- Tuesday
- January 13th, 2026
குருநாகல் மாவட்டத்தில், நோய் காரணமாக உயிரிழந்த தந்தை ஒருவருக்கு எச்ஐவி இருந்ததாக பரவிய வதந்தி காரணமாக, அவரது 6 வயது மகனுக்கு அந்தப் பிரதேசத்தில் உள்ள பல பள்ளிக்கூடங்கள் அனுமதி மறுத்துள்ளன. பிரதேசத்து கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று அந்த சிறுவனின் தாய் கூறினார். இந்த நிலையில், தேசிய மனித உரிமைகள்...
மாகாண ஆரோக்கிய விழா கண்காட்சியில் இயற்கை முறையில் கிருமிநாசினியை எவ்வாறு உருவாக்குதல் என்பதனை தெளிவுபடுத்த எவரும் இல்லாமையால் விருந்தினர் கோபமடைந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. வட மாகாண சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மாகாண ஆரோக்கிய விழா கண்காட்சி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...
தாய்லாந்தில் இடம்பெறவுள்ள 100 கிலோ மீற்றர் அஞ்சல் மரதன் ஓட்டத்தில் பங்கேற்க செல்லும் வீரருக்கு வட மாகாண விளையாட்டுத்துறை அமைச்சு எவ்வித உதவிகளையும் செய்யாத நிலையில் சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ள சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த குமார் நவநீதன் என்ற வீரர் எதிர்வரும் 20ம் திகதி தாய்லாந்தில் இடம்பெறவுள்ள தாய்லாந்து பாங்கொக்...
அர்ஜென்டினா நாட்டில் உள்ள கேம்போடிம் லா பிரிபேரா மாகா ணத்தில் உள்ள கார்டோபாவில் உள்ளூர் அணிகள் மோதிய கால்பந்து போட்டி நடந்தது. போட்டியின் போது ஒரு வீரர் எதிர் அணி வீரரரிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டார். இதனால் அந்த வீரருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி மைதானத்தை விட்டு வெளியேற்றினார். ஆத்திரம் அடைந்த அந்த...
வயோதிப தாய் ஒருவரை நிர்வாணமாக அடைத்து வைத்திருந்த பெண் ஒருவரை கண்டி உடதும்பறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். உடதும்பறை, உடதென்ன பகுதியில், 87 வயதுடைய வயோதிப பெண்ணை அவருடைய மகளான 51 வயதுடைய பெண், உணவு கொடுகாமல் நிர்வாணமாக சிறிய ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்துள்ளார். உடதும்பறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்தே பொலிஸார்...
இலங்கையில் 21 வயதிற்குட்பட்ட 9400 யுவதிகள் காதலர் தினத்தில் கன்னித் தன்மையை இழக்கின்றனர். அத்துடன் அத்தினத்தில் 4500 ரூபாவுக்குட்பட்ட அறைகளில் 80 சதவீதம் காதல் ஜோடிகளுக்காக முன்பதிவு செய்துகொள்ளப்படுவதாகவும் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. ‘ஸ்கொட்டிஷோர்பிட்’ நிறுவனம் காதலர் தினப்பரிசுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், கருக்கலைப்பு நிலையம் மற்றும் வைத்திய நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்திய...
யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி விரிவுரை மண்டபங்களில் “ரொமான்ஸ் பண்ணாதீர்கள்” என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மாணவ ஜோடிகள் விரிவுரை மண்டபத்திற்குள் ஜோடியாக இருத்தல் மற்றும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருத்தல் மற்றும் முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு...
ஜோதிடத்தை நம்பி ஆட்சியை இழந்த மகிந்த ராஜபக்ச மீண்டும் பதவியேற பல்வேறு பகீரத பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றார் என அடிக்கடி புகைப்பட ஆதாரங்களோடு செய்திகள் வௌவந்து கொண்டிருக்கின்றன. இதன் பொருட்டு இழந்து போன தனது அதிகாரத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக தலைகீழாய் தவமிருப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் முன்னர் வெளியாகியிருந்தன. இந்நிலையில்,...
இலங்கை முழுவதும் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் செயற்படுவதாக, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். நாடளாவிய ரீதியில் மோசடியில் ஈடுபட்டுள்ள போலி வைத்தியர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டும் நடவடிக்கையின் போதே மேற்படி தகவல்கள் பெறப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைப்பாடு தொடர்பாக...
பேஸ்புக் மூலம் தோழிகளான பெண்கள் 2500 பேர் சேர்ந்து மிகப்பெரிய போர்வையை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளனர். இந்த போர்வையின் அளவானது கிட்டத்தட்ட அமெரிக்காவின் 2 கால்பந்து மைதானங்களுக்குச் சமமாகும். இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் சுமார் 1000 பேர் இணைந்து உருவாக்கிய போர்வையே உலக சாதனையாகக் கருதப்பட்டு வந்தது. தற்போது அந்தச் சாதனையை இந்தியப் பெண்கள்...
விபத்துக்குள்ளான இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்வதற்காகவே தான் கடிதம் கோரியதாக ஊர்காவற்றுறை “பி” பிரிவு ஆதார வைத்தியசாலை வைத்தியர், ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னிலையில் தெரிவித்தார். ஊர்காவற்றுறை சந்தைக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை (08), மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றார். விபத்தின்...
இல்ல மெய்வன்மை போட்டியில் பங்குபற்றிய போது, மயங்கி வீழ்ந்து, உயிரிழந்த மாணவி, சளிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தமையாலேயே மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது. அம்பன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சனிக்கிழமை(06) இடம்பெற்ற இச்சம்பவத்தில், யோகலிங்கம் அனோஜா (வயது 13) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். இவர் முதலில் அணி நடையில் ஈடுபட்ட பின்னர், தொடர்ந்து...
விபத்துக்கு உள்ளானவர் கடிதம் எழுதி தந்த பின்னரே சிகிச்சை அளிப்பேன் என ஊர்காவற்துறை பி.தர ஆதார வைத்திய சாலை வைத்தியர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது , ஊர்காவற்துறை சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்கு உள்ளாகி இருந்தது. அதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் , துவிச்சக்கர...
பத்திரிகைகளில் வெளிவரும் மணமகன் தேவை என்ற பகுதியூடாக நாட்டின் பல பிரதேசங்களிலும் பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர்களின் தங்க நகைகளை கொள்ளையடித்து வந்த நபர் ஒருவரை களுத்துறை தெற்குப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை குறித்த நபர் 2 கிராம்,80 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே பொலிஸார் கைது செய்திருந்ததாக.தெரிவித்துள்ளனர். ஆனால் பொலிஸார் குறித்த சந்தேக...
யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப்பகுதியில் உள்ள யுவதியொருவரின் வீட்டுக்குச் சென்று வெள்ளை வானில் கடத்துவோம் என்று அச்சுறுத்தல் விடுத்த மூவரை, நேற்று புதன்கிழமை (27) காலை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கைதான மூவரும், 28, 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவித்த பொலிஸார், இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனக்...
யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னால் ஒரு பௌத்த கோயில் வேண்டும் என கோரி துண்டுப்பிரசுரங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன. இது யாழ்.பல்கலைக்கழக பௌத்த மாணவர்கள் ஒன்றியத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தில் நிலவும் வறுமையால் இறந்தவரின் சடலம் இரு நாட்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலேயே காத்திருக்க வேண்டியிருந்தது எனக் கூறப்படுகின்றது. முல்லைத்தீவு - மல்லாவி - பாலையடியைச் சேர்ந்தவரின் சடலமே வீட்டின் வறுமையால் இவ்வாறு வைத்தியசாலையிலேயே காத்துக்கிடந்தது. காய்ச்சல் மற்றும் நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 18 ஆம் திகதி சிகிச்சைக்காக மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்....
இங்கிலாந்தில் மாணவன் ஒருவன் ஆங்கில பாடத்தில் தவறாக எழுதிய ஒரு வார்த்தையால் பொலிசார் அம்மாணவனின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டுள்ளனர். இங்கிலாந்தின் Lancashire என்ற இடத்தில் உள்ள பள்ளியில் பயின்று வந்த 10 வயது மணவன், தனது ஆங்கில பாடத்தில் நான் மாடி வீட்டின் வசிக்கிறேன்(Terrace house) என்று எழுவதுதற்கு பதிலாக நான் தீவிரவாத வீட்டில் வசிக்கிறேன்...
தெல்லிப்பளை – அளவெட்டி வீட்டுத்திட்ட உதவியின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் உரியவர்கள் கடந்த பல வருடங்களாக மீள்க்குடியேறாமையால் அயலில் உள்ள கலவன் பாடசாலையும், அந்தப் பகுதியில் உள்ள பொது மக்களும் பலத்த சிரமங்களுக்கு உள்ளாகி வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அளவெட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள அளவெட்டி அருணோதயாக்...
அழகான பெண்போல பாவனை செய்து, இளைஞனொருவனைத் தன் வலைக்குள் வீழ்த்தி, அவரிடமிருந்து இலட்சக்கணக்கான பணத்தை கறந்தவர் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைத்தளங்களின் ஊடாக அச்சுறுத்தி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் குழுவொன்று ஈடுபடுவதாக நீதவானின்...
Loading posts...
All posts loaded
No more posts
