- Tuesday
- May 13th, 2025

இன்று காலை கல்முனை நோக்கி புறப்பட்ட அரச பேருந்தும், தனியார் பேருந்தும் நிறைவான பயணிகள் இருந்தும் A9 சாலையில் ஒன்றை ஒன்று போட்டி போட்டு வேகமாக ஓடி கொண்டிருந்ததால் , பயணி ஒருவர் கொடிகாம்ம் பொலிஸ்க்கு தெலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததை அடுத்து கொடிகாம சந்தியில் வைத்து பொஸிஸ் இனால் இரு சாரதிகளுக்கும் எச்சரிக்கப்பட்டு ,...

புத்தர் சிலை இருந்த இடத்தில், திடீரென அந்த சிலையை தூக்கிவிட்டு அந்த இடத்தில் நாகத்தின் சிலையை வைத்த சம்பவம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது. இலங்கை மத்திய கலாசார நிதியம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுப் பிரிவு ஆகியன இணைந்து கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரிவின் தொடக்க விழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்...

யாழ்.மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக் கொண்ட மர்ம ஆசாமி, மேற்படி தனியார் வங்கியுடன் எவ்விதமான தொடர்பும் இல்லாதவர் என குறித்த தனியார் வங்கி கூறியுள்ளது. மேற்படிச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாவட்டத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்று...

யாழ்ப்பாணம் நகரை அண்டிய பிரபல தேசிய பாடசாலையொன்றில் உயர்தரம் படிக்கும் மாணவர்கள் சிலர், 11ஆம் தரத்தில் படிக்கும் மாணவர்கள் இருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரம் 11 மாணவர்களிடம் உயர்தர மாணவர்கள் கப்பமாக பணம் தருமாறு கோரியதாகவும், அதனை அவர்கள் கொடுக்க மறுத்தமையால், தரம் 11 மாணவர்களின்...

இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பேரூந்து சாரதி ஒருவர் குறித்த பேரூந்தில் பயணித்த மாணவிகளை தகாத வார்த்தையினால் திட்டியதுடன், மாணவி ஒருவரை தாக்க முற்பட்டதாக தெரியவருகின்றது. வவுனியாவில் இருந்து நேற்று புதன் கிழமை மதியம் 1.30 மணியளவில் மன்னார் நேக்கி பயணித்த குறித்த பேரூந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. குறித்த மாணவி தனது பயணத்தை...

புதிதாக பதவிஏற்றுள்ள யாழ் கட்டளைத்தளபதி ஏற்பாட்டில் மகா சிவராத்திரிக்காக கோயில் துப்பரவு செயற்பாடுகளும் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கும் பணியும் இடம்பெற்றுள்ளது. யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக, தமது படை வீரர்களைக் கொண்டு குடாநாட்டில் உள்ள முக்கிய ஆலயங்கள், உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றை புனிதமாக்கும் பணிகளில் ஈடுபட வைத்துள்ளார்....

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை, டொயோட்டா ஷொ ரூம் பின்புறமுள்ள உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி ராஜேந்திரன் என்பவர் , முகாமிற்குள் சோதனையிட்டபோது முகாமில் இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த இலங்கை தமிழர் ரவி என்பவரின் பெயரை அகதி முகாம் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார். மருத்துவமனையில் பேரனை சிகிச்சைக்கு...

யாழில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் மோடார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் காலை வேலைக்கு செல்வதற்காக அராலி வடக்கில் பஸ்சிற்கு காத்திருந்து விட்டு, வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் கையடக்க தொலைபேசியில் மோட்டார் சைக்கிளில் கதைத்துக் கொண்டு வந்த இளைஞன் ஒருவன் குறித்த நபரை மோதிவிட்டு சென்றுள்ளான்....

தண்ணீர் போத்தலில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் சுன்னாகம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோண்டாவிலைச் சேர்ந்த இளைஞரொருவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாருக்கு அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 19 லீற்றர் நீர் கொள்ளளவுடைய குடிநீர்ப் போத்தலை சுன்னாகம் நகரிலுள்ள மருந்தகமொன்றில் கொள்வனவு செய்திருந்தார். இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட குடிநீர்ப் போத்தலிற்குள் இறந்த கரப்பான் பூச்சி...

திருமணம் செய்வதாகக் கூறி காதலித்து யுவதி ஒருவரை ஏமாற்றிய இளைஞருக்கு 2 வருடங்களுக்கு ஒத்திவைத்த 7 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்ததுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிட்டார் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன். கடந்த 2015 ஆம் ஆண்டு தென்மராட்சி வரணி, இடைக்குறிச்சியை சேர்ந்த...

கோண்டாவிலைச் சேர்ந்த இளைஞரொருவர் சுகவீனமுற்றிருந்த தனது தாயாருக்கு 19 லீற்றர் நீர் கொள்ளளவுடைய தண்ணீர்ப் போத்தலைக் கொள்வனவு செய்துள்ள நிலையில் அப் போத்தலிற்குள் இறந்த நிலையில் கரப்பான் பூச்சியொன்று காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து கோண்டாவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து குறித்த தண்ணீர்ப் போத்தல் கோண்டாவில் சுகாதார வைத்திய...

காணாமற்போனோர் தொடர்பான மரணச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டு, அதன் மூலம் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும்' என காணாமல்போனோரின் உறவினர்களிடம், காணாமற்போனரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், சாவகச்சேரி அமர்வில் கலந்துகொண்ட காணாமற்போன உறவினர்களிடமே, ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவ்வதிகாரிகள், 'நீங்கள் விரும்பினால் மரணச் சான்றிதழ் எடுக்கலாம்....

யாழ் நகரப் பகுதியில் இளைஞனுக்கும் பொலிசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது அத்துடன் பொது இடத்தில் குறித்த இளைஞன் பொலிசாரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன் வீதியால் சென்ற பலர் பார்வையிட்டுள்ளதுடன் பின்னர் குறித்த இளைஞரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்…

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால், அதனை ஏற்க மறுத்த பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நல்லூர் பகுதியில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் தரம் 11 ல் கல்வி கற்கும் நல்லூரைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். நேற்று மாலையில் வீட்டில் யாரும் அற்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை...

திருநெல்வேலி கெற்றப்போல் சந்தி பகுதியில் ஆசிரியையின் சங்கிலியை திருட முற்பட்ட மாணவனுடன் போராடிய ஆசிரியை தனது சங்கிலியை மீட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றதுடன், இந்த போராட்டத்தில் குறித்த ஆசிரியை காயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியர் ஒருவர் நேற்று காலை 7.45 மணியளவில் பாடசாலைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிலையில், சீருடை...

குருநாகல் மாவட்டத்தில், நோய் காரணமாக உயிரிழந்த தந்தை ஒருவருக்கு எச்ஐவி இருந்ததாக பரவிய வதந்தி காரணமாக, அவரது 6 வயது மகனுக்கு அந்தப் பிரதேசத்தில் உள்ள பல பள்ளிக்கூடங்கள் அனுமதி மறுத்துள்ளன. பிரதேசத்து கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று அந்த சிறுவனின் தாய் கூறினார். இந்த நிலையில், தேசிய மனித உரிமைகள்...

மாகாண ஆரோக்கிய விழா கண்காட்சியில் இயற்கை முறையில் கிருமிநாசினியை எவ்வாறு உருவாக்குதல் என்பதனை தெளிவுபடுத்த எவரும் இல்லாமையால் விருந்தினர் கோபமடைந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. வட மாகாண சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மாகாண ஆரோக்கிய விழா கண்காட்சி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

தாய்லாந்தில் இடம்பெறவுள்ள 100 கிலோ மீற்றர் அஞ்சல் மரதன் ஓட்டத்தில் பங்கேற்க செல்லும் வீரருக்கு வட மாகாண விளையாட்டுத்துறை அமைச்சு எவ்வித உதவிகளையும் செய்யாத நிலையில் சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ள சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த குமார் நவநீதன் என்ற வீரர் எதிர்வரும் 20ம் திகதி தாய்லாந்தில் இடம்பெறவுள்ள தாய்லாந்து பாங்கொக்...

அர்ஜென்டினா நாட்டில் உள்ள கேம்போடிம் லா பிரிபேரா மாகா ணத்தில் உள்ள கார்டோபாவில் உள்ளூர் அணிகள் மோதிய கால்பந்து போட்டி நடந்தது. போட்டியின் போது ஒரு வீரர் எதிர் அணி வீரரரிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டார். இதனால் அந்த வீரருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி மைதானத்தை விட்டு வெளியேற்றினார். ஆத்திரம் அடைந்த அந்த...

வயோதிப தாய் ஒருவரை நிர்வாணமாக அடைத்து வைத்திருந்த பெண் ஒருவரை கண்டி உடதும்பறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். உடதும்பறை, உடதென்ன பகுதியில், 87 வயதுடைய வயோதிப பெண்ணை அவருடைய மகளான 51 வயதுடைய பெண், உணவு கொடுகாமல் நிர்வாணமாக சிறிய ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்துள்ளார். உடதும்பறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்தே பொலிஸார்...

All posts loaded
No more posts