Ad Widget

சம்பந்தனை அனுமதித்த இராணுவச் சிப்பாயின் கன்னத்தில் அறைந்த கேணல்!

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பரவிபாஞ்சான் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்வதற்கு வழியைத் திறந்துவிட்ட இராணுவ சிப்பாய்க்கு இராணுவ கேணல் அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிளிநொச்சிக்கு கடந்த 16 ஆம் திகதி பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம், மீள்குடியேற்றத்திற்கு இன்னும் அனுமதிக்கப்படாத பரவிபாஞ்சான் கிராம மக்கள் சிலர், தங்களின் காணிகள் உயர் பாதுகாப்பு பிரதேசமாக காணப்படுகிறது என முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர், பரவிபாஞ்சான் உயர் பாதுகாப்பு பிரதேசத்தை பார்வையிடச் சென்றுள்ளார். இதன்போது, வீதி தடைப்போடப்பட்டிருந்த பாதையில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர், வீதித் தடையை அகற்றி உள்ளே செல்ல வழிவிட்டுள்ளார்.

திடீரென எதிர்கட்சி தலைவரின் வாகன தொடரணி சென்ற போது செய்வதறியாத இராணுவ சிப்பாய், தனது மேலதிகாரிகளின் அனுமதி இன்றி உள்ளே செல்ல அனுமதித்துள்ளார். இதனால் கோபமடைந்த குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ கேணல் நிலை அதிகாரி இராணுவச் சிப்பாயின் கன்னத்தில் அறைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. யாருடைய அனுமதியை பெற்று அவர்களை உள்ளே அனுமதித்தாய் என்று வினவியவாறே தாக்கியதாக கூறப்படுகிறது.

Related Posts