் அனுமதிக்கப்படாத பரவிபாஞ்சான் கிராம மக்கள் சிலர், தங்களின் காணிகள் உயர் பாதுகாப்பு...

வவுனியா சாந்தசோலை கிராமத்தில் ஒருவர் 95 வயதான தனது பெற்ற தாயை 5 வருடங்களாக கூண்டில் அடைத்து வைத்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது. அதனையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார், தாயை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதேவேளை, குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, தாயை கொடுமைப்படுத்தவில்லை...

இந்திய மாணவரின் வலைத்தள பதிவு உரிமையை விலை கொடுத்து வாங்கியுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க். கேரளாவை சேர்ந்த பொறியியல் மாணவர், அமல் அகஸ்டின், இவர் வலைத்தள முகவரிகளை தனது பெயரில் பதிவு செய்து கொள்ளும் பொழுதுபோக்கு உடையவர். maxchanzuckerberg.org என்ற வலைத்தள முகவரியை தனது பெயரில் பதிவு செய்து வைத்திருந்தார் அகஸ்டின். இந்நிலையில், வலைத்தள...

கடவுள்களை வைத்து பிழைப்பு நடாத்தும் செயல் நாளுக்கு நாள் குடாநாட்டில் அதிகரித்து வருகின்றது. இந் நிலையில் இலங்கையில் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் கோவிலில் கோடிக்கணக்கான நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் இது யாழ் அரச அதிபரின் முதல்கட்ட விசாரணையில் உறுதியாகியமையால் அங்கு கூட்டங்கள் நடத்த அரசாங்க அதிபர் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதோடு, இவ் ஆலயம் அரசாங்க கோவில்...

இம் முறை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இடம்பெறும் விளையாட்டுப் போட்டிகளில் யானை சவாரி மற்றும் மாட்டு வண்டி சவாரிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மிருகங்களை வதைக்கும் ஒரு விளையாட்டாக இதைக் கருதுவதால் இதனை தடை செய்யக்கோரி பொலிஸ் நிலையங்களில் சுற்றரிக்கை வெளியிடப்பட்டமைக்கு அமைவாக குறித்த விளையாட்டினை தடை செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தடையினை...

பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, பெண்ணொருவரை திருமணம் புரிவதாகக் கூறி ஏமாற்றி, அவரிடமிருந்து 4 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளையும், பணத்தையும் அபகரித்த பொறியியலாளர் ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய வவுனியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன், 2012 ஆம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகமாகிய குறித்த...

தற்பொழுது வடக்கு மாகாணத்தில் கடும் வெப்பமான காலநிலை நிலவி வருகின்றபோதிலும் வற்றாப்பளை அம்மன் கோவிலின் நுழைவு வாசலில் இருக்கும் கிணற்றில் நிலமட்டத்திற்கு மேல் இரண்டு அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குழாயால் நீர் வெளியேறிய வண்ணமே உள்ளது. இது பற்றி வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவிலின் நிர்வாகசபைத் தலைவர் ம.விக்கி தெரிவிக்கையில் இக்கிணற்றுக்கு அண்மையில் எந்தவொரு நீர்நிலைகளும்...

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் தனியார் பஸ்களுடன் போட்டிபோட்டு ஓடுவதற்கு யாழ்ப்பாணச் சாலை முகாமையாளரே காரணம். தனியார் பஸ்ஸை முந்திச் செல்லாவிட்டால் சாரதி மற்றும் நடத்துநருக்கு எதிராக தண்டப்பணத்தை யாழ்.சாலை முகாமையாளர் அறவிடுகின்றார் என ஸ்ரீங்கா சுதந்திர போக்குவரத்துச் ஊழியர் சங்கம், தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம்...

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் மைத்துனனைக் குத்திக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ள மேல் நீதிமன்றம், எதிரியின் சார்பில் முன்வைக்கப்பட்ட கருணை மனுவின் அடிப்படையில் அதனை ஆயுட்காலச் சிறைத் தண்டனையாக மாற்றும்படி ஜனாதிபதிக்குப் பரிந்துரைத்திருக்கின்றது. இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடைபெற்றுள்ளது....

விடுமுறைக்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக அதிபரின் அறைக்கு சென்ற ஆசிரியையைத் தும்புத்தடியால் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட களுத்துறை மஹாநாம வித்தியாலயத்தின் அதிபர் யமுனா நயனா காந்தி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர், களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்வதற்கு, நீதவான் சந்திம...

எல்ல வெல்லவாய கரந்தகொல்ல பிரதேசத்திலுள்ள இராவண எல்ல கற்குகை ஒன்றினுள் சுயநினைவிழந்து காணப்படுவதாகக் கூறப்படும் இராவணனை நினைவு திரும்பச் செய்வதாகத் தெரிவித்து மொறட்டுவ பிரதேசத்திலுள்ள மந்திரவாதி பெண்ணொருவர் உட்பட 18 பேர் நேற்றுமுன்தினம் அக்குகையினுள் சென்றிருந்த போது தாக்குதலுக்கு உள்ளாகினர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினத்தன்று இக்குகையினுள் வழமைக்கு மாறாக ஏதாவது ஒரு...

இலங்கையில் ஊடகப் பணியின்போது மரணித்த 44 ஊடகவியலாளர்களை நினைவு கூரும் முகமாக யாழ். பிரதான வீதியில் – யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அண்மையாக நினைவுத் தூபியொன்று நேற்று (27) திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு – தெற்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் உறவினைக் கட்டி எழுப்பும் முகமாக மூன்று நாள் பயணமாக குடாநாடு வருகைதந்த அமைச்சர் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார். அந்த...

சாவகச்சேரி டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் உரிமையாளர் சுவிஸில் வசித்து வருகின்றார். இவர் 2012ஆம் ஆண்டு தனது சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்தார். அப்போது அவரின் வீட்டிற்கு முன்னால் வேப்பமரம் ஒன்று நின்றுள்ளது. அவர் மீண்டும் சுவிஸிற்குச் செல்லும்போது வீட்டில் தனது உறவினர் முறையான ஒரு குடும்பத்தினை வாடகைக்கு குடியமர்த்திவிட்டுச் சென்றுள்ளார். சில தினங்களுக்கு முன்பு...

தாய்லாந்தில் கை, கால் உடைந்து, தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்த வேளையில் பெண் ஒருவர், தன் 6 மாத மகனுக்கு தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. தாய்ப்பாசத்தை மிஞ்சிய விசயம் ஏதும் உலகத்தில் இல்லை. அதனை உறுதி செய்வது போல், தாய்லாந்து மருத்துவமனை ஒன்றில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது....

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள வீதி பார்வை (Street View) இனைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கிய பொலிசாரை பொதுமக்கள் கண்டுபிடித்துள்ள சுவாரசியமொன்று நடைபெற்றுள்ளது. குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இலங்கையில் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள Street View வசதியைப் பயன்படுத்தி பன்னல பிரதேச பொதுமக்கள் தங்கள் பிரதேசத்தைப் பார்வையிட்டுள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவரிடம்...

கிளிநொச்சி பன்னங்கண்டி பாடசாலையின் அதிபர் தனது பாடசாலையில் கல்வி பயிலும் தரம் ஒன்பது மாணவியுடன் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்து கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை பாடசாலைக்கு சென்ற அதிபர் குறித்த மாணவியின் மூத்த சகோதரியை பாடசாலைக்கு வருமாறு அவர் பொறுப்பாக இருந்து நடத்துகின்ற தொண்டு நிறுவனம் ஒன்றின் மாலை...

நீர்வேலி மற்றும் கோப்பாய் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக திருடர்களின் தொல்லை அதிகாரித்துள்ளது. இந் நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை வெடி கொழுத்தி திருடர்களை துரத்திய சம்பவம் கோப்பாயில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது நேற்றுமுன்தினம் அதிகாலை 1 மணியளவில் கோப்பாய் வடக்கில் திருடர்களின் நடமாட்டத்தால் நாய்கள் குரைத்ததால் விழிப்படைந்த மக்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்து ஏனையோரையும்...

சாவகச்சேரி நகர் பகுதியில் அழகுசாதனப் பொருள் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் இளைஞரொருவர் இருவேறு பாடசாலைகளில் கல்வி கற்கும் 2 மாணவிகளை காதலித்ததன் விளைவாக அவர்கள் இருவரும் தற்கொலைக்கு முயற்சித்து ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவத்தை அறிந்த குறித்த இளைஞன் உடனடியாகவே சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்...

மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்ட 18வயதுடைய இளம்பெண் ஒருவர் மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று சித்தங்கேணி பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, தனியார் வகுப்பு முடிந்து வீடு திரும்புவற்காக சித்தங்கேணி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த வேளை மோட்டார் சைக்கிளில் முகம் புலப்படாதவாறு தலைக்கவசத்தை முழுமையாக அணிந்து...

All posts loaded
No more posts