Ad Widget

ஊடகவியலாளர்கள் நினைவாக யாழில் நினைவுத் தூபி!சிங்களத்தில் மட்டும் வாசகம்!

இலங்கையில் ஊடகப்  பணியின்போது மரணித்த 44  ஊடகவியலாளர்களை நினைவு கூரும் முகமாக யாழ். பிரதான வீதியில் –  யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அண்மையாக  நினைவுத்  தூபியொன்று   நேற்று (27)  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு – தெற்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் உறவினைக் கட்டி எழுப்பும் முகமாக மூன்று நாள் பயணமாக குடாநாடு வருகைதந்த அமைச்சர் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார்.

அந்த வகையில் குறித்த நினைவுத் தூபியை  ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இணைந்து திறந்து வைத்தனர். இதன் போது வடக்குத் தெற்கு ஊடகவியலாளர்கள் ஊடக உரிமையைப் பாதுகாப்போம், ஊடக ஒற்றுமை ஓங்குக …! போன்ற கோஷங்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து நினைவுத் தூபிக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதன் பின்னர் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக , பிரதி ஊடக அமைச்சர், வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் ஊடக நிறுவனங்களின்  முக்கியஸ்தர்கள், வடக்கு-தெற்கு ஊடகவியலாளர்கள் ஆகியோர் குறித்த நினைவுத் தூபியில் தங்களது பெயர்களைக் கையெழுத்தாகப் பொறித்தனர்.

 

இந்த துாபியில் “வாருங்கள் ஒன்றா சுவாசிப்போம்” என சிங்களத்தில் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இந்த நிகழ்வை யாழ் ஊடக மையம் ஏற்பாடு செய்திரந்தமை குறிப்பிடத்தக்கது

index1

indexl

Related Posts